கலாநிதி M.A.M சுக்ரீ “சமூகத்தின் இழப்பு” – இஸ்திஹார் இமாமுதீன்

ஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரீ அவர்கள் இன்று காலை வபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியின்.

எமது அறிவுத் தந்தை நளீம் ஹாஜியாரோடு இணைந்து நளீயாவை ஸ்தாபிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் சர்வதேச அந்தஸ்துக்கு அதனை உயர்த்துவதிலும் இலங்கையில் நடுநிலை சிந்தனையை அறிமுகப் படுத்துவதிலும் பெரும் பங்களிப்புச் செய்த கல்விமான் அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்கள்…

அவர்களது ஆற்றொழுக்கான உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன. அன்னாரது சிந்தனையின் ஆழத்தை அவர்கள் கையாண்ட சொற்களூடாகக் கூட தெளிவாக புரியமுடியும். 1978 அக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையில் அவர்கள் எழுதி வந்த ஆக்கங்கள் அவர்களது சிந்தனையின் வீச்சுக்கான சிறந்த சான்றுகள். அவரது வபாத் செய்தி எங்களுக்கு மிகவும் கவலை தருகிறது. ஆனால் அல்லாஹ்வுடைய நாட்டத்தை ஏற்றுக்கொள்வோம்.

அவருக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவருக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான நன்றிக்கடன் அவர் இந்த நாட்டில் காண விரும்பிய சிந்தனை மாற்றத்தை அல்லது ஏற்படுத்த விரும்பிய சிந்தனை பாரம்பரியத்தை இந்த நாட்டில் முன்னெடுத்துச் செல்ல உழைப்பதாகும்.

அல்லாஹுத்தஆலா அன்னாருடைய நற்பணிகளை ஏற்று பாவங்களை மன்னித்து உயர்ந்த அந்தஸ்துகளை மறுமையில் வழங்குவானாக! Ameen

Check Also

75வருட பூர்த்தியினை காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் பாடசாலை

பவள விழா காணும் அக்குறனை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயம் ஒரு பார்வை கண்டி மாவட்டத்தில் கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தில் …

Free Visitor Counters Flag Counter