எரிவாயு அடுப்பு வெடிப்பது ஏன்? பாதுகாப்பாக கையாள்வது எப்படி?

அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொடர் எரிவாயு அடுப்பு வெடிப்புகள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் திகைத்து நிற்கிறார்கள். எரிவாயு அடுப்பு வெடிப்புகளுக்கான காரணத்தை ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பிவிற்கும் நிறுவனங்களின் பேராசை. எரிவாயு அடுப்பு வெடிப்புகள் ஏற்பட வழிவகுத்துள்ளது. பேராசையினால், அவர்கள் விரைவாக அதிக சிலிண்டர்களை விற்க விரும்பியிருக்கிறார்கள்.அதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளாக கருதப்படுபவை.

 1. எரிவாயுக்கலவையில் விரைவாக ஆவியாகக்கூடியதும், எரியும்போது அதிக வெப்பத்தை வெளிவிடுகின்றமான வாயுவின் விகிதத்தை கூட்டியமை.
 2. எரிவாயுக் கலவையில் மணம் வீசும் வாயுவை அகற்றியமை. இதனால் எரிவாயு பாவனையாளர்கள், மணத்தினால் வாயுக்கசிவை கண்டுபிடிக்க இயலாமல் போனமை,
 3. பாவனையிலுள்ள எரிவாயு அடுப்புகள் அதிக வெப்பத்தை தாங்கும் திறனற்று இருத்தல்.
 4. பாவனையாளர்கள் தரமான அடுப்புகள் எவை? தரமான இணைப்புக்குழாய்கள் எவை? தரமான றெகுலேற்றர்கள் எவை? என்று அறியாமலிருத்தல்.
 5. எரிவாயு பாவனையாளர்கள். சமையல் முடிந்தபின் விரைவாக அடுப்பை சுத்திகரிக்க விரும்பியதால். கண்ணாடி பொருத்தி, வெப்பத்தை காற்றுக்கு கடத்தும் திறன் குறைக்கப்பட்ட அடுப்புகளை பயன்படுத்தியமை.
 6. சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி விற்கும் நிறுவனங்கள், அவற்றை விற்பனைக்கு அனுப்பும்போது, சிலிண்டரில் எரிவாயு கசிவு இருக்கிறதா என்று வழமைபோல பரிசோதிக்கப்படவில்லை என்று கூறப்படுவதால், பாவனைாளர்கள் அனைவரும் எரிவாயு கசிவு இருக்கிறதா என்று பரிசோதித்திருக்கவேண்டும். ஆனால், பாவனைாளர்கள் அனைவரும், எரிவாயு கசிவு இருக்கிறதா என்று பரிசோ திக்காமை.

சமையல் எரிவாயு உபயோகிப்பவர்கள் செய்யவேண்டியவை

 1. சமையல் எரிவாயு உபயோகிப்பவர்கள், எரிவாயு வழங்குநரால் விதியோசிக்கப்படும் அச்சிடப்பட்ட அறிவுறுத்தல் பத்திரத்தை கேட்டு, வாங்கி. கவனமாக வாசித்து அதில் கூறப்பட்ட விடயங்களை செயல்படுத்தவேண்டும்.
 2. எரிவாயு வழங்குநரிடம் தரமான அடுப்பு எது?தரமான றெகுலேற்றர் எது? தரமான குழாய்கள் எவை என்று கேட்டு அவற்றை வாங்கி உபயோகிக் கவேண்டும். அத்துடன் மோதிர கிளிப்புகள் இரண்டையும் வாங்கவேண்டும்.
 3. சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு இருக்கிறது என்பதை காட்டும் மீற்றர் பொருத்தப்பட்ட றெகுலேற்றர்களும் விற்கப்படுகின்றன என்பதை பாவனை யாளர் அறிந்திருக்கவேண்டும்.
 4. குழாயை முறையாக பொருத்த வேண்டும். சிலிண்டருடன் இணைப்புக் குழாயை பொருத்துமிடத்திலும், அடுப்புடன் குழாயை பொருத்துமி டத்திலும், பொருத்தப்படும் மோதி ரவளைய கிளிப்களிலிருக்கும் புரி ஆணியை அளவாகவே இறுக் கவேண்டும். அளவுக்கு அதிகமாக இறுக்கி குழாயை சேதப்படுத்தக்கூடாது.
 5. சாதாரணமாக, எரிவாயுவில் கலந்துள்ள வாயுக்கள் சரியான விகிதத்தில் கலந்திருக்கும்போது வெளிவிடப்படும் வெப்பத்தை தாங்கத்தக்கதாகவே எரிவாயு அடுப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கும். எரிவாயுவில் கலந்துள்ள வாயுக்களின் விகிதம் மாற்றப்பட்டு, அதிக வெப்பம் வெளிவிடப்பட்டால் அந்த வெப்பத்தை தாங்கமுடியாமல் அடுப்பு வெடித்து சிதறலாம்.
 6. வெப்பத்தை கடத்தாத கண்ணாடி. பொருத்தப்பட்ட அடுப்பு வெப்பத்தை காற்றுக்கு கடத்தாது. இதனால் அடுப்பில் அதிக வெப்பம் தேங்கும். இதனால் கண்ணாடி பொருத்தப்பட்ட அடுப்பு வெடித்து சிதறலாம்.
 7. அடுப்பில் வெப்பம் அதிகரிப்பதை தடுப்பதற்கு, அடுப்பை இடையிடையே நிறுத்தி அடுப்பு ஆறியபின் சமைக்க வேண்டும்.
 8. எரிவாயு அடுப்பில் நெருப்பு எரி கின்ற பல்துவாரச்சக்கரத்துக்கும். சமையல் பாத்திரத்தை வைத்து சமைக்கும் இடத்துக்குமிடையே இருக்கும் தூரம் குறைவாயிருக்கின்ற அடுப்பை வாங்கி உபயோகித்தால் தான், எரிவாயு வீணாகாது. குறைவான வாயுவை உபயோகித்து அதிக சமையல் செய்யமுடியும் என்பதை, பாவனையாளர் அறிந்திருத்தல் வேண்டும்.
 9. வாயுஇணைப்புக்குழாயை 2 வருடங் களுக்கு ஒரு தடவையும். றெகுலேற்ச ரை 5 வருடங்களுக்கு ஒரு தடவையும் மாற்ற வேண்டும். றெகுலேற்றர்சரியாக தொழிற்படாவிட்டால் 5 வருடங்களுக்கு முன்னரே மாற்றிவிடவேண்டும்.
 10. வாயுக்குழாய் மடிந்து முறியாதவாறு பேணவேண்டும்.
 11. அடுப்புடன் குழாய் பொருத்து மிடத்திற்கு அருகிலிருக்கும் வாயுக் குழாயின்பகுதி வெப்பம் காரணமாக 2 வருடங்களுக்கு முன்னரே நைந்துபோகலாம். அடிக்கடி இந்தப் பகுதியை நசித்துப் பார்த்து, நைந்துபோயிருந்தால் 2 வருடங்களுக்கு முன்னரே குழாயை மாற்றவேண்டும்.
 12. இரவில் நித்திரை செய்யும்போது எலிகள் வாயுக்குழாயை வெட்டி விபத்தை ஏற்படுத்தாதவாறு, றெகுலேற்றரிலிருக்கும் ஆளியை, பாதுகாப்பு நிலைக்கு, திருப்பிவிட வேண்டும். இவ்வாறு திருப்பிவிட்டால,’ வாயுக்குழாயினுள் எரிவாயு வராது.
 13. முன்னரைப்போல, எரிவாயுவில் மணம்வீசுவதற்காக கலக்கப்படும் வாயுவை கலப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மணம்வீசுகிறதா என்று அவதானிக்க வேண்டும்.
 14. நிறமுள்ள செலோபீன் ஸ்ரிக்கர் ஓட்டப்பட்டுள்ளதா என்ற பார்க்க வேண்டும். ஸ்ரிக்கர் பராதுகாப்பானதாக அறிவிக்கப்பட்ட நிறத்தில் இருக்கிறதா என்றுபார்க்கவேண்டும்.
 15. எரிவாயுவில் மணம்வீசுவதற்காக கலக்கப்படும் வாயு கலக்கப்பட்டிருந்தால் சிலிண்டரின் மேல் பகுதியில் காவலியாக ஒட்டப்பட்டிருக்கும் செலோபீன் ஸ்ரிக்கரை அகற்றியதும் எரிவாயு மணம் வீசக்கூடும். சிலிணட்ரின் வாயை மூடியால் மூடிவிடவேண்டும்.
 16. எரிவாயு கசிந்து மணம்வீசினால் சிலிண்டரின் வாயை. மூடியால் மூடி விட்டு, எரிவாயு விநியோகித்தவருடன் தொடர்புகொள்ளவேண்டும்
 17. சிலிண்டரில் றெகுலெற்றரை பொருத்துமிடத்தில் அமைந்திருக்கும் கொலறினுள் ஒரு இரப்பர்வளையம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். முன்ன ரைப்போல, எரிவாயுவில் மணம்வீசுவதற்காக கலக்கப்படும் வாயு கலக்கப்பட் டிருந்தால் றெகுலெற்றரை பொருத்தியதும் எரிவாயு மணம் வீசக்கூடும். எரிவாயு மணம் வருகிறதா? என்று உடனடியாக முகர்ந்து பார்க்கவேண்டும். எரிவாயு கசிந்து மணம்வீசினால் எரி வாயு விநியோகித்தவருடன் தொடர்பு கொண்டு, புதிய இரப்பர் வளையத்தை பொருத்துவித்த பின்னரே அடுப்பை உபயோகிக்கவேண்டும்.
 18. வாயுக்குழாய் மடிந்து முறியாதவாறு பேணவேண்டும். வாயுக்குழாயிலிருந்து எரிவாயு கசிந்து மணம்வீசினால், எரி வாயு கசியும் இடத்தை கண்டுபிடிப்ப தற்கு. சவர்க்காரக்கரைசலில் தோய்த்த தூரிகை ஒன்றினால் சவர்க்கார கரைசலை குழாய் முழுவதற்கும் பூசி, வாயுக் குமிழ் வெளிவரும் இடத்தை கண்டுபி டிக்கவேண்டும்.
 19. சிலவகை அடுப்புகளில் நெருப்பு எரிகின்ற பல்துவாரச்சக்கரம் 2 ஆணிகளினாலோ அல்லது தகட்டினினாலோ தாங்கப்பட்டிருக்கும். இவை விரைவில் துருப்பிடித்து, பலமிழந்துவிட்டால் பல்துவாரச்சக்கரம் கழன்று வீழ்ந்து விடும். அடுப்பு எரிந்துகொண்டிருக் கும்போது கழன்றுவீழ்ந்தால் பெரும் தீவிபத்து ஏற்படும். ஆதலால், தீ பற்றும் பல்துவாரச்சக்கரத்தை தாங்குகின்ற ஆணிகளையோ தகடுகளையோ இடை யிடையே மாற்றவேண்டும்.
 20. எரிவாயு அடுப்பை பற்றவைப்ப தற்காக, ஆளியை திருப்பியதும் சில வேளைகளில் அடுப்பு எரியாமலே வாயு வெளியேறிக்கொண்டிருக்கும். எரிவாயு கசிந்து மணம் வீசும். இந்த நிலையில் அடுப்பை பற்றவைத்தால். எரிவாயு வெளியே பரவி, பரவிய இடமெல்லாம் தீ பற்றி, விபத்து ஏற்படலாம். அடுப்பு எரிகிறதா என பரிசோதிப்ப தற்கு, கண்ணை அடுப்புக்கு அருகில் வைத்து குனிந்துபார்த்தல் ஆகாது. அவ்வாறு பார்த்தால் கண்கள் தீயினால் எரிக்கப்படலாம் கண்ணை அடுப்பிலிருந்து தூரத்தில் வைத்துக் கொண்டு குனிந்து, பரிசோதித்து, கண்களை தீசுட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
 21. சமைக்கும்போது யன்னல்கள் கதவு களை திறந்து வைப்பது பாதுகாப்பானது. எரிவாயு மணம்வீசினால் உடனடியாக றெகுலேற்றரில் இருக்கும் ஆளியை விரைவாக பாதுகாப்பு நிலைக்கு திருப்பி எரிவாயு சிலிண்டரிலிருந்து வெளியேறாதவாறு தடுத்துவிடவேண்டும்.
 22. சிறுவர்களை அடுப்புடனோ சிலிண்டருடனோ விளையாடவிடக் கூடாது.
 23. இரவில் நித்திரை செய்யும் போது எலிகள் வாயுக்குழாயை வெட்டி விபத்தை ஏற்படுத்தாதவாறு, றெகு லேற்றரிலிருக்கும் ஆளியை பாதுகாப்பு நிலைக்கு, திருப்பிவிடவேண்டும்.
 24. சமைக்கும்போது எரிவாயு மணம் வீசினால் உடனடியாக நெகுலேற்றரில் இருக்கும் ஆளியை, விரைவாக திருப்பி எரிவாயு சிலிண்டரிலிருந்து எரிவாயு வெளியேறாதவாறு தடுத்துவி டவேண்டும். மேற்குறிப்பிட்டவற்றை கையாள்வது பாதுகாப்பாக அமைலாம்.

ச.ஆ.கோபாலமூர்த்தி – நலவாழ்வு ஆலோசகர் – தினக்குரல் 7/1/2021