தடுப்பூசிகள் கட்டாயமில்லை – உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிகள்‌ நாட்டில்‌ கட்டாயப்படுத்தப்படவில்லை என்பது உயர்‌ நீதிமன்றில்‌ பதிவு செய்யப்பட்டுள்‌ளது. வைத்தியர்களான தாரணி ராஜசிங்கம்‌, ரஞ்சித்‌ செனவிரத்ன மற்றும்‌ ஹிரான்‌ பொனாண்டோ ஆகியோர்‌ சட்‌டத்தரணி மோகன்‌ பாலேந்ரா ஊடாக தாக்கல்‌ செய்துள்ள அடிப்படை உரிமை மீறல்‌ மனுவில்‌, பிரதிவாதிகளில்‌ ஒருவரான சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகம்‌ சமர்ப்பித்துள்ள சத்தியக்‌ கடதாசி ஊடாக இந்த விடயம்‌ வெளிப்படுத்தப்பட்‌டுள்ளதுடன்‌ அதுவே பதிவு செய்யப்பட்‌டுள்ளது.

சுகாதார அமைச்சர்‌ கெஹலிய ரம்புக்வெல்ல, தேசிய ஒளடதங்கள்‌ ஒழுங்குபடுத்தல்‌ அதிகார சபை, சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகம்‌ மற்றும்‌ சட்ட மா அதிபர்‌ உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த அடிப்படை உரிமை மீறல்‌ மனுத்தாக்கல்‌ செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி மோகன்‌ பாலேந்ரா ஊடாக தாக்கல்‌ செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்‌, அவரின்‌ ஆலோசனைக்கு அமைய மனுதாரர்களுக்காக சட்டத்தரணிகளான நிஹால்‌ பர்த்‌ தலோமஸ்‌, தில்ஷானி விஜேவர்த்தன, லக்‌ஷ்மனன்‌ ஜயகுமார்‌ ஆகியோருடன்‌ ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கணக ஈஸ்வரன்‌ ஆஜராகிறார்‌.

பிரதிவாதிகளுக்காக அரச சட்டவாதி சிலோமா டேவிட்டுடன்‌ மேலதிக சொலிசிட்டர்‌ ஜெனரால்‌ ஜனாதிபதி சட்டத்தரணி விவேகா சிறிவரீத்தன ஆஜராகின்றார்‌. இந்‌நிலையில்‌ இந்த மனு மீதான ஆரம்பகட்ட பரிசலனைகள்‌ இடம்பெற்றுள்ள நிலையில்‌ மேலதிக பரிசீலனைகள்‌ எதிர்வரும்‌ 2022 ஜனவரி 11ஆம்‌ திகதிக்கு ஒத்தி வைக்கப்‌பட்டது. இந்த மனுவின்‌ ஆரம்பகட்ட பரிசீலனைகள்‌, அண்மையில்‌ உயர்‌ நீதிமன்ற நீதியரசர்‌ எஸ்‌. துரைராஜா தலைமையிலான ஷிரான்‌ குணரத்ன மற்றும்‌ அ௮ச்சல வெங்‌கப்புலி ஆகியோரை உள்ளடக்கிய நீதியரசர்கள்‌ குழாம்‌ முன்னிலையில்‌ பரிசீலிக்கப்‌பட்டிருந்தது.

இதன்போது, தடுப்பூசிகளின்‌ செயல்‌இஇிறன்‌ மற்றும்‌ பாதுகாப்பு தொடர்பில்‌ போதுமான பரீட்சார்த்த மருத்துவ பரிசோதனைகள்‌ இடம்பெறாத நிலையில்‌, அந்த தடுப்பூசிகள்‌ அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே ஒப்புதல்‌ அளிக்கப்பட்டுள்ள நிலையில்‌, கண்மூடித்தனமாக அவற்றை பிள்ளைகளுக்கு செலுத்துவது தொடர்பில்‌ மனுதாரர்‌ தரப்பு நீதிமன்றின்‌ அவதானத்தை ஈர்த்தது.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

அத்துடன்‌ தடுப்பூசிகளை தேர்வு செய்‌வதற்கு அவை தொடர்பில்‌ நடத்தப்பட்ட பரீட்சார்த்த மருதீதுவ பரிசோதனை தரவுகளையும்‌ பொது மக்களுக்கு வெளியிடவில்லை எனவும்‌ மனுதாரர்‌ தரப்பு நீதி மன்றில்‌ சுட்டிக்காட்டியுள்ளது.

தன்‌ உடலில்‌ எதனை செலுத்த வேண்டும்‌, எதனை செலுத்தக்‌ கூடாது என சுயமாக முடிவெடுக்கும்‌ உரிமையை தடுப்பூசி பெறுவதை கட்டாயப்படுத்தும்‌ தற்போதைய நடைமுறை மீறுவதாக அமைந்துள்ளதாகவும்‌ மனுதாரர்கள்‌ தம்‌ பக்க வாதத்தை முன்‌ வைத்துள்ளனர்‌. தன்னார்வ அடிப்படையில்‌ தடுப்பூசிகளைச்‌ செலுத்திக்‌ கொள்‌வதாக இருப்பினும்‌ அதனை தீர்மானிக்க தடுப்பூசி தொடர்பான பூரண தகவல்கள்‌ அவசியம்‌ எனவும்‌ மனுதாரர்கள்‌ சுட்டிக்காட்‌டியுள்ளனர்‌.
இந்நிலையில்‌, இம்மனு தொடர்பில்‌ உயர்‌ நீதிமன்றுக்கு சத்தியக்‌ கடதாசி ஒன்றினை சமர்ப்பித்துள்ள பிரதிவாதிகளுள்‌ ஒருவரான சுகாதார சேவைகள்‌ பணிப்‌பாளர்‌ நாயகம்‌, தாட்டில்‌ தடுப்பூசி செலுத்‌துதல்‌ கட்டாயமாக்கப்படவில்லை எனவும்‌ எதனை உடலில்‌ செலுத்த வேண்டும்‌ எதனைச்‌ செலுத்தக்‌ கூடாது என சுயமாக தீர்‌மானிக்கும்‌ உரிமைக்கு மதிப்பளித்தே தடுப்‌பூசி ஏற்றும்‌ இட்டம்‌ இடம்பெறுவதாகவும்‌ தெரிவித்துள்ளார்‌.

அத்துடன்‌ தடுப்பூசியை கட்டாயப்படுத்தும்‌ எந்த சட்டம்‌, விதிகள்‌ அல்லது தகவல்‌ பரிமாற்றங்களையும்‌ சுகாதார அமைச்சு வெளியிடவில்லை எனவும்‌ அவர்‌ இதன்போது அந்த சத்தியக்‌ கடதாசி ஊடாக உயர்‌ நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்‌.

இந்நிலையில்‌ பிரதிவாதிகள்‌ சார்பில்‌ இவ்வாறு சத்தியக்‌ கடதாசியையும்‌ இணைத்து சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபனைகளுக்கு எதிர்‌ ஆட்சேபனைகள்‌, மனுதாரர்‌ சார்பில்‌ ஆஜராகும்‌ ஜனாதிபதி சட்டத்தரணி கலாதிதி கணக ஈஸ்வரனினால்‌ உயர்‌ நீதிமன்‌றுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதில்‌, எதிர்வரும்‌ 2022 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ முதல்‌ தடுப்பூசி கட்டாயப்‌படுத்தப்படுவதாகவும்‌ பொது இடங்களுக்கு செல்ல இரு தடுப்பூசிகளைப்‌ பெற்றமைக்‌கான தடுப்பூசி அட்டைகளை உடன்‌ வைத்‌திருக்க வேண்டும்‌ என சுகாதார அமைச்சர்‌ கூறியதாக பத்திரிகைகளில்‌ செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கணஈஸ்வரனினால்‌ சுட்டிக்காட்‌டப்பட்டது.

Read:  எரிபொருள் நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?

அத்துடன்‌, பைசர்‌ தடுப்பூசியானது தெற்‌காசியாவில்‌ வசிக்கும்‌ தெற்காசிய சனத்‌ தொகையினர்‌ தொடர்பில்‌ பரீட்சார்த்த மருத்‌துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்‌படவில்லை எனவும்‌ ஆசிய நாடுகளில்‌ தடுப்பூசி தொடர்பான பரீட்சார்த்த மருத்‌துவ பரிசோதனைகள்‌ முன்னெடுக்கப்பட்‌டமைக்கான எந்த ஆதாரங்களும்‌ இல்லை எனவும்‌ மனுதாரர்கள்‌ சார்பில்‌ உயர்‌ நீதிமன்றில்‌ சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது, மன்றில்‌ பிரதிவாதிகளுக்‌காக ஆஜராகும்‌ மேலதிக சொலிசிட்டர்‌ ஜெனரால்‌ விவேகா சிறிவர்தீ்தனவிடம்‌ தடுப்பூசிகள்‌ தொடர்பான பொறுப்பு யாருக்கு உள்ளது என உயர்‌ நீதிமன்றம்‌ வினவியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள மேலதிக சொலிசிட்டர்‌ ஜெனரால்‌ விவேகா சிறிவா்‌த்தன, சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகமே தடுப்பூசி செயற்றிட்டத்தின்‌ அதிகாரமிக்க அரச அதிகாரி எனவும்‌ அவரே அரசாங்கத்தின்‌ தடுப்பூசி சார்‌ நடவடிக்கைகஞக்கு அவரே பொறுப்பாக செயற்படுவார்‌ எனவும்‌ தெரிவித்தார்‌.

இதன்போது சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகம்‌ மன்றுக்கு சமர்ப்பித்துள்ள தடுப்பூசி கட்டாயமில்லை எனும்‌ சத்தியக்‌ கடதாசி தொடர்பில்‌ அவதனித்த நீதியரசர்கள்‌, சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்தநாயகத்தின்‌ ஒப்புதல்‌ இல்லாமல்‌ தெரிவிக்கும்‌ கருத்துக்களுக்கு அக்கருத்துக்களை வெளியிடுவோரே பொறுப்பேற்க வேண்டி வரும்‌ எனவும்‌ சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகத்தின்‌ ஒப்புதலுடன்‌ கருத்துக்களை வெளியிடும்‌ போது குழப்பங்களை தவிர்க்க முடியும்‌ எனவும்‌ சுட்டிக்காட்டினர்‌. தடுப்பூசி கட்டாயமில்லை எனும்‌ விடயத்தை பதிவு செய்த உயர்நீதிமன்றம்‌ மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும்‌ 2022 ஜனவரி 11 ஆம்‌ இகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

(எம்‌.எப்‌.எம்‌.பஸீர்‌) வீரகேசரி 30/12/2021