ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஷஹ்ரான் அல்ல; ஹக்கீம்

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஷஹ்ரான்  ஹாஷிம் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் நேரடியாக தொடர்புபடுத்தப்படவில்லை என்றும், 2019 ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னால் உண்மையான சூத்திரதாரி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த விரும்பிய முற்றிலும் மாறுபட்ட சக்தியாகும் என முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் – ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தில் நேற்று (07) சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். 

அவர்களின் இறுதி இலக்கு அடையப்பட்டது, அது நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதாகும். 

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பேனர் வெறுமனே பெயருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது சஹ்ரான் மற்றும் அவரது குழுவினரும் இந்த சக்தியின் தாக்குதல்களை நடத்த சிப்பாய்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது நடக்க வேண்டும் என்று இருந்தது ,அது மீண்டும் நடக்காது என  ஹக்கீம் மேலும் கூறினார். 

இந்த அறிக்கையின் பின்னர், கமிஷனர்கள் ஹக்கீமிடம் ஒரு கேள்வியை முன்வைத்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள ‘சக்தியை’ வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். கமிஷனர்களுக்கு பதிலளித்த சாட்சி, “ஊடகங்களின் முன்னிலையில்லாமல் நான் அவர்களுக்கு பெயரிட முடியும்” என்றார்.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?