எண்ணை கப்பல் தீ விபத்து – சற்று முன் வௌியான காட்சிகள்:-

கிழக்கு கடலில் தீப்பற்றி எரியும் கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக அதில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய்க்கு இதுவரை எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

தீ குறித்த கச்சா எண்ணெய் களஞ்சியத்தை நோக்கி பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்தது.

அதேபோல், விபத்துக்குள்ளான கப்பல் இன்று (04) காலை வரை சுமார் 12 கடல் மைல் தூரம் தரைப்பகுதி நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு சென்றுக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் இலங்கை விமானப்படையினர், கடற்படையினர் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

b5cb4a3e90cbe0ddfaf6f81192b05a32
NEWDIAMONDfire3
NEWDIAMONDfire4

பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘நியூ டைமண்ட்’ கப்பல், குவைத்தில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு சென்றுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் மாலுமி, பொறியாளர்கள் என 23 ஊழியர்கள் இருந்தனர்.

இந்த கப்பல் நேற்று (03) இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் சென்ற போது அதன் இயந்திர பகுதியில் ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் தீப்பிடித்துள்ளது.

பின்னர் அது கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் 2 போர் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு பணிகளை மேற்கொண்டன.

கப்பலில் இருந்த ஊழியர்கள் 19 பேர் உயிர்காக்கும் படகுகள் மூலம் கப்பலில் இருந்து வெளியேறினர். அவர்களை இலங்கை கடற்படை கப்பல்கள் மீட்டன. மேலும் கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக உள்ளதாக கடற்படை தெரிவித்து உள்ளது. மேலும் கப்பலில் காணாமல் போயிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NEWDIAMONDfire5
NEWDIAMONDfire6

இதற்கிடையே கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது. எனவே இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா ஆகிய 3 கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் டோர்னியர் விமானம் ஒன்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக இலங்கைக்கு விரைந்தது.

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா

இரண்டாவது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. கப்பலில் ஊழியர்கள் தங்கியிருந்த பகுதியில் பிடித்த தீயை இந்திய கடலோர காவல் படையின் தீயணைப்பு குழுவினர் விரைவாக அணைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மற்ற பகுதியில் தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ஏற்கனவே தீப்பிடித்த இடத்தில் மீண்டும் தீப்பற்றாமல் தவிர்ப்பதற்காக குளிரூட்டும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கு கரையில் இருந்து 37 மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.