பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு எதிர்கால சமூகத்திற்க்கு பாரிய அச்சுறுத்தல்

பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மத்தியில்  போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது என காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.

காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீடத்தின் பாடசாலைக் கல்விப் பிரிவு ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (05) இடம்பெற்ற போது அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது இன்று சமூகத்தை நாசப்படுத்தி அதில் இலாபம் தேடும் போதைப் பொருள் வியாபாரிகள் அவர்களது நாசகார செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் உருவாக்கி மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி எதிர்கால சந்ததியின் வாழ்க்கையை சீர்குலைத்து வருகின்றனர்.

இது விடயத்தில் அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ் பாடசாலையில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர் உள்ளிட்டோர் பெரும் முயற்சி எடுத்து வருகிறோம் . ஆனால் இது விடயத்தில் பெற்றோர்கள் முழுமையாக கவனம் எடுப்பது அவசியமாகும் என தெரிவித்ததுடன். உங்கள் பிள்ளைகளின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்களது நண்பர்கள் தொடர்பிலும் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம். ரமீஸ் ஹாபிழ் (ஜமாலி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கலாபீடத்தின் விரிவுரையாளர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read:  மீண்டும் ரணில் !!