மீண்டும் நாட்டில் மின்சார தடை

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செயற்பாடுகள் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி அமைச்சு கூறுகிறது.

அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மின் தொகுப்பில் 900 மெகாவாட் முழு கொள்ளளவை சேர்ப்பது மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

-தமிழ் மிற்றோர் (2021-12-22 09:14:30)

Read:  அனைத்து வரிகளையும் நிதி அமைச்சு அறவிடுவது ஏன்? ரணில் கேள்வி