அரித்துக் கொல்லும் மனஅழுத்தம் (Stress)

மக்களிடத்தில் மன அழுத்தம் மிக அதிகமாக கூடிக்கொண்டே செல்வதற்கு முக்கிய காரணம், தினசரி வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையோ அல்லது திறமையின் மீது ஒரு சவாலோ ஏற்படுத்தும்போது, உணரப்படும் விரும்பத்தகாத உணர்வை ‘மன அழுத்தம்'(ஸ்ட்ரெஸ்) என்று கூறலாம்.

இது கோபம், பயம், இயலாமை, கவலை, வெறுப்பு, அமைதியின்மை, கவனமின்மை என எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம்.

எமக்கு ஆபத்து ஏற்படும்போது, எமது உடம்பு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவும் மன அழுத்தம் இருக்கிறது.

எமக்கு ஆபத்து நேரப்போகிறது என்று நாம் உணரும்போது (அது உண்மையாகவோ அல்லது எம்முடைய கற்பனையாகவோ இருக்கலாம்) அதை எதிர்கொள்ள, எமது உடல் சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றது என்று மனஅழுத்தம் குறித்து விளக்குகின்றார் மாதம்பை, தள ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர் (திருமதி) நௌபியா இர்ஷாத் BUMS. இவர், மனஅழுத்தம் தொடர்பாக ‘தமிழ்மிரர்’ பத்திரிகையுடனான உரையாடலை கேள்வி-பதில் வடிவில் இங்கே தருகின்றோம்.

கேள்வி: மனஅழுத்தத்தின்போது, எமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

பதில்: மன அழுத்தம் ஏற்படும்போது எமது நரம்பு மண்டலம், அட்ரினல், கார்டிசோல் ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. இரத்தத்தில் கலக்கும் இந்த ஹார்மோன்கள், உடல் முழுவதும் பாய்ந்து அவசர நிலையை எதிர்கொள்ள எம்மைத் தயார்படுத்துகிறன. இதனால், இதயம் வேகமாகத் துடிக்கும்; தசைகள் கடினம் அடையும்; இரத்த அழுத்தம் அதிகரிக்கும்; சுவாசம் வேகமாகும். எம் அனைத்துப் புலன்களும் பிரச்சினையைக் கூர்ந்து கவனிக்கும். இந்த உடல் ரீதியான மாற்றம். எம்முடைய பலத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் எதிர்வினை புரியும் நேரத்தை விரைவுபடுத்தும்; பிரச்சினையை நாம் எதிர்க்கவும் தப்பிக்கவும் இவை உதவுகின்றன.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை உடலின் சமநிலையைப் பாதிக்கும்போது, அதுவே அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. மன அழுத்தத்தின்போது இதயம் வேகமாகச் செயற்படத் தூண்டப்படுகிறது. இந்தக் கூடுதல் சுமை, நரம்பு மண்டலம், மூளை, இதயம், இரத்த ஓட்டம், சிறுநீரகம், இனப்பெருக்க மண்டலம் என பல்வேறு உறுப்புகளைப் பாதிக்கிறது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

சுவாச மண்டலம்: மன அழுத்தம் அதிகரிக்கும்போது மூச்சை அதிகளவில் உள் இழுத்து வெளியேவிடச் செய்யும். இது சிலருக்கு படபடப்பு, மாரடைப்பை ஏற்படுத்தலாம்.

இதயச் செயற்பாடு: திடீரென ஏற்படும் மன அழுத்தம், இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதிக அளவில் இரத்தம் ‘பம்ப்’ செய்யப்படும்போது இரத்தக் குழாய்கள், இதய தசைகள் அதிகளவில் வேலை செய்கின்றன. தொடர்ந்து இவ்வாறு நடக்கும்போது, இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும். அதனால் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

செரிமான மண்டலம்: மன அழுத்தம் அதிகரிக்கும்போது, அதிகளவிலோ குறைவாகவோ சாப்பிடத் தோன்றும். மேலும், மது புகைப்பழக்கம் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். அத்துடன் இரைப்பையின் செரிமானம் பாதிக்கப்படுவதுடன் ஊட்டச்சத்து தரும் பலனும் பாதிக்கப்படும்.

இனப்பெருக்க மண்டலம்: மன அழுத்தத்தின்போது அதிகளவில் சுரக்கப்படும் கார்டிசோல் மற்றும் அட்ரினல் ஹார்மோன்கள் இனப்பெருக்க மண்டலத்தின் வழக்கமான பணிகளைப் பாதிக்கின்றன. நீண்ட நாள் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கு டெஸ்டோடிரான் ஹார்மோன் மற்றும் விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆபத்து ஏற்படும்போது, ஆண்மைக் குறைபாடு ஏற்படலாம். பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டி, சரியான கால இடைவெளியில் மாதவிலக்கு வராமை போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். உடல் உறவு மீதான ஈடுபாட்டையும் மன அழுத்தம் குறைக்கும். இதனால் கணவன் – மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் தோன்றும்.

கேள்வி: மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

பதில்: சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். மன அழுத்தம், மன விரக்தி, மாற்றம், முரண்பாடுகள், நிர்ப்பந்தம் ஆகியவற்றால் ஏற்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமைதியான நதியில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் படகைப்போன்றது எம் வாழ்க்கை. இதில், திடீரென ஏற்படும் மாற்றங்கள், எம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. சில சமயங்களில் இந்த மாற்றங்கள், எம் பொறுமைக்கும் சிக்கலைச் சமாளிக்கும் திறமைக்கும், சவாலாக இருக்கும். இந்தத் திடீர் மாற்றம் திருமணம், பதவி உயர்வு, மகப்பேறு, பண வரவு போன்ற சந்தோஷமான நிகழ்வு, குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணம், விபத்து, தொழில் நட்டம், வேலை இழப்பு போன்ற துயரமான நிகழ்வு போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

குறிப்பாக, காலையில் எழுந்தது வேண்டியுள்ளது. இரண்டு அல்லது முதல், இரவு உறங்கச் செல்வது வரை முரண்பாடுகளுடனேயே போராட இரண்டுக்கும் மேற்பட்ட ஆசைகள், விருப்பங்கள் ஒரே நேரத்தில் வெளிப்படும்போது, அங்கு முரண்பாடு ஏற்படும். உதாரணத்துக்கு, காலையில் எழுந்திருக்க வேண்டிய கட்டாயமும் கண்ணைக் கட்டும் ஆனந்தத் தூக்கமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடும்போது, எதைச் செய்வது என முடிவெடுக்க முடியாமல் முரண்பாட்டுக்கு ஆளாகிறோம்.

மன அழுத்தத்துக்கான அடுத்த காரணம், நிர்ப்பந்தம். உலகில் எல்லோரும் ஏதாவது ஒரு நிர்ப்பந்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காரியங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் நேரும். நமக்குத் தேவை இல்லாமல் சமூக அந்தஸ்துக்காக ஆடம்பர வீடு கட்டுகிறோம், கார் வைத்துக்கொள்கிறோம். இதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையால், மன உளைச்சலுக்கு ஆளாவோம். இதேபோல், சமூக அந்தஸ்து, பதவி இவற்றால் நம்மால் சுதந்திரமாகவும் மனதுக்குப் பிடித்தவாறு வாழவும் பலரால் முடிவது இல்லை.

கேள்வி: மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

பதில்: கோபம், சோர்வு, சோர்வு, ஆற்றல் இழப்பு, முதுகில் வலி, மலச்சிக்கல், அல்லது வயிற்றுப்போக்கு, மனச்சோர்வு, தலைவலி, உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மூச்சுத் திணறல் உணர்வு, முடி கொட்டுதல், கழுத்தில் அழுத்தம், வயிற்று வலி, எடை அதிகரிக்க அல்லது குறைக்க, நகைச்சுவை மாற்றங்கள், பல் அல்லது தாடை அழுத்தம், அதிக மதுபானம் பாவித்தல், அமைதி அல்லது பிற மருந்துகளை எடுத்துக் கொள்ளல், அதிகப்படியான புகைப் பாவனை, குறைந்த சுய மரியாதை, மற்றவர்களுடன் அல்லது வேலையில் தொடர்புடைய சிரமம், வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிகளில் சிக்கல்கள், முடிவுகளை எடுப்பதில் சிரமம், வெளிப்படையான காரணமின்றி, வாழ்க்கை முறையின் மாறுபாடு என்பன ஏற்படும்.

Read:  காரணம் கூறுவதற்கு, அரசாங்கம் ஒன்று எதற்கு?

கேள்வி: அழுத்தத்திலிருந்து விடுபட என்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும்?

பதில்: தியானம்: அன்றாட வாழ்க்கையின் மன அழுத்த வழிகளிலிருந்து ஓய்வெடுப்பதற்கும் விலகிச் செல்வதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும். தியானம் செய்வதன் மூலம் மனநிலையை மேம்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தவும் அதிக ஆரோக்கியத்தைப் பெறவும் பயன்படுத்தப்படுகிறது. உடலில் தியானத்தின் பலன்களை நிரூபிக்கும் பல ஆய்வுகள் உள்ளன.

யோகா: உடற்பயிற்சியுடன் கூடுதலாக ஓய்வெடுக்க மற்றோர் இயற்கை வழி யோகா. அறியப்பட்டபடி, உடற்பயிற்சி செய்வது நல்ல மனநிலையுடன் தொடர்புடைய ஹார்மோன்கள், இன்ப உணர்வை ஏற்படுத்தும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. சில ஆய்வுகளின்படி, யோகா செய்வது ஒரே நன்மைகளைக் கொண்டுள்ளது. இது ஆன்மா மற்றும் உடலின் தொடர்பை மேம்படுத்துகிறது; தூக்க சுழற்சியை மேம்படுத்துகிறது மற்றும் வலுப்படுத்துகிறது; வலியை நீக்குகிறது; பதட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலுக்கு அன்பின் உணர்வை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அகற்ற ஒரு பத்திரிகையை வைத்திருப்பது ஒரு சிறந்த வழியாகும். தூங்குவதற்கு முன்னர் நீங்கள் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு வரும்போது, உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி (நேர்மறை மற்றும் எதிர்மறை) நீங்கள் அதிகமாக பிரதிபலிக்கத் தொடங்குகிறீர்கள்.

சத்தான உணவு: கவலை மற்றும் அமைதியின்மை அளவைக் குறைக்க சீரான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். மன அழுத்த நிலையில் இருக்கும்போது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையுடன் சாப்பிட வேண்டும் என்று பலர் உணர்கிறார்கள். இந்த வகையான உணவை உட்கொள்வது வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு நீங்கள் நன்றாக உணரவைக்கும், மேலும் பி, ஒமேகா 3 மற்றும் மெக்னீசியம் காய்கறிகள், புரதம், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பிற உணவுகளுக்கு கூடுதலாக இத்தகைய உணவுகள் மனநிலையை மேம்படுத்தவும் அதிக ஆற்றலை உங்களுக்குத் தரும். அதனால்தான் கால்சியம், வைட்டமின் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. பச்சை கிளர்ச்சியை அகற்றவும் செறிவை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பைஷல் இஸ்மாயில் – தமிழ் மிரர் 01/01/2022