முடிவெட்டவே அனுமதி தாடி, மீசைக்குத்‌ தடை

உள்ளுர்சிகை அலங்கார மற்றும்‌ அழகு நிலையங்களை மீண்டும்‌ திறக்க அனுமதிப்பதும்‌ அதற்கான வழிகாட்டுதல்கள்‌ குறித்தும்‌ சுகாதார சேவைகள்‌ பணிப்பாளர்‌ நாயகம்‌ டாக்டர்‌ அனில்‌ ஜாசிங்க அனைத்து மாகாண மற்றும்‌ மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்‌.

இந்த வழிகாட்டுதல்களானது நாட்டின்‌ அனைத்து சிகை அலங்கார மற்றும்‌ அழகு நிலையங்களுக்கும்‌ அனுப்பி வைக்கப்படும்‌ என்று சுகாதார அமைச்சின்‌ பதில்‌ பணிப்‌பாளர்‌ நாயகம்‌ லக்ஷ்மன்‌ கமலத்‌ கூறினார்‌.

அந்த உத்தரவுகளின்‌ படி சிகை அலங்கார ஊழியர்கள்‌ முடிவெட்டுவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்‌. தாடி மற்றும்‌ மீசை வெட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின்‌ உதடுகள்‌ மற்றும்‌ வாயுடன்‌ தொடர்புகளை தடுக்கும்‌ நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ இருவருக்கும்‌ குறுகிய நியமனங்கள்‌ மட்‌டுமே பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில்‌ ஒரு வாடிக்கையாளருக்கு பயன்படுத்தப்‌படும்‌ எந்ததுணியையும்‌ இன்னொருவருக்கு மீண்டும்‌ பயன்படுத்த முடியாது.

அனைத்து ஊழியர்களும்‌ N95 முகக்‌ கவசம்‌ அணிய வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்தல்கள்‌ கூறுகின்றன, அதே நேரத்தில்‌ சிகையலங்கார மற்றும்‌ அழகு நிலையங்களை திறப்பதற்கு முன்பும்‌ பின்பும்‌ கிருமி நீக்கம்‌ செய்யப்படுவதும்‌ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும்‌ நிலையத்தின்‌ கழிவுகளை பைகளில் சேகரித்த பின்னர்‌ அவற்றை அழிக்கும்‌ படியும்‌ பணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்‌தில்‌ அனைத்து நிலையங்களின்‌ நுழைவாயிலில்‌ கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும்‌ அத்துடன்‌ நிலையத்தின்‌அனைத்து ௨ளழியர்‌களிடையேயான தினசரி வெப்பநிலையை சோதனை செய்யவும்‌ உத்தரவு பிறப்பிக்கப்‌பட்டுள்ளது.

இதேவேளை சிகையலங்கார மற்றும்‌ அழகு நிலையங்களை மீண்டும்‌ இறக்க விரும்‌பும்‌ உரிமையாளர்கள்‌ குறித்த பகுதிக்கான சுகாதார மருத்துவ அதிகாரிகளிடம்‌ அனுமதிக்கான கோரிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும்‌ பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு இணங்க சிகையலங்‌கார மற்றும்‌ அழகு நிலைய வளாகங்கள்‌ சுகாதார அதிகாரிகளினால்‌ பரிசோதிக்கப்படுவதுடன்‌, பின்னர்‌ பாதுகாப்பு நிலைமைகள்‌ உறுதிப்படுத்தப்பட்டால்‌ நிலையங்களை மீண்டும்‌ திறப்பதற்கு சான்றிதழ்‌ வழங்கப்‌படும்‌.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available

SOURCEதினக்குரல் 08-05-20