பெருந்தொற்று என்ற ‘அரசியல் சூதாட்டம்’ – சொல்லப்படாத செய்திகள்

கொரோனா சார்ந்து சொல்லப்படாத சில செய்திகள் பெருந்தொற்று என்ற ‘அரசியல் சூதாட்டம்’

ஆண்டின் இறுதி நாளில், இயல்பாய் சில குறிப்புகள்; கடந்து போகும் ஆண்டைத் திரும்பிப் பார்க்கையில், அங்கொன்றும்‌ இங்கொன்றுமாய்‌ சில செய்திகள்‌ முக்கியமானவையாக முளைத்து நிற்கின்றன.

இன்னோர்‌ ஆண்டை, பெருந்தொற்றோடு கடக்கிறோம்‌. ‘உயிர்‌ வாழ்தலே தலையாய கடமை’ என்பது போல, ஆண்டு முழுவதும்‌ இருப்புக்கான போராட்டமே, இவ்வாண்டின்‌ மையமாக இருந்திருக்கிறது. கொரோனா சார்ந்து சொல்லப்படாத செய்திகள்‌ சில எமக்குப்‌ பயன்தருவன.

கடந்தாண்டை விட இவ்வாண்டு, பெருந்தொற்று மிகவும்‌ மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மூன்றாமுலக நாடுகளில்‌ இதன்‌ தாக்கம்‌ மிகவும்‌ மோசமானது. இந்தத்‌ தொற்றைச்‌ சமாளிக்க இயலாத அரசுகள்‌, தகவல்‌ மறைப்பு, திரிப்பு போன்றவை மூலம்‌, நாட்டில்‌ நடப்பவை வெளியே தெரியாமல்‌ பார்த்துக்‌ கொண்டுள்ளன.

கொரோனா தொற்றால்‌ மரணமடைந்தவர்களின்‌ உண்மையான எண்ணிக்கை, கடைசிவரை எமக்குத்‌ தெரியப்‌ போவதில்லை. அதேவேளை, கொரோனாவின்‌ பெயரால்‌ கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்பட்டு, உரிமைகள்‌ மறுக்கப்படுவது உலகெங்கும்‌ நடந்துள்ளன. இது, ஒருபுறம்‌ இராணுவ மயமாக்கலுக்கும்‌ இன்னொருபுறம்‌, தீவிர வலதுசாரி தேசியவாதத்துக்கும்‌ வாய்ப்பளித்துள்ளது.

ஒர்‌ அரசியல்‌ சூதாட்டமாக பெருந்தொற்று மாறியுள்ளது. இந்தியாவில்‌ இவ்வாண்டு நடுப்பகுதியில்‌ கொரோனாவால்‌ ஏற்பட்ட பெருந்தொகையான உயிரிழப்புகள்‌; அவ்வுண்மையை மறைக்க, அரசாங்கம்‌ மேற்கொண்ட நடவடிக்கைகள்‌ என்பன, ஜனநாயகத்தின்‌ பெயரால்‌ எவையெல்லாம்‌ சாத்தியமாகின்றன என்ற வினாவுக்கான பதில்களாகும்‌.

ஜனநாயகம்‌, பணநாயகமாசவும்‌ மதநாயகமாகவும்‌ மாற்றம்‌ பெற்றுள்ள ஒரு நாட்டில்‌, மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பதையே, இந்தியாவின்‌ கொரோனா நிலைவரம்‌ சுட்டிக்காட்டி நிற்கின்றது. இந்தியா, இவ்வாண்டு கொரோனாவோடு போராடியதையும்‌ சுற்றி நிகழ்ந்தவையையும்‌ இங்கு கவனிப்பது தகும்‌.

இந்தியா பெருந்தொற்றோடு போராடுகையில்‌, சீனாவும்‌ பாகிஸ்தானும்‌, தம்மிடம்‌ இந்தியா பகையைப்‌ பாராட்டுவதைப்‌ புறக்கணித்து, உடனடியாகவே இந்தியாவுக்கு உதவ முன்வந்தன. அதன்பின்பு பிரான்ஸூம்‌ அவுஸ்திரேலியாவும்‌ உதவுவதாக அறிவித்தன; அமெரிக்கா அமைதி காத்தது.

இந்தியாவின்‌ தேவைகளை மிகவும்‌ உணருவதாகக்‌ கூறிய அமெரிக்கா, எதையுமே உதவ முன்வரவில்லை. மனிதாபிமானமும்‌ மனித உரிமைகளும்‌ பற்றிப்‌ பேசும்‌ அமெரிக்காவின்‌ மனிதாபிமானம்‌, எதைப்பற்றியது என்பதை மோடி அரசாங்கம்‌ பேசத்‌ தவறினாலும்‌, இந்திய மக்கள்‌ அறிவர்‌. இதேவேளை, சில மூன்றாமுலக நாடுகள்‌ இப்பெருந்தொற்றைச்‌ செம்மையாகக்‌ கையாண்டுள்ளன.

வனங்களைச்‌ செவ்வையாகப்‌ பாவித்ததாலேயே, அமெரிக்க வணிகத்‌ தடைகளால்‌ அதிகம்‌ அல்லலுறும்‌ வெனிசுவேலா நாடு, வேறெந்த தென்‌ அமெரிக்க நாடுகளைவிட வெகுதிறமாக கொரோனா தொற்றையும்‌ இறப்பு சதவீதத்தையும்‌ கட்டுப்படுத்தியது.

அவ்வாறே, மத்திய அமெரிக்காவில்‌, நிக்கரகுவா தலை நிமிர்ந்து நிற்கிறது. கரிபியன்‌ தீவுகளில்‌, கியூபாவின்‌ சாதனை எவரும்‌ எதிர்பார்த்ததே! ஏனெனில்‌, கியூபப்‌ புரட்சியின்‌ முக்கிய சாதனைகள்‌, கல்வியிலும்‌ மருத்துவத்திலும்‌ நாட்டை மேம்படுத்தியமையாகும்‌. மக்கள்‌ அரசாங்கத்தை நம்பவும்‌ அரசாங்கம்‌ மக்களின்‌ தேவைகளை உணர்ந்து செயற்படவும்‌, இயன்ற சூழல்களில்‌ இறுக்கமான நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மக்களுக்கு மிகக்குறைந்த விளைவுகளுடன்‌ முன்னெடுக்க இயலும்‌ என்பதை, இந்நாடுகள்‌ சுட்டிக்காட்டி நிற்கின்றன.

அமெரிக்காவின்‌ வணிகத்‌ தடையால்‌ அல்லற்படும்‌ ஆசிய நாடுகள்‌ இரண்டு. ஒன்று கொரியா; மற்றையது ஈரான்‌. ஈரானில்‌, கொரோனா தொற்று வேகமாகப்‌ பரவிய வேளை, தொற்றுத்‌ தவிர்ப்பு நோயறியும்‌ கருவிகள்‌ போன்றவற்றுக்குக்‌ கடுந்தட்டுப்பாடு இருந்தது. அவ்வேளை, அவசியமான மருந்துகளையும்‌ பிற மருத்துவப்‌ பொருட்களையும்‌ ஈரானுக்குள்‌ புகவிடாமல்‌ மறித்த அமெரிக்க மனிதாபிமானத்தின்‌ பயனாக, ஆசியாவில்‌ இந்தியாவுக்கு அடுத்ததாக அதிகம்‌ நோய்த்தொற்றுள்ள நாடாக ஈரான்‌ இருந்தது.

இந்த நிலைமையைச்‌ சீர்திருத்த சில மாதங்கள்‌ எடுத்தன. அதற்கிடையில்‌ பல தேவையற்ற மரணங்கள்‌ நிகழ்ந்தன. இவ்வாறே, வெனிசுவேலாவையும்‌ அமெரிக்கா துன்புறுத்தியது. எனினும்‌, மக்களின்‌ ஆதரவுடைய வெனிசுவேலா அரசாங்கத்தை, அமெரிக்காவால்‌ அகற்ற இயலவில்லை,

இதேவேளை, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி என்பது, “சர்வரோக நிவாரணி” என்ற நிலையை அடைந்துள்ளது. இதைச்‌ சுற்றி நடந்தேறும்‌ வணிகமும்‌ அரசுகளின்‌ அலட்சியப்‌ போக்கும்‌ கவனிக்கத்‌ தக்கவை.

தடுப்பூசிக்குப்‌ பின்னர்‌ மரித்தோர்‌ பற்றிய தகவல்களை, ‘ஃபைஸர்‌’ நிறுவனம்‌ மூடிமறைத்துள்ளதாக, ‘பைஸர்‌’ ஊழியர்‌ ஒருவர்‌ அம்பலப்படுத்தியுள்ளார்‌. எனினும்‌, ஊடசுங்களில்‌ ௮க்கதை வெளியான பின்னரும்‌, அரசாங்கங்களும்‌ உலக சுகாதார நிறுவனமும்‌ அதைப்‌ பற்றி அசட்டையாகவே உள்ளன. ரஷ்ய, சீன தடுப்பூசிகளுக்குப்‌ பாதகமானதும்‌ உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும்‌ ஊதிப்‌ பெருப்பிக்கும்‌ உலக செய்தி நிறுவனங்கள்‌, ஒரு வருட காலமாக பைஸர்‌; மொடேர்னா; ‘அஸ்ற்றா ஸெனெகா”: போன்ற தடுப்பூசிகளால்‌ நோயாளிகளானவர்கள்‌ பற்றியோ மரித்தோர்‌ பற்றியோ செய்தி வெளியிடுவதைத்‌ தவிர்த்துள்ளன. இணையத்தளங்களும்‌ சமூக வலைத்தளங்களும்‌ திட்டமிட்டே, தடுப்பூசி வணிக நலன்களுக்குப்‌ பாதகமான செய்திகளை இருட்டடிப்புச்‌ செய்கின்றன.

இதேவேளை, வைரஸ்‌ பற்றிய ஐயங்களையும்‌ தொற்றைப்‌ பற்றியும்‌ வைரஸ்‌ தொற்றால்‌ மரித்தோர்‌ பற்றியும்‌, தகவல்கள்‌ எவ்வாறு மிகைப்பட வழங்கப்படுகின்றன எனவும்‌ பொறுப்பு வாய்ந்த மருத்துவ துறையினர்‌ கருத்துகளை வழங்கி வந்துள்ளனர்‌. அத்துடன்‌, தடுப்பூசியை விருத்தி செய்வதில்‌ நடந்துள்ள முறைகேடுகளையும்‌ தடுப்பூசிகளின்‌ பாதக விளைவுகளையும்‌ அவற்றின்‌ மூடி மறைப்புகளையும்‌ இவர்கள்‌ அம்பலமாக்கியுள்ளனர்‌.

தொற்றை அறியும்‌ முறையாகப்‌ பயன்படும்‌ பி.சி.ஆர்‌ முறை, முற்றிலும்‌ நம்பகமானது என அடம்பிடித்த உலக சுகாதார நிறுவனமும்‌ மருத்துவ நிறுவனங்களும்‌, மிக அண்மையிலேயே அப்பரிசோதனை முறை முற்றிலும்‌ நம்பகமானதல்ல என ஏற்றுள்ளன.

வழமையாக ஒரு தடுப்பூசியை விருத்தி செய்து, பலவாறான ஆபத்துகள்‌ பற்றிப்‌ பரிசோதனை முறையில்‌ ஆராய்ந்து, குறைபாடுளை நீக்கி அல்லது தணித்து, உறுதிப்படுத்திய பின்னரே, அது பொதுப்பாவனைக்கு வரும்‌. ‘மொடேனா’, ‘பஃபைஸர்‌’ ஆகியவை இதுவரை சோதித்திராத ஒரு தொழில்நுட்பத்தைப்‌ பாவிப்பனவாயிருந்தும்‌, பிற தடுப்பூசிகளை விடத்‌ துரிதமாக, மேற்குலக அரசாங்கங்களினதும்‌ குறிப்பாக அமெரிக்காவினதும்‌ அங்கிகாரத்தை மட்டுமன்றி, உலக சுகாதார நிறுவனத்தின்‌ அங்கிகாரத்தையும்‌ பெற்றன.

தகவல்‌ இருட்டடிப்புகள்‌ ஒரு புறமிருக்க, தடுப்பூசி செலுத்தாதோர்‌ மீது அரசாங்கங்கள்‌ செலுத்தும்‌ அழுத்தம்‌ தவறானது. இவற்றின்‌ காரணமென்ன? கொரோனா வைரஸ்‌ பற்றி, மக்களனைவரையும்‌ கடும்‌ நீதிக்கு உட்படுத்தி, மனிதர்‌ இத்தொற்றிலிருந்து தம்மைக்‌ காக்க, தடுப்பூசி செலுத்தல்‌ மட்டுமே வழி என, ஊசி செலுத்துதலைக்‌ கட்டாயப்படுத்துவதாகும்‌. மனித இனம்‌, உடல்நலம்‌ பேணுவதற்கு முக்கியமானவை மருந்துகளும்‌ தடுப்பூசி செலுத்துதலுமல்ல. நோய்த்‌ தவிர்ப்பு அடிப்படையிலான தேவை. அது, மனிதரின்‌ வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சி, நலமான மனநிலை போன்ற பல விடயங்களில்‌ தங்கியுள்ளது.

தொற்று நோய்களின்‌ வரவு, முற்றிலும்‌ தவிர்க்கக்‌ கூடியதல்ல. ஆயினும்‌, அவற்றின்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த முடியும்‌. இவ்விடயத்தில்‌, மனிதர்‌ ஒரு சமூகமாக ஒத்துழைப்பதன்‌ மூலம்‌, மிகவும்‌ சாதிக்கலாம்‌. எனின்‌, உலக சுகாதார நிறுவனம்‌ செய்ய உகந்தது, நோய்கள்‌ பற்றியும்‌ அவற்றின்‌ காரணங்கள்‌ பற்றியும்‌ தவிர்க்கும்‌ வழிகள்‌ பற்றியும்‌, மக்களுக்கு அறிவுறுத்துவதும்‌ நல்ல நல நடைமுறைகளைத்‌ தனிப்படவும்‌ சமூக மட்டத்திலும்‌ செயற்படுத்தும்‌ வழிவகைகளை மக்களிடையே ஊக்குவிப்பதுமே ஆகும்‌.

ஆனால்‌, உலக சுகாதார நிறுவனம்‌, பெருமருந்து வணிகர்களது பிரதம முகவரசமாயுள்ளது. மூன்றாமுலக நாடுகளில்‌, முக்கியமாக ஆபிரிக்காவிலும்‌ அடுத்து ஆசியாவின்‌ பெரும்‌ பகுதியிலும்‌, கொரோனா பரவல்‌ மிகக்குறைவு. அதன்‌ காரணங்களில்‌ மிகமுக்கியமானது, மனித உடலின்‌ இயல்பான தடுப்பாற்றால்‌. மிகவும்‌ பெரிதாகத்‌ தொற்றுப்‌ பற்றி அலட்டிக்கொண்ட நாடுகளிலும்‌, மேற்குலகின்‌ அளவுக்கு கொரோனா மரணங்கள்‌ நிகழவில்லை.

கடந்தாண்டு தொடங்கிய கொரோனாத்‌ தொற்று, பல திரிபுகளைக்‌ கண்டுள்ளது. ஏன்‌ திரிபுகள்‌ நடக்கின்றன? இதை ஏன்‌ இன்னமும்‌ கட்டுப்படுத்த இயலாமல்‌ உள்ளது, போன்ற வினாக்களுக்குத்‌ தெளிவான பதில்கள்‌ கிடைக்கவில்லை.

தடுப்பூசிகள்‌, இதற்கு முழுமையான தீர்வு என்ற வகையிலேயே, உலக சுகாதார நிறுவனமும்‌ அரசாங்கங்களும்‌ நடந்து கொள்கின்றன. இது ஆபத்தான திசைவழி, ஏனெனில்‌, தடுப்பூசிகள்‌ உலகில்‌ உள்ள எல்லோருக்குமானதல்ல என்பதை, இவ்வாண்டு அனுபவம்‌ மிகத்‌ தெளிவாகக்‌ சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, தடுப்பூசிகள்‌ மருந்துக்‌ கம்பெனிகளின்‌ ஏகபோகக்‌ கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அறிவியல்‌ ரீதியாக மேம்பட்டதாக மனிதகுலம்‌ பெருமை பேசிக்‌ கொண்டாலும்‌, அவ்வறிவியல்‌ யார்‌ கையில்‌ இருக்கிறது, யாருக்குப்‌ பயன்படுகிறது என்ற கேள்விகள்‌, கேட்கத்‌ தகுந்தன.

அவற்றைக்‌ கேட்கத்‌ தவறுமிடத்து, கொரோனா குறித்த அச்சத்தோடும்‌ அதை வைத்து அரசுகள்‌ நடத்தும்‌ சூதாட்டத்தோடும்‌, 2022ஆம்‌ ஆண்டிலும்‌ வாழ வேண்டியிருக்கும்‌. கேள்வி கேட்போம்‌; குரல்‌ கொடுப்போம்‌; போராடுவோம்‌.

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ – தமிழ் மிரர் 31/12/2021

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page