உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவு ஏற்படலாம் என அச்சம்

அம்பாறை சங்கமன்கந்த இறங்குதுறைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடலில் தீபற்றிய நியூ டைமைன் கப்பல் இன்று (04) காலை 5 மணியாகும் போது 25 கடல் மைல்கள் கரை நோக்கி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, ´இந்த கப்பல் மூலம் வெளியேறும் எரிப்பொருள் வலய ரீதியாகவும், உலகிலும் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என அத தெரணவின் பிஸ் போகஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி தர்சினி லஹந்தபுர கூறினார்.

´கிரிந்தையில் இருந்து கிழக்கே உள்ள கடற்பகுதிக்கு இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அது உலகில் மிகப்பெரிய எண்ணய் கசிவை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. குறித்த கப்பின் எரிபொருள் களஞ்சியசாலையில் சிறிய துளையொன்று ஏற்பட்டாலும் அதனை தடுக்க தயாராவதற்கு காலம் போதாது´ எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை ´எண்ணெய் கசிவு ஏற்பட்டவுடன், அது திடப்படுத்துகிறது. இது கிரீஸாக மாறி நீரில் மிதக்கிறது. ஆந்தளவு இந்த அளவு கிரீஸ் அருகம்பே, நிலாவெளி, வாகரை மற்றும் திருகோணமலை கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் அவ்வாறுவந்தால் அவற்றை அகற்ற சிறிது காலம் எடுக்கும்´ என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் தர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

´அவ்வாறு அகற்றினாலும் எம்மால் சுமார் 60 சதவீதத்தையே அகற்ற முடியும்´ என அவர் கூறினார்.

எனினும் 40 சதவீதத்தை அகற்ற முடியாது. ஒவ்வொரு மணற்கல்லையும் சுத்தம் செய்ய முடியாது. எண்ணெய் அடுக்கு அதன் உண்மை நிலைக்கு திரும்ப 25 அல்லது 30 வருடங்கள் எடுக்கும். ஏன அவர் கூறினார்.

எண்ணெய் மென்மையாய் இருப்பதால் திமிங்கலங்கள், ஆமைகள் போன்ற விலங்குகள் தண்ணீரிலிருந்து மேல் எழும்ப முடியாத நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.

கப்பலின் மேல்புறத்தில் நீர் மட்டத்திலிருந்து 20 மீட்டர் வரை எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார், வெடிக்கும் நேரத்தில் கப்பலின் கொதிகலனுக்குள் மட்டுமே தீ பரவியது.

இருப்பினும், கப்பலின் கேப்டன் தீயை அணைக்க முயற்சிக்காமல் அந்த பகுதியை மூடியுள்ளார். அந்த நேரத்தில் தீயைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

பனாமா நாட்டு கொடியுடன் பயணித்த நியூ டயமண்ட் என்ற குறித்த எண்ணை தாங்கி கப்பல் ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு, குவைத்தில் உள்ள மினா அல் அஹ்மதி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு 38 கடல் மைல்களுக்கு அப்பால் பயணித்து கொண்டிருந்த போது கப்பலின் சமயலறையில் உள்ள எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்து நேற்று (03) தீபிடித்திருந்தது.

23 பேர் அடங்கிய கப்பல் பணியாளர்களில் 22 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எனினும் கப்பலில் பயணித்த பிலிப்பினிய நாட்டவர் ஒருவர் உயிரழந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 2,70,000 மெற்றிக்தொன் எரிபொருளுக்கு இதுவரை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கடற்படை உறுதிப்பட தெரிவித்துள்ளது.

தீப்பற்றி உள்ள கப்பலின் தற்போதைய நிலையின் அடிப்படையில் இலங்கைக்கு  எவ்வித ஆபத்தும் இல்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Previous articleஇன்றைய தங்க விலை (04-09-2020) வெள்ளிக்கிழமை
Next articleநியூ டயமண்ட் கப்பலின் தீ பரவல் கட்டுக்குள்! இந்திய கடலோர காவல்படை தகவல்