கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப்

கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் : இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் அறிவிப்பு

ஜெருசலேம் : கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில், கொரோனாவுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கூறி வருகின்றனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் ஆரோக்கிய சேது செயலி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள முடியும். அந்த வரிசையில் இஸ்ரேல் நாட்டில் நவீன தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு வருகிறார். அதன்படி குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டத்தை அந்நாடு பரிசீலித்து வருகிறது.

காரில் பயணிக்கும்போது நெருங்கி வரும் மற்ற வாகனங்கள் மோதாமல் இருக்க எச்சரிக்கை செய்யும் மொபிலியே என்னும் தொழில்நுட்பத்தைப் போலவே இந்த சென்சார்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)
* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

Previous articleகொரோனாவுடன் இயற்கை அனர்த்தங்களும் இணையலாம்
Next articleமின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான நியாயமான சலுகை காலம்