‘அம்மலட ஆசா கொல்லோ’ : பேஸ்புக் பக்கத்தை வைத்திருந்த பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் ‘அம்மலட ஆசா கொல்லோ’ (Ammalata Aasa Kollo) என்ற சர்ச்சைக்குரிய பேஸ்புக் பக்கத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டுக்காக பொலிஸ் கான்ஷ்டபள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேஸ்புக் பக்கம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விசனங்களை தொடர்ந்து இந்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 27 வயதுடைய கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பயிற்சி கான்ஷ்டபளான இவர் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விசாரணையில் சுமார் 600 நபர்கள் குறித்த பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?