ஓர் கசப்பான உண்மைய, சொல்ல வேண்டும்.
ஜனாசா எரிப்பதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஒரு முஸ்லிம் ஜனாதிபதி சட்டத்தரனி முன் வரவில்லை.
முஸ்லிம் சமய தலைவர்கள் முன்வரவில்லை. யாராவது முன்வந்தவர்களுக்கு அவர்கள் அனுசரனை வழங்குவதற்கும் தயாராக இருக்கவில்லை.
பல முஸ்லிம் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என எவரும் முன்வரவில்லை.
குறிப்பிட்ட சில முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் முன்வந்தாலும், நிதிப்பற்றாகுறை, நிதி சேகரிக்க விடாமை என ஓரிரு சம்பவங்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாலே மேற்கொள்ளப்பட்டது.
உண்மையிலேயே ஜனாதிபதி சட்டத்தரனி சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராவதை நினைத்து முஸ்லிம் சமுதாயம் வெட்கப்பட வேண்டும். முஸ்லிம் சமூகம் முதுகெலும்பற்ற, சமூகமாக மாறியதை இங்கு வெளிக்காட்டி தந்திருக்கிறார் சுமந்திரன் அவர்கள்.
எமக்கான குரல், என் சமூகத்திற்கான பலமான குரல் இங்கு இல்லை என்பதனை சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராவதில் உறுதிப்படுத்துகிறது. வெட்கப்பட வேண்டிய விடயத்திற்கு இங்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம். !
சுமந்திரன் வந்ததன் நோக்கம் எனக்கோ,உங்களுக்கோ தெரியாது. ஆனால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதொரு பாடத்தை சொல்லித்தந்து விட்டார் திரு.சுமந்திரன் அவர்கள் !
வெட்கப்பட்டு பதிவு போட வேண்டிய நாம்தான், சுமந்திரனுக்கு வாழ்த்து பதிவு இடுகின்றோம். !
இன்னமும் சமூகத்திற்கான தலைவர், இவர்கள் தான் முஸ்லிம் மக்களின் தலைவர், அந்த தலைவர், இந்த தலைவர் என கூப்பாடு போட்டுக்கொண்டு இன்னமும் தான் வால் பிடிக்க போகிறீர்களா? ஒட்டு மொத்த சமூகத்திற்கான பிரச்சினையின் போதாவது ஒன்று சேர்ந்து பிரச்சினைக்கு முடிவு கட்ட தயாரானார்களா?
ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்டி, அதில் குளிர் காய்ந்து மையத்திலும் அரசியல் செய்த, செய்து கொண்டிருக்கின்ற கேவலமானவர்களுக்கு தான் இங்கு பல பேர் குடை பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். தயவு செய்து அந்த கிணற்றிலிருந்து வெளியே வாருங்கள். !
என் சமூகத்தை நினைத்து வேதனையும், கவலையும் தான் மிச்சம்
Azeem Jahufer 09.05.2020