ஒரு லீட்டர் பெட்ரோலில் அரசுக்கு 69 ரூபா இலாபம்

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைந்து செல்லும் நிலையில் இலங்கையில் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் எரிபொருட்களை சேமித்துக் கொள்வதற்கு மக்களுக்கு தண்டனையாக எரிபொருட்களின் விலையை அதிகரித்திருப்பது வரலாற்றில் முதல் தடவையாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பொரலஸ்கமுவ பெபிலியான பிரதேசத்தில் நேற்று நடத்திய சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைந்துசெல்லும் நிலையில் அரசாங்கம் எரிபொ ருட்களின் விலையை அதிக ரித்திருக்கின்றது. மேற்குலகில் பரவிவரும் கொவிட் தொற்று மற்றும் ஐக்கிய நாடுகள், சீனா மற்றும் இந்தியா தங்களது எண்ணெய் தொகையில் இருந்து ஒரு பகுதியை வர்த்தக சந்தைக்கு விட்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

2021 டிசம்பர் மாதம் 92 வகை பெற்றோல் பெரல் ஒன்று 85 டொலருக்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் ஒரு டொலரின் உத்தியோக பூர்வ பெறுமதியான 203 என்ற அடிப்படையில் ஒரு பெரல் சுமார் 17,255 ரூபாவாகும். அதன் பிரகாரம் சாதாரணமாக பெற்றோல் ஒரு லீட்டர் 108 ரூபாவாகும்.

அதன் பிரகாரம் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் மூலம் 69 ரூபா லாபம் பெறப்படுகின்றது. அதேபோன்று 95 வகை
பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம் 99ரூபா லாபம் கிடைக்கின்றது.

மேலும் போக்குவரத்து செலவு, கூட்டுத்தாபனத்தின் செலவு விற்பனையாளர்களின் செலவு கள்அனைத்தையும் லீட்டருக்கு 10ரூபா என எடுத்துக்கொண்டால் 92வகை பெற்றோல் ஒரு லீட்டர் மூலம் 59 ரூபா லாபம் பெறப்படுகின்றது. அதே போன்று 95 வகை பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம் 89ரூபா லாபம் கிடைக்கின்றது.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price

அதேபோன்று இரண்டுவகை டீசல் எண்ணெய்களையும் 85 டொலர்களுக்கே டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அப்படியாயின் இரண்டுவகை டீசல்கள் மூலம் முறையே 26 ரூபா மற்றும் 41 ரூபா என்ற அடிப்படையில் லாபம் இருக்கின்றது.

அத்துடன் எரிபொருட்களின் விலை அதிகரிக்க முடியுமாக இருப்பது நிதி அமைச்சரின் அனுமதியுடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்காகும். ஆனால் எரிபொருட்களின் தேவையை குறைத்துக்கொள்வதற்காக எரிபொருட்களின் விலை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய வங்கியின் ஆளுநரே முன்வைத்தார்.

அதன் பிரகாரம் விலை அதிகரிப்பை கூட்டுத்தாபனம் மேற்கொண்டது. அதனால் வலு சக்தி அமைச்சினால் பொதுஜன பெரமுன, பெற்றொலிய கூட்டுத்தாபனம் உட்பட நிறுவனங்களுக்கு பாரிய குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, விலை அதிகரிப்பை மூடிமறைக்கும் ஊடக சந்திப் பொன்று எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.

இலங்கையில் பாரிய முதலீடாக 600 பில்லியனுக்கு புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாகவும் மன்னார் குடாவில் எண்ணெய் ஆய்வின் மூலம் 47 டொலர் பில்லியன் கடன் செலுத்துவது தொடர்பாகவும் கற்பனை கதைகளை சொன்னாலும் எரிபொருட்களை சேமித்துக்கொள்வதற்கு மக்களுக்கு தண்டனையாக எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பது வரலாற்றில் முதல் தடவையாகும் என்றார்.

Thinakural – Yarl – 23/12/21 P9