மீண்டும் தீப்பிடித்த டயமன்ட் கப்பல்!

கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது தீப் பரவலுக்குள்ளான நியூ  டயமன்ட் கப்பல் மீண்டும் தீப்பிடித்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திக டிசில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக கப்பலில் பரவிய தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சங்கமன்கண்டி கடற்பரப்பில் 30 கடல் மைல் தொலைவில் நங்கூடமிடப்பட்டிருந்தது.

எனினும் அப் பகுதியில் வீசிய பலத்த காற்று அதிக உஷ்ணத்துடனான நிலைக் காரணமாக மீண்டும் கப்பல் இன்று மாலை தீப்பிடித்துள்ளது.

இதனால் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை, பிற பங்குதாரர் கப்பல்கள், மற்றும் விமானங்களும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

SOURCEவீரகேசரி பத்திரிகை