அரசியல் Vs அறிவியல் – கொரோனா இயற்கையானதா ?

கொரோனா தொற்றின் நெருக்கடி உலக நாடுகளின் அரசியல் பொருளாதார பண்பாட்டு விடயத்தினைக் கடந்து அறிவியலுக்கும் அரசியலுக்குமான போராட்டமாக வெடித்துள்ளது. இரு பிரதான வாதங்கள் கடந்த மார்ச் ஏப்ரல் (2020) மாதங்களில் நிலவியது. அது சீனாவினால் தொற்று பரவியதா? அல்லது அமெரிக்காவால் பரவியதா? என்ற குழப்பம் மாறி மாறி நிலவியது. தற்போது அத்தகைய குழப்பம் வலுத்துள்ள வேளை அறிவியலாளர்களும் அரசியலுக்கு எதிராக கருத்துக்களை உதிர்கக்க ஆரம்பித்துள்ளனர்.

இக்கட்டுரையும் அமெரிக்க சீனத் தரப்புக்கறுளுக்கிடையே ஏற்பட்டுவரும் உச்சமான போராட்டத்திகன் மத்தியில் அறிவியலாளால்களது கருத்துககளையும் நோக்குவதாக அமைந்துள்ளது.

முதலாவது கொரனோ தொற்றினை தெரிந்தே சீனா உண்மையை மறைத்தது. சீனாவிலிருந்து கொரனோ எப்படி வெளியானது என்பது பற்டறி உளவுத்துறை விசாரித்துக் கொண்டிருகிறது. எங்களிடம் இதற்கு நிறைய ஆதாரங்கள் இருகிறது. அதனை சீனா மறைத்து வருகிறது என்பதும் எங்களுக்கு நன்கு தெரியும். இந்த வைரஸ்ன் தோற்றத்தை மறைத்தது உண்மையை மறைத்தது பற்றிய ஆதாரத்தை வெளியிடுவோம். இந்த வைரஸ் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட தென்பதை நாம் நம்புகிறோம். சீனா ஏன் மறைத்தது என்று எமக்குத் தெரியும். தங்கள் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று சீனா மறைத்துள்ளது. தற்போது சீனா ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை நாம் எடுப்போம் எனத் தெரிவித்தார் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக் பாம்பியோ. இதே குற்றச்சட்டை அமெரிக்க ஜனாதிபதியும் பல தடவை முன்வைத்துள்ளார்

இரண்டாவது வைரஸ் சீனாவின் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் உருவாகவில்லை என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிகமாக உண்டு என அமெரிக்காவின் தேசிய தொற்ஞறு நோய்களின் இயக்குனர் ஆண்டனி ப்பாசி குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடும் போது அரசியல் வாதிகளிடமும் நிபுணர்களிடமும் எழுந்துள்ள விவாதம் தவறான வாதம் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் வௌவ்வால்களின் வைரஸின் பரிமாண வளர்ச்சியையும் தற்போது என்ன நடக்கிறது என்பதையும் பார்த்தால் கொரனோ செயற்கையாகவோ அல்லது வேண்டும் என்றோ உருவாக்கப்பட்டிருக்க முடியாது என விஞ்ஞான ஆதாரங்கள் மிக மிக அழுத்தமாக குறிப்பிடுகின்றன. காலப் போக்கில் படிப்படியாக பரிணாமம் குறித்த அனைத்தும் இந்த வைரஸ் இயற்கையில் உருவாகி பின்னர் உயிரினங்களுக்கு பரவியது என்பதை திட்டவட்டமாக காட்டுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது வௌவால் பெண் என அழைக்கப்பட்ட வைரலாஸ் ஆய்வுகூடத்தின் இயக்குனரான ஜெங்லியா என்பவர் இந்த கொரனோ வைரஸுக்கும் எங்கள் வைரலாஜி ஆய்வகத்திற்கும் எந்த தொடர்டபும் இல்லை. சுகாதாரமற்ற வகையில் வாழ்ந்த மனிதர்களுக்கு இயற்கை கொடுத்த தண்டனை என்கிறார்.

நான்கு இன்றுவரை எனது அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதை நூறு வீத நம்பிக்கையுடன்கொரனோ வைரஸ் இயற்கையானது அல்ல. இது வௌவ்வால்களால் ஏற்படவில்லை சீனா அதை தயாரித்ரதது என நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய மருத்துவப் பேராசிரியர் கூச்ண்தடுத ஏணிணடீணி குறிப்பிடுகின்றார்.

ஐந்தாவது கொரனோ குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்த பிட்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரும் பேராசிரியரு மான பிங் லியூ அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் கொரனோ தொடர்பில் முக்கிய கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து கொண்டிருந்த போதே அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரைச் சுட்டவர் அவரது காரிலேயே தன்னைச் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லியூ ஒரு சீன நாட்டவர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எனவே அரசியல் வாதிகள் ஊகத்தின் அடிப்படையில் வாதிப்பது என்னவோ உண்மைதான் அதிலும் அமெரிக்க அரசியல்வாதிகள் அதிகம் உலகத்தை ஊகத்தின் மூலமே கடந்த காலத்தில் ஆதிக்கம் செய்தனர். அதனையே தற்போதும் செய்ய முயல்வதாக தெரிகிறது. அல்லது அத்தகைய ஊகத்தை சீனர்கள் கைப்பற்றிவிட்டார்கள் என்று அதிர்வுகளை தெரிவிக்கிறார்களோ தெரியவில்லை. சீனா மீதான குற்றச்டசாட்டுகள் நிராகரித்த உலக சுகாதார நிறுவனம் ஆதாரம் இல்லாத வாதங்களை அமெரிக்கா முன்வைப்பதாக பதிலளித்துள்ளது.

ஆனால் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் அதிகமாக உள்ளன. முதலாவது ஜப்பானி நோபல் பரிசு பெற்ற மருத்துவரின் அறிவிப்பும் ஆண்டனி ப்பாசியின் கருத்தும் அதிக முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. ப்பாசி ஒரு அமெரிக்கர் என்ற அடிப்படையிலேயே அத்தகைய கருத்தினை புறந்தள்ள முடியாதுள்ளது. அதே நேரம் பேராசிரியர் பிங் லியூ சுட்டுக் கொல்லப்பட்ட விதமும் அதிகமான சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது. உலகில் சி.ஐ.ஏ கே.ஜி.பி. மொஸாட் போன்றஉளவு நிறுவனங்களின் நடவடிக்கைகளை அவதானித்தால் இந்த விடயத்தினை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். உலகிலுள்ள அனைத்து உளவு நிறுவனங்களதும் நடவடிக்கைகள் வேறுபட்டதாக அமைவதுடன் தனித்துவமானதாகவும் தெரியும். அதனடிப்படையில் பேராசிரியரது படு கொலையானது திட்டமிட்டது என்பதுடன் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியதாக தெரிகிறது. அதே நேரம் வௌவால் பெண் காணாமல் போனதாகவும் சீனா அப்பெண்ணை கொலை செய்து விட்டதாகவும் மேற்குலக ஊடகங்கள் தெரிவித்த கருத்தும் திடீரென அவரது பதிவு மீள உறுதிப்படுத்தப்பட்டதும் கவனத்திற்குரியதாகும். இதில் ஜப்பானியப மருத்துவர் அமெரிக்காவுடன் பயணிப்பது ஒன்றும் புதிய விடயம் கிடையாது அது வழமையானது தான். ஆனால் அமெரிக்க பேராசிரியர் சீனாவுக்கு ஆதரவாக கருத்து கூறுவதே கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே உலகளாவிய ரீதியில் அமெரிக்காவும் சீனாவும் அதி தீவிரமாக மோதிக் கொண்டிருக்கின்றன. அதில் தற்போது விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவு சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் நடவடிக்கையாக மாறிவிட வாய்ப்புள்ளது. அமெரிக்கரைப் பொறுத்தவரை சீனர்களது ஏற்றுமதி அதிகரித்துவிட்டது என்பதே குழப்பமே அன்றி உலகளாவிய ரீதியில் மனித அழிவுகளல்ல என்பது பாம்பியோவின் கருத்து தெளிவுபடுத்தியிருகிறது. (கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்)

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page