அக்குறணையில் புறாக்களுக்கு ஓர் அரண்மனை

அக்­கு­ற­ணையில் புறாக்­க­ளுக்கு ஓர் அரண்­மனை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அரண்­ம­னைக்கு 40 இலட்சம் ரூபா செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது.

தூரத்து வானில் பறந்து கொண்­டி­ருக்கும் புறா­வொன்று தனக்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள கூட்­டுக்குள், பறந்து வந்து நுழை­கி­றது. சமா­தா­னத்­திற்கு அடை­யா­ள­மாக கரு­தப்­படும் இந்­தப்­பு­றாக்கள் கார­ண­மாக சண்­டை­யிட்டு அகால மர­ணத்தை தழுவிக் கொண்­ட­வர்­களும் எமது வர­லாற்றில் இல்­லா­ம­லில்லை.

சின்­னஞ்­சி­றிய கூடு­களில் புறாக்­களை ஒரு கூட்­ட­மாக அடைத்து வளர்க்கும் நிலைமை தற்­போது எமது சமூ­கத்தில் காணப்­ப­டு­கி­றது. குறிப்­பாக நகர்ப்­பு­றங்­களில், தோட்­டங்­களில், ஒரே வரி­சை­யாகக் காணப்­படும். சிறிய வீடு­களில் புறாக்­கூ­டுகள் ஓரி­ரண்டு இல்­லாமல் இல்லை. வேலை வாய்ப்­பற்ற இளை­ஞர்கள் புறாக்­களை வளர்த்து அந்தப் புறாக்கள் கார­ண­மாக சண்­டை­யிட்டு உயிர் துறந்த நிகழ்­வு­களும் பொலிஸ் புத்­த­கங்­களில் பதி­யப்­பட்­டுள்­ளன.

என்­றாலும் இவற்­றை­யெல்லாம் புறந்­தள்ளி நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள புறாக்­கூ­டொன்று அக்­கு­றணைப் பிர­தே­சத்தில் அமைந்­துள்­ளது. அது பல­கை­களால் அமைக்­கப்­பட்ட அழ­கான அபூர்­வ­மான இல்­ல­மாகும்.

“நான் சிறு­வ­ய­தி­லி­ருந்தே பெரும் எண்­ணிக்­கை­யி­லான புறாக்­களை வளர்த்­துள்ளேன். பாட­சாலை செல்லும் காலங்­களில் புறாக்கள் வளர்த்தேன். சிறிது காலத்தின் பின்பு புறாக்கள் வளர்ப்­பதை நிறுத்திக் கொண்டேன். புறா வளர்ப்­பதை நிறுத்­தி­யி­ருந்த என்­னிடம் ‘எனக்கு புறா வாங்­கித்­தா­ருங்கள்’ என எனது சிறிய மகன் கேட்டார். மகன் புறா­வுக்கு ஆசைப்­பட்­டதால் அவ­ருக்கு புறா சோடி ஒன்று வாங்­கிக்­கொ­டுத்தேன். அது 2012 ஆம் ஆண்டிலாகும். புறாக்கள் வளர்ப்­பதால் உள­ரீ­தியில் நிம்­மதி கிடைக்­கி­றது என்­பதை நான் உணர்ந்தேன். அதன் பின்பு படிப்­ப­டி­யாக புறா வளர்ப்­பதை எனது பொழு­து­போக்­காகக் கொண்டேன்” என்­கிறார் புறாக்­கூட்டின் உரி­மை­யாளர். எம்.எம்.எம் அஜ்மீர். இவர் அக்­கு­ற­ணையைச் சேர்ந்­தவர்.

புறாக்­களின் இல்லம் வேறு­பா­டான வடி­வ­மைப்பில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அஜ்மீர் ஜப்­பானில் தனது வாகன வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர். பல்­வேறு நாடு­க­ளுக்குப் பய­ணிப்­பதை விரும்பும் ஒருவர்.

நான் எதிர்­கா­லத்­துக்­காக சேமிப்­ப­வ­னல்ல. எவ்­வ­ளவு உழைத்­தாலும் அந்த உழைப்­பினால் பயன்­பெ­றாது, மகிழ்ச்­சி­யாக வாழாது நாளை இறந்­து­விட்டால் எனது சேமிப்­பினால் பலன் இல்லை. நான் செலவு செய்­ய­வேண்டும், துன்­பப்­படும் மக்­க­ளுக்கு, தேவை­யுள்­ள­வர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்­வாறு உத­விகள் செய்­வதன் மூலம் மன­துக்கு மகிழ்ச்சி ஏற்­ப­டு­கி­றது. சிலர் பணத்தை கட்டு கட்­டாகச் சேமிக்­கி­றார்கள். சிலர் ஏனை­யோரின் பணத்­தினால் வாழ்­கி­றார்கள். அவர்­க­ளது வாழ்க்­கையில் நிம்­ம­தி­யில்லை.

Read:  Today Doctors - Akurana - இன்றைய வைத்தியர்கள்

நான் உழைக்கும் பணத்தை நான் விரும்பும் வகையில் ஏனை­யோ­ருக்கு பிரச்­சி­னை­க­ளற்ற வகையில் அனைத்­தையும் செலவு செய்­கிறேன். நான் பெரும்­பா­லான நாடு­க­ளுக்கு விஜயம் செய்­கிறேன். எந்த நாட்­டுக்குச் சென்­றாலும் புறாக்கள் தொடர்பில் தேடிப்­பார்க்­கிறேன். ஆராய்­கிறேன்.

எனது பொழுது போக்­குகள் மூலம் அதி உச்ச பயன்­களை, மகிழ்ச்­சி­யினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்­பதை சிறு­வ­ய­தி­லி­ருந்தே நான் கற்­றுக்­கொண்­டுள்ளேன். அதி­க­மானோர் வீடு­களில் செல்­லப்­பி­ரா­ணி­க­ளாக நாய், பூனை என்­ப­வற்றை வளர்க்­கி­றார்கள். அவர்கள் ஆரம்­பத்தில் அப்­பி­ரா­ணிகள் மீது அன்பு, கருணை கொண்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். ஆனால் அப்­பி­ரா­ணிகள் வயது முதிர்ந்­து­விட்­ட­போது இன்றேல் சுக­வீ­ன­முற்­ற­போது அன்பு, கருணை கொண்­ட­வர்­க­ளாக இருப்­ப­தில்லை. செல்­லப்­பி­ரா­ணி­க­ளுக்­கு­ரிய கூடுகள் சுத்­த­மாக இருப்­ப­தில்லை. அதனால் இப்­பி­ரா­ணிகள் ஒழுங்­காக உறங்க முடி­யாது துன்­பப்­ப­டு­கின்­றன என்கிறார் அவர்.

என்­றாலும் அஜ்மீர் தனது செல்லப் புறாக்­க­ளுக்கு மிகவும் அதி­க­மான வரப்­பி­ர­சா­தங்­களை வழங்­கி­யுள்ளார். இந்தப் புறாக்கள் அரண்­மனைப் புறாக்கள் என்று கூறினால் அது மிகை­யா­காது. அவர் இந்தப் புறாக்­க­ளுக்கு அரண்­மனை அமைத்துக் கொடுத்­துள்ளார். அஜ்­மீ­ருக்கு வெளி­நாட்டு நண்­பர்கள் ஏராளம். அவர்கள் பல்­வேறு நாடு­க­ளி­லுள்ள புறாக்­கூ­டுகள் தொடர்­பான தக­வல்­களை அவ­ருக்கு வழங்­கி­யுள்­ளார்கள். ஜப்­பானில் இவ்­வா­றான புறாக் கூடு­களை நேரில் காண்­ப­தற்கு அவ­ருக்கு சந்­தர்ப்பம் கிட்­டி­யுள்­ளது. சில வகை­யான புறா கூடுகள் அதி­க­ரித்த வெப்ப நாடு­க­ளுக்கு உகந்­தவை. சில குளிர் கால­நி­லைக்கு மாத்­திரம் பயன்­ப­டுத்தக் கூடி­யவை. இவை­பற்றி ஆராய்ந்து அஜ்மீர் எமதுநாட்டு கால­நி­லைக்கு ஏற்ற புறாக்­கூட்­டினை அமைத்­துள்ளார்.

அஜ்­மீரின் புறாக்­கூட்டில் தற்­போது சுமார் 120 புறாக்கள் வாழ்­கின்­றன. இந்த புறாக்­கூடு முழு­மை­யாக மலே­சிய பல­கை­யி­னாலே நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை நிர்­மா­ணிப்­ப­தற்கு அவ­ருக்கு 6 மாத­காலம் தேவைப்­பட்­டது. இந்த புறா இல்லம் 5 பிரி­வு­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இவற்றில் 2 பிரி­வுகள் புறாக்­குஞ்­சு­களை வளர்ப்­ப­தற்கும் பரா­ம­ரிப்­ப­தற்­கு­மா­னது. அத்­தோடு ஆண், பெண் புறாக்­க­ளுக்கு வெவ்­வேறு பிரி­வுகள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

கூட்­டுக்குள் இருக்கும் புறாக்கள் தினமும் சுதந்­தி­ர­மாக வெளிச்­சூ­ழ­லுக்குப் பறப்­ப­தற்கு சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. புறாக்கள் தினமும் நினைத்­த­வாறு சுதந்­தி­ர­மாக வெளியே பறந்து மீண்டும் திரும்­பு­வ­தற்கு புறா இல்­லத்தின் பிர­தான வாசல் திறந்து விடப்­ப­டு­கி­றது. பிறகு பிர­தான வாசல் மூடி­வைக்­கப்­ப­டு­கி­றது. அஜ்மீர் பிர­தான வாச­லுக்­க­ரு­கி­லுள்ள கதவின் சிறிய பகு­திகள் மூன்றைத் திறந்து வைப்பார். வெளியில் சென்று மீண்டும் இல்­லத்­துக்கு திரும்பும் புறாக்கள் அந்த கதவின் மூன்று சிறிய பகு­திகள் ஊடா­கவே உட்புகு­கின்­றன. இல்­லத்­துக்கு உள்ளே வந்­ததும் புறாக்­க­ளுக்கு மீண்டும் வெளியே செல்ல முடி­யாது.

Read:  Akurana Power Cut Time

இந்த புறா இல்­லத்தின் நிர்­மாணம் அபூர்­வ­மா­னது. இலங்­கையில் எப்­ப­கு­தி­யி­லி­ருந்து எனது புறா­வொன்றைப் பறக்க விட்­டாலும் அது மீண்டும் இல்­லத்­துக்கே வந்து சேரும் என்­கிறார்.

புறாக்களுக்கு இந்த இல்லத்தை அமைக்க 40 இலட்சம் ரூபாவை செல­விட்­டதாக அஜ்மீர் கூறுகிறார். அத்துடன் இலங்­கையில் அதிக விலையில் விற்­கப்­படும் புறா ஒன்று தன்­னி­ட­முள்­ளதாகவும் அதனை 20 இலட்சம் ரூபா­வுக்கு வாங்­கியதாகவும் கூறுகிறார்.

அஜ்மீரின் புறா இல்­லத்­துக்குள் தன்­னி­யக்க மின்­வி­சி­றிகள் உள்­ளன. இம் மின்­வி­சி­றிகள் தினம் மூன்று தட­வைகள் தானாக இயங்கும். ஆசி­யா­விலே காணக்­கூ­டிய மிகவும் அபூர்­வ­மான நேர்த்­தி­யான புறா இல்லம் இது­வே­யாகும். இந்த இல்­லத்தை நிர்­மா­ணிக்க அஜ்மீர் 40 இலட்சம் ரூபாய்­களை செல­விட்­டி­ருக்­கிறார்.
‘இலங்­கையில் அதிக விலையில் விற்­கப்­படும் புறா ஒன்றும் என்­னி­ட­முள்­ளது. நான் அதனை 20 லட்சம் ரூபா­வுக்கு வாங்­கினேன். அது ஓட்­டப்­பந்­தய (ரேசிங் புறா) புறா­வாகும். இந்த புறா­வுக்கு சிறிய பயிற்­சி­யொன்றை நாம் வழங்­குவோம் என்­கிறார் அஜ்மீர். ரேசிங் புறா ஹிட்லர் கண்­டு­பி­டித்த புறா­வாகும். இரு வகை­யான புறாக்­களை ஒன்­றி­ணைத்து இன­வி­ருத்தி செய்­யப்­ப­டு­கி­றது.

யுத்த காலத்தில் இந்த புறாக்கள் மூலம் யுத்த செய்­திகள் பரி­மாறப்­பட்­டுள்­ளன. இந்த ரேசிங் புறாவை எங்கே வெளியே விட்­டாலும் அவை மிக விரை­வாக தங்­க­ளது இல்­லத்தை வந்­த­டையும்.

யாழ்ப்­பா­ணத்தில் பறக்க விடப்­பட்ட இந்த ரேசிங் புறா 4 மணித்­தி­யா­லங்­களில் இந்த இல்­லத்தை வந்­த­டைந்­துள்­ளது. வேறு நாடு­களில் புறாக்கள் பணத்­துக்­காக விளை­யாட பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. நான் இவ்­வாறு பணம் உழைப்­ப­தற்­காக புறாக்­களை வளர்ப்­ப­தில்லை. இது எனது பொழு­து­போக்கு.

எங்கோ தொலை­தூ­ரத்தில் பறக்க விடப்­பட்ட புறா மிகவும் வேக­மாக தனது இல்­லத்தை வந்து சேரும் போது மகன், மகள் வீடு வந்து சேரு­வ­து­போன்ற மன­நிலை எனக்கு ஏற்­ப­டு­கி­றது. இந்த மனோ­நி­லையை பணத்­தினால் பெற முடி­யுமா? என்­கிறார் அஜ்மீர்.

புறாக்­க­ளுக்கு அநே­க­மாக தானி­யங்­களே உண­வாக வழங்­கப்­ப­டு­கி­றது. அஜ்மீர் தனது புறாக்­க­ளுக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் தேவை­யான உண­வு­களைப் பெற்­றுக்­கொள்­கிறார். மேல­தி­க­மாக சோளம், கடலை, சிவப்பு அரிசி, நெல், கொள்ளு, கிறீன்பீஸ் போன்ற தானி­யங்கள் கலந்து வழங்­கப்­ப­டு­கி­றது. புறாக்­க­ளுக்குத் தானி­யங்கள் அள­வாக வழங்­கப்­ப­ட­வேண்டும். அள­வுக்கு அதி­க­மானால் புறாக்­க­ளினால் பறக்க முடி­யாது போய்­விடும். மேலும் விட்­டமின் மற்றும் மருந்­துகள் குறிப்­பிட்ட காலத்தில் வழங்­கப்­படும்.

Read:  அக்குறணையை கம்யூனிட்டி கத்தார் - நிதியுதவி (ACQ) - Scholarship Program

நான் புறாக்­களை எனது பிள்­ளை­களைப் போன்றே பரா­ம­ரிக்­கின்றேன். புறாக்­களை அநேகர் விலை கொடுத்து வாங்­கு­வ­தற்கு என்­னிடம் வரு­கி­றார்கள். ஆனால் அது எனது வியா­பா­ர­மல்ல. பொழு­து­போக்கு. ஒரு சோடி புறா வரு­டத்­திற்கு ஒரு­சோடி அல்­லது இரண்டு சோடி குஞ்­சு­க­ளையே பொரிக்­கி­றது. அதற்கு மேலால் இல்லை. இவற்றில் ஒரு சோடியை நான் விற்­று­வி­டுவேன். குஞ்­சுகள் விற்­பனை மூலம் பெறப்­படும் பணத்தை புறாக்­க­ளுக்­கா­கவே செல­வி­டு­கிறேன். எனது தனிப்­பட்ட செல­வுக்­காக அல்ல. புறா வளர்ப்­ப­தற்கு உத­விக்­காக எனக்கு நண்பர் ஒருவர் இருக்­கிறார். ஊழி­யர்கள் சிலரும் இருக்­கி­றார்கள். எனது கடையில் பணி­பு­ரியும் ஒருவர் வந்து புறாக்­க­ளுக்கு உணவு வழங்­கு­வதில் எனக்கு உத­வு­கிறார்.

புறாக்­களில் பல வகை­யுண்டு.அத­ன­டிப்­ப­டை­யிலும் விலை­க­ளிலும் மாற்­றங்கள் உள்­ளன. நான் புறா குஞ்­சொன்றை 50 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்துள்ளேன். வேலையற்ற, தொழிலற்ற எவரும் புறாவளர்ப்பதில் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் வருமானம் ஒன்று இல்லாது புறாக்களை வளர்த்தால் தனது குடும்பம், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாதுபோய்விடும். வேலை செய்து கொண்டு பொழுது போக்காகவே புறா வளர்க்க வேண்டும். படிக்கும் காலத்தில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் கல்வியில் பாதிப்பு ஏற்படும் என அஜ்மீர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அஜ்மீர் ஜப்பானில் வாகன வியாபாரத்தில் ஈடுபடுபவர். அவர் ஜப்பான் அல்லது எந்த நாட்டில் இருந்தாலும் தனது ஓய்வு நேரத்தில் நவீன தொழிநுட்ப வசதிகளூடாக தனது புறா இல்லத்தையே பார்த்துக்கொண்டிருப்பார். அதில் அவருக்குத் திருப்தி ஏற்படுகிறது.

அவரது புறா இல்லத்தினுள் எவராவது நுழைந்தால் அவரது கையடக்கத் தொலைபேசி எச்சரிக்கை ஒலி எழுப்பும். அந்தளவுக்கு அவர் நவீன தொழிநுட்ப பயன்பாடுகளைக் கொண்டுள்ளார்.- நன்றி தேசய.

சிங்களத்தில்: திசானி ஜயமாலி கருணாரத்ன
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
விடிவெள்ளி பத்திரிகை 2021-12-23