தோல்விகரமான அரசாங்கத்தின் இறுதிக்கட்ட திருகுதாளங்கள்

“மனிக்கே மகே ஹித்தே’ பாடல்‌ மூலம்‌, சர்வதேச ரீதியில்‌ பிரபலமடைந்த பாடகி யொஹானி டி சில்வாவுக்கு, கொழும்பின்‌ பத்தரமுல்ல, ரொபர்ட்‌ குணவர்த்தன வீதியில்‌ 9.68 பேர்ச்சர்ஸ்‌ காணியை வழங்குவதற்கு அரசாங்கம்‌ தீர்மானித்து இருக்கின்றது. குறித்த காணியின்‌ தற்போதைய மதிப்பு, 75 மில்லியன்‌ ரூபாயாக இருக்கும்‌ என்று கணிக்கப்படுகின்றது.

இலங்கையில்‌ கொழும்பு நகரப்‌ பகுதி, யாழ்ப்பாணத்தின்‌ நல்லார்‌ ஆகிய பிரதேசங்களின்‌ காணிப்‌ பெறுமதி, கடந்த சில ஆண்டுகளில்‌ பல மடங்காக அதிகரித்திருக்கின்றது. அதுபோல, கொழும்பின்‌ புறநகரான பத்தரமூல்ல பகுதியிலும்‌, கடந்த பத்து ஆண்டுகளில்‌ காணிப்‌ பெறுமதி பல மடங்கு அதிகறித்திருக்கின்றது.

கொழும்பு நகரப்‌ பகுதியில்‌ நீடிக்கும்‌ இட நெருக்கடியைக்‌ குறைக்கும்‌ முகமாக அரசாங்கம்‌, தன்னுடைய நிர்வாகக்‌ கட்டமைப்பின்‌ அமைச்சுகள்‌, திணைக்களங்கள்‌ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை, கொமும்பு நகருக்கு வெளியில்‌ நிர்மாணிக்கும்‌ முடிவுக்கு வந்தது.

அதனையடுத்து, பத்தரமுல்ல மற்றும்‌ அதனை அண்டிய பகுதிகள்‌ அதற்காகத்‌ தெரிவு செய்யப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளில்‌, கணிசமான கட்டுமானங்கள்‌ முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறான நிலையில்‌, கொழும்பு நகருக்கு ஈடான நிலையை (குறிப்பாக காணிப்‌ பெறுமதியில்‌) கொழும்பின்‌ புறநகரான பத்தரமுல்லவும்‌ அடையத்‌ தொடங்கியது. அப்படிப்பட்ட முக்கிய பகுதியொன்றிலேயே யொஹானிக்கான காணியையும்‌ அரசாங்கம்‌ வழங்கியிருக்கின்ற து.

மூத்த படைத்துறை அதிகாரிகள்‌, பிரபலமான கிறிக்கெட்‌ வீரர்கள்‌ உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்காக, கடந்த காலங்களிலும்‌ அரசாங்கம்‌ காணிகளை வழங்கியிருக்கின்றது. யொஹானிக்கும்‌ அப்படியோர்‌ அணுகுமுறையிலேயே காணி வழங்கப்பட்டிருக்கின்றது.

பொருளாதார ரீதியில்‌ நாடு செங்குத்தான வீழ்ச்சியைச்‌ சந்தித்திருக்கின்ற தருணத்தில்‌, அரசாங்கத்தின்‌ மீதான அதிருப்தி, தென்‌ இலங்கையில்‌ சொல்லிக்‌ கொள்ள முடியாத அளவுக்கு அதிகறித்திருக்கின்றது.

அப்படியான நிலையில்‌, யொஹானியின்‌ பாடல்‌ திடீரெனப்‌ பிரபலமடைந்தமையை அரசாங்கம்‌, தன்னுடைய நலனுக்காக பயன்படுத்த எத்தனித்தது. குறிப்பாக, அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புணர்வுகள்‌ மேலும்‌ அதிகரிக்காமல்‌ இருப்பதற்கான கவனக்கலைப்பானாக, யொஹானியின்‌ திடீர்‌ பிரபலம்‌ பேணப்பட்டது.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Sri Lanka Gold Price

தென்‌ இலங்கை ஊடகங்களில்‌ நாட்டின்‌ பொருளாதார வீழ்ச்சி பற்றிய உரையாடல்களைக்‌ காட்டிலும்‌, யொஹானி பேசு பொருளானார்‌. அது சில வாரங்களுக்கு, அரசாங்கத்துக்கு ஆசுவாசத்தை அளித்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும்‌ வகையில்‌, அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துப்‌ பாராட்டவும்‌ அரசாங்கம்‌ திட்டமிட்டது. ஆனால்‌, அதற்கு எதிரான விமர்சனங்கள்‌ எழுந்ததை அடுத்து, அந்தத்‌ திட்டம்‌ கைவிடப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே, பிரதமர்‌ மஹிந்தவின்‌ முன்மொழிவின்‌ மூலம்‌, யொஹானிக்கான காணியை அரசாங்கம்‌ வழங்கியிருக்கின்றது.

யொஹானிக்கான காணி வழங்கப்படுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்‌ வழங்கிய தினத்தன்று யாழ்ப்பாணம்‌, மந்திகைப்‌ பகுதியில்‌ இளைஞர்‌ ஒருவர்‌ பட்டத்தோடு சேர்ந்து 100 அடிக்கும்‌ அதிகமான உயரம்‌ பறந்தார்‌. அவரை, அவரது நண்பர்கள்‌ ஒருவாறாகக்‌ காப்பாற்றினார்கள்‌. இந்த விடயம்‌ உள்ளூர்‌ ஊடகங்களில்‌ மாத்திரமல்லாமல்‌, சர்வதேச ஊடகங்களிலும்‌ கவனம்‌ பெற்றது. பட்டத்தோடு சேர்ந்து பறந்த தன்னுடைய திகில்‌ அனுபவங்களை, ஊடகங்களில்‌ சம்பந்தப்பட்ட இளைஞர்‌ பகிர்ந்து வருகிறார்‌. கடந்த நாள்களில்‌ திடீரென அவர்‌ பிரபலமானார்‌. அப்படியான நிலையில்‌, யொஹானிக்கு வழங்கப்பட்டது போல, குறித்த இளைஞருக்கும்‌ காணியை அரசாங்கம்‌ வழங்குமா என்ற கேள்விகளை, சமூக ஊடகங்களில்‌ பலரும்‌ எழும்பி வருகிறார்கள்‌. ஏனெனில்‌, யொஹானி எப்படி சமூக ஊடகங்களால்‌ பிரபலமடைந்தாரோ அதுபோல, பட்டத்தோடு பறந்த இளைஞரும்‌ சமூக ஊடகங்களாலேயே பிரபலமடைந்திருக்கிறார்‌ என்பது அவர்களது வாதம்‌.

யொஹானிக்கு நாட்டின்‌ முக்கிய பகுதியில்‌ காணியை வழங்கும்‌ அரசாங்கம்‌, வடக்கு, கிழக்கில்‌ தனியாரின்‌ பல்லாயிரம்‌ ஏக்கர்‌ காணிகளை அடாத்தாக இன்னமும்‌ பிடித்து வைத்திருக்கின்றது. இன்றைக்கும்‌ யாழ்ப்பாணத்தில்‌ கரையோரங்களில்‌ படையினருக்காக காணிகளை அளவிடும்‌ முயற்சிகள்‌ தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. காணிகளின்‌ சொந்தக்காரர்கள்‌ ஒவ்வொரு நாளும்‌, தங்களது காணியை எப்படிக்‌ காப்பாற்றுவது என்று அறியாது இருக்கிறார்கள்‌.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Sri Lanka Gold Price

வலிகாமம்‌, கேப்பாப்புலவு தொடங்கி வடக்கு, கிழக்கில்‌ இராணுவம்‌ உள்ளிட்ட படைத்துறைக்‌ கட்டமைப்பு பிடித்து வைத்திருக்கும்‌ காணிகள்‌ விடுவிக்கப்பட வேண்டும்‌ என்று பொதுமக்கள்‌ பல வருடங்களாக அறவழிப்‌ போராட்டங்களையும்‌ சட்டப்‌ போராட்டங்களையும்‌ நடத்தி வருகிறார்கள்‌. ஆனால்‌, அவற்றுக்கெல்லாம்‌ எந்த வகையிலும்‌ அரசாங்கம்‌ இறங்கி வந்திருக்கவில்லை.

அவை தொடர்பில்‌, தென்‌ இலங்கை ஊடகங்களில்‌ என்றைக்கும்‌ கவனம்‌ பெற்றதுமில்லை. தங்களது காணிகளை மீட்கப்‌ போராடி வரும்‌ மக்களை பிரிவினைவாதிகளாக சித்திரிக்கும்‌ நிலையே, இதுவரை தென்‌ இலங்கையில்‌ பேணப்பட்டு வந்தது. ஆனால்‌, கடந்த ஒன்றரை ஆண்டுகளில்‌, சொந்தக்‌ காணிகளைப்‌ பாதுகாத்தல்‌ என்பது, எவ்வளவு முக்கியமானது என்ற விடயத்தை தென்‌ இலங்கை மக்களும்‌ உணரத்‌ தொடங்கிவிட்டார்கள்‌.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின்‌ முக்கிய பகுதிகளிலுள்ள காணிகளை, சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும்‌ திட்டங்களை அரசாங்கம்‌ முன்னெடுத்து வருகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்துக்கு இன்னொரு நாட்டுக்கு காணிகளை, எந்தத்‌ தீர்க்கதரிசனமும்‌ இல்லாமல்‌ அரசாங்கமொன்று வழங்குமென்றால்‌, அந்த நாட்டின்‌ எதிர்காலம்‌ கேள்விக்குறியானது.

ஒரு நூற்றாண்டு காலம்‌ என்பது, நான்கு, ஐந்து தலைமுறைகளுக்கான காலம்‌. அந்தக்‌ காலப்பகுதியின்‌ உள்நாட்டு வெளிநாட்டு அரசியலும்‌, இராஜதந்திர சூழலும்‌ எவ்வாறான மாற்றங்களை எல்லாம்‌ அடைந்திருக்கும்‌ என்று சொல்ல முடியாது.

அப்படியான நிலையில்‌, குத்தகைக்கு பெற்ற நிலங்களை சீனாவோ அல்லது இன்னொரு தரப்போ மீண்டும்‌ கையளிக்கும்‌ நிலை இருக்குமோ என்பது நிச்சயமில்லை. எப்படி வடக்கு, கிழக்கில்‌ மக்களின்‌ காணிகளை அடத்தாக பிடித்து

வைத்திருக்கும்‌ படைத்துறைக்‌ கட்டமைப்பு இன்றைக்கு நடந்து கொள்கின்றதோ, அவ்வாறான நிலையை, சீனா பேணாது என்று எப்படி ராஜபக்ஷர்கள்‌ கருதுகிறார்கள்‌ என்று தெரியவில்லை. இந்த விடயத்தைக்‌ குறித்து, தென்‌ இலங்கையில்‌ அங்கொன்றும்‌ இங்கொன்றுமாக தற்போது கேள்விகள்‌ எழத்தொடங்கி இருக்கின்றன.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Sri Lanka Gold Price

இலங்கைக்குள்‌ சீனா இன்றைக்கு செலுத்திக்‌ கொண்டிருக்கும்‌ அதிகாரத்துக்கு, அண்மையில்‌ யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த சீனத்‌ தூதுவரின்‌ நடவடிக்கைகளை உதாரணமாகச்‌ சொல்லலாம்‌.

யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய விஜயத்தின்‌ போது, பருத்தித்துறை முனைக்‌ கடற்கரைக்குச்‌ சென்ற சீனத்தூதுவர்‌, அங்கு ‘ட்ரோன்‌’ கமெராவைப்‌ பறக்க விட்டு அவதானித்து இருக்கின்றார்‌. இன்னொரு நாட்டுக்குள்‌ வெளிநாடொன்றின்‌ தூதுவர்‌ ‘டரோன்‌’ கமெராவைப்‌ பறக்க விடுகிறார்‌ என்றால்‌, அது எவ்வளவு தூரம்‌ பாரதூரமானது என்பது தெறியும்‌.

இராஜதந்திர ரீதியில்‌, இலங்கை தன்னுடைய பிடிக்குள்‌ இருக்கின்றது; எந்தவித கேள்விகளையும்‌ எழுப்ப முடியாது என்ற விடயத்தை வெளிப்படுத்துவதற்காகவே முனைக்‌ கடற்கரையில்‌ சீனத்தூதுவர்‌ டரோனைப்‌ பறக்க விட்டார்‌. அதன்‌ மூலம்‌, இந்தியாவுக்கான செய்தியையும்‌ அவர்‌ சொல்லியிருக்கின்றார்‌.

இலங்கையின்‌ பொருளாதார வீழ்ச்சியைப்‌ பிணையெடுக்கும்‌ நடவடிக்கைகளில்‌ இந்தியா ஈடுபட்டுக்‌ கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில்‌, இலங்கையை இந்தியா பிணையெடுத்தாலும்‌, இலங்கை மீதான தன்னுடைய பிடி மிகவும்‌ இறுக்கமானது என்று சீனத்தூதுவரின்‌ யாழ்‌. விஜயம்‌ உணர்த்தி இருக்கின்றது.

இவ்வாறான நிலையில்‌, அதனையெல்லாம்‌ தென்‌ இலங்கை காணாது, இருப்பதற்காக யொஹானிக்கு காணி வழங்கும்‌ விடயம்‌, ராஜபக்ஷர்களால்‌ முன்னிலைப்படுத்தப்பட்டு, ஊடகங்களில்‌ கவனம்‌ பெற்றிருக்கின்ற து.

தோல்விகரமான ஓர்‌ அரசாங்கத்தின்‌ இறுதி கட்ட திருகுதாளங்களை, இவ்வாறான விடயங்களின்‌ மூலம்‌ செய்து, மக்களை ஏமாற்ற முனைகிறார்கள்‌. அதனை மக்கள்‌ தெளிவாகப்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌. இல்லையென்றால்‌, இலங்கையின்‌ மீட்சி என்றைக்குமே நிகழாது.

-புருஜோத்மன் தங்கமயில்- தமிழ் மிரோர் 23/12/2021