அம்பாறை திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் பலி

Update: திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
சிகிச்சைப்பெற்றுவருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை −திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் நடத்தப்பட்ட. துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகளுடன் எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

பெற்றுள்ளதாகவும் துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சாஜனை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் லீவு கோரியுள்ளார். அவருக்கு லீவு வழங்கததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்தனர் .

சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

– பாரூக் ஷிஹான் – சரவணன்

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Sri Lanka Gold Price

-தமிழன்.lk– (2021-12-25 06:44:40)