முட்டைக்கான விலை நிர்ணயம்

நாட்டின் அனைத்து முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒரு முட்டையின் விலையை நாளை முதல் 2 ரூபாவினால் குறைப்பதற்கு முடிவுசெய்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டையின் மொத்த விலை 19.50 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் விலை 20 ரூபாவாகவும் குறைக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் தெரிவித்தார்.

மேலும், ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை 21 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் விலை 22 ரூபாவாகவும் குறைக்கப்படும்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter