கொரோனாவுடன் இயற்கை அனர்த்தங்களும் இணையலாம்

நாட்டில்‌ தற்போது மழையுடன்‌ கூடிய காலநிலை அதிகரித்து வரும்‌ நிலையில்‌ இதனால்‌ வெள்ளம்‌ மற்‌றும்‌ மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள்‌ ஏற்படலாம்‌ என வனிமண்டலவியல்‌ திணைக்களம்‌ எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்‌ மேற்கு பருவக்‌ காலம்‌ மே மாத இரண்டாம் வாரத்தில்‌ இருந்து ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள்‌ இருப்பதாகவும்‌ இதனால்‌ கடந்த வருடங்களை போன்று இத்த வருடத்திலும்‌ தீவிரமடையுமாக இருந்தால்‌ வெள்ளம்‌, மண்சரிவு மற்றும்‌ சுழல்காற்று உள்ளிட்ட அனர்த்த நிலைமைகள்‌ ஏற்படலாம்‌ என வளி மண்டலவியல்‌ திணைக்களத்தினால்‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளகாக அரசாங்க
தகவல்‌ திணைக்களம்‌ தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில்‌ நிலவும்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று அச்சுறுத்தல்‌ நிலைமையில்‌ இயற்கை அனர்த்த அனர்த்தங்கள்‌ ஏற்படு
மாக இருந்தால்‌ அதன்போது பெரும்‌ சிக்கல்‌ நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டி வருலாமெனவும்‌ வளிமண்டலவியல்‌ திணைக்‌
களத்தினால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்நிலையில்‌ இவ்வாறான நிலைமை ஏற்படும்‌ போது முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்‌ தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும்‌ அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினால்‌ இயற்கை அனர்த்தங்கள்‌ ஏற்படக்‌ கூடுமென கருதப்‌பட்டுள்ள மாவட்டங்களில்‌ தேவையான தயார்படுத்தல்கள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக கடந்த நாட்களில்‌ சுகாதார மற்றும்‌ பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையேயும்‌ கலந்துரையாடல்கள்‌ நடத்‌தப்பட்டுள்ளன. அத்துடன்‌ கொரோனா தடுப்புக்கான தேசிய செயலணியிலும்‌ இந்த விடயம்‌ தொடர்பாக அவதானம்‌ செலுத்தப்‌பட்டுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக மக்களை தெளிவுப்படுத்த தேவையான வேலைத்திட்‌டங்களை முன்னெடுப்பதற்கும்‌ அரசாங்கம்‌ நடவடிக்கையெடுக்கவுள்ளது.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters