இந்தியாவில் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை கடந்துள்ளது. ( 4,110,839 ) கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 90,600 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பானது 4,110,839 ( 41 இலட்சம்) ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது உலக அளவில் தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலுக்கு மிக நெருக்கமானதாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,089 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஒட்டு மொத்த உயிரிழப்பு 70, 679 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 31,07,223 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோரின் விகிதமானது 77.2 சதவிகிதமாக உள்ளது.

தற்போது 8,46,395 பேர் சிகிச்சையில் உள்ளனர் என இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் அமெரிக்கா 64,31152 நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில் 41,23,000 நோயாளிகளை கொண்டுள்ளது.

Previous articleபாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு எதிர்கால சமூகத்திற்க்கு பாரிய அச்சுறுத்தல்
Next articleபயங்கரவாதத்துடன் தொடர்புடையோரை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை