பாத்திமா ரிஸானா சம்பந்தமாக அவரது கணவர் தெரிவித்த முழுமையான விடயம்.

நள்ளிரவு தாண்டி நித்திரைக்கு தயாராகிக்‌ கொண்டிருந்த பவ்ஸுல்‌ இஹ்ஸானின்‌ செவிகளில்‌ அவரது அன்பு மனைவி பாத்திமா ரிஸானாவின்‌ மரணச்‌ செய்தியே வந்தடைந்தது.

நிலை குலைந்து போன அவர்‌ தனது பிள்ளைகளுக்கு தாயாகவும்‌ தனக்கு சிறந்த மனைவியாகவும்‌ இருந்த அவர௬ுடனான நினைவுகளை மீட்டியவாறே ஜனாஸாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும்‌ என்ற ஒரேயொரு ஆவலுடன்‌ கண்ணீருடன்‌ காத்திருக்‌கின்றார்‌.

இல்லத்தரசியான 46 வயதான பாத்திமா ரிஸானாவுக்கு 2018 ஆம்‌ ஆண்டின்‌ மார்ச்‌ மாதத்தில்‌ புற்றுநோய்‌ இருப்பது கண்டறியப்பட்டது. இலங்‌கையில்‌ சுமார்‌ எட்டு மாத காலமாக புற்று நோய்க்காக சிகிச்சைகளை எட்டு கட்டங்களாக இவர்‌ மேற்கொண்டு வந்தார்‌. இலங்கையில்‌ உள்ள சிகிச்‌சைகள்‌ பயனளிக்காத காரணத்தினால்‌ கடந்த வருடம்‌ நவம்பர்‌ 21 அன்று மேலதிக சிகிச்சைகளுக்காக பாத்திமா ரிஸானா தனது கனவருடன்‌ இந்தியா வுக்குச்‌ சென்றார்‌.

குடும்ப உறுப்பினர்கள்‌ இருவர்‌ சகிதம்‌ இவர்கள்‌ இந்தியா சென்றபோது உலகில்‌ கொரோனா அச்சுறுத்தல்‌ ஏற்பட்டிருக்கவில்லை. இந்த நிலைமிலேயே மிகவும்‌ சிக்கலான சத்திரி சிகிச்சைகளில்‌ ஒன்றான எலும்புமச்சை மாற்று அறுவை சிகிச்சை (800௨ நவா ராகா) யுடன்‌ ஏனைய சிகிச்சைகளும்‌ கடந்த ஒன்பது மாத காலமாக இடம்பெற்றன.

“இருபதாம்‌ திகதி அதிகாலையில்தான்‌ இலங்கைக்கு இருவரும்‌ வந்து சேர்ந்தோம்‌. பி.சி.ஆர்‌ பரிசோதனை உட்பட ஏனைய எல்லா வேலைகளையும்‌ முடித்துவிட்‌:டு தனிமைப்‌படுத்தல்‌ ஹோட்டல்களில்‌ ஒன்றான நீர்கொழும்புக்கு வந்து சேரவே 11 மணியாகி விட்டது. இருவரும்‌ வழமை போல பேசி கதைத்துக்‌ கொண்டிருந்தோம்‌” என்‌ விடிவெள்ளிக்கு இஹ்ஸான்‌ கருத்து தெரிவித்தார்‌.

இரவு 8.30 மணியளவில்‌ கைகளுக்குள்‌ சினுங்கிய தனது தொலைபேசிக்கு பதிலளித்த இஹ்ஸானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது மனைவிக்கு கொவிட்‌19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்‌ அவரை தற்போது மாரவிலயில்‌ உள்ள தொற்று நோய்கள்‌ வைத்தியசாலைக்கு அழைத்துச்‌ செல்ல வேண்டும்‌ என்றும்‌ அந்த தொலைபேசி அழைப்பு அறிவித்தது. அதிர்ச்சியிலும்‌ கவலையிலும்‌ உறைந்து போன அவர்‌ இதை தனது மனைவியிடம்‌ தெரிவிக்க சங்கடப்‌பட்டார்‌.

தனது மனைவியிடம்‌ தங்களுக்கு கொவிட்‌ தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்று சொல்லும்‌ தைரியம்‌ அவருக்கு இருக்கவில்லை. “உங்கட பி.சி.ஆர்‌. டெஸ்ட்ல சின்ன பிரச்சினையாம்‌. கொஞ்சம்‌ பென்டிங்ல இருக்காம்‌. நீங்க ஹொஸ்பிடல்ல ரெண்டு நாள்‌ நிக்கனுமாம்‌” என்று கூறியே தனது மனைவியை தேற்றியதாக இஹ்ஸான்‌ தெரிவித்தார்‌.

புற்று நோயிலிருந்து அவர்‌ நலம்‌ பெற்றிருந்த போதும்‌ ரிஸானா முழுமையாக தேகாரோக்கியம்‌ பெற்ற ஒருவர்‌ கிடையாது. அவருடைய இதயம்‌ பலவீனமாகவே உள்ளதாக இந்திய வைத்தியர்கள்‌ அறிக்கை வழங்கியிருந்தார்கள்‌. தனியாக விடக்கூடிய நிலையில்‌ அவர்‌ இருக்கவில்லை. அவரது நீரிழிவினை அடிக்கடி பரிசோதித்து இன்சுலின்‌ மற்றும்‌ ஜுஸ்‌ கொடுக்க வேண்டும்‌. சக்கர நாட்காலி இல்லாமல்‌ அவரால்‌ நடக்க முடியாது. எதையும்‌ தனித்து செய்ய முடியாத உடல்‌ நிலையில்தான்‌ ரிஸானா இருந்தார்‌.

தனக்கு கொவிட்‌ தொற்று இருப்‌பதை ரிஸானா அறியாத போதும்‌ அன்புக்‌ கணவரை பிரிந்து செல்லமனமில்லாமல்‌ அழுதார்‌. “அல்லாஹ்‌… எனக்கு போக ஏலா’ என்று சொல்லி அழுத ரிஸானாவை ஒருவாறு இஹ்ஸான்‌ தேற்றுவதற்கு முயற்சி செய்தார்‌. தானும்‌ கூட வருவதாக இஹ்ஸான்‌ சொன்ன போதும்‌ அவருக்கு கொவிட்‌ தொற்று இல்லை என்பதால்‌ அதிகாரிகள்‌ அவரை அனுமதிக்கவில்லை. உங்களை விட நாங்கள்‌ பாதுகாப்பாக பார்த்துக்‌ கொள்வோம்‌ என இஹ்ஸானுக்கு ஆறுதல்‌ சொல்லி ரிஸானாவை கூட்டிச்‌ சென்றனர்‌.

Read:  மீண்டும் ரணில் !!

தனக்கு கொவிட்‌ தொற்று இருப்‌பதை உணர்ந்து கொண்ட இஹ்‌ஸானின்‌ மனைவி மன ரீதியாக ‘அதிகம்‌ பாதிக்கப்பட்டார்‌. மிகவும்‌ கொடுமையான புற்றுநோயிலிருந்து மிகுந்த போராட்‌டத்திற்கு மத்தியில்‌ மீண்டு வந்‌த ரிஸானாவுக்கு இந்த சுமையையும்‌ ஏற்றுக்கொள்ளும்‌ தெம்பு இருக்கவில்லை.

கொரோனா சிகிச்சைகளுக்கு மத்தியில்‌ இரண்டு முறை மாரடைப்பு எற்பட்ட ரிஸானா இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்‌! அரசாங்க தகவல்‌ திணைக்‌களம்‌ இலங்கையில்‌ கொரோனாவால்‌ இடம்பெற்ற 12 ஆவது மரணமாக இவரது மரணத்தை வெளியிடுகின்றது. கொவிட்‌19 தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களை அடக்கம்‌ செய்வது தொடர்பாக கடந்த ஏப்ரல்‌ மாதம்‌ 11 ஆம்‌ திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில்‌, இலங்கையில்‌ கொவிட்‌ 19 தொற்று ஏற்பட்டு மரணிப்பவர்கள்‌ அல்லது கொவிட்‌19 காரணமாக மரணித்திருக்கலாம்‌ என சந்தேகிப்‌படும்‌ பூதவுடல்கள்‌ பொது சுகாதார சேவைகள்‌ பணிப்பாளரால்‌ அங்கீகரிக்கப்பட்ட ஒரு தகன மயானத்தில்‌ 800-1200 செல்சியஸ்‌ வெப்பத்தில்‌ குறைந்தது 45 நிமிடத்திற்கு எரிக்கப்‌பட வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்‌டிருந்தது.

இஸ்லாமிய சட்டத்தின்‌ அடிப்‌டையில்‌ ஜனாஸாவை எரிப்பது சமயத்‌திற்கு முரணான விடயம்‌ என்பதால்‌ முஸ்லிம்‌ ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி அடக்கம்‌ செய்ய அனுமதி வழங்க வேண்டும்‌ என முஸ்லிம்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ உட்பட இலங்கை முஸ்லிம்‌ மக்கள்‌ இஸ்லாமிய அமைப்புகள்‌ என பல்வேறு பகுதிகளில்‌ இருந்தும்‌ அழுத்தங்கள்‌ பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. சமூகவலைதளங்களிலும்‌ ஊடகங்களிலும்‌ பெரியளவில்‌ விவாதிக்கப்படும்‌ ஒருவிடயமாக இந்த ஜனாஸா எரிப்பு விவகாரம்‌ இருந்து வருகின்றது.

தனது மனைவியின்‌ இழப்பை தாங்‌கிக்கொள்ள முடியாத இஹ்ஸானுக்கு அடுத்த பிரச்சினையாக இருந்தது ஜனாஸாவை நல்லடக்கம்‌ செய்யும்‌ இந்த விடயம்தான்‌. என்ன முயற்சி செய்தாலும்‌ ஜனாஸாவை எரிப்பது நிச்சயம்‌ என்பது அவருக்கு ஓரளவு உறுதியாக இருந்தது. இஹ்ஸானும்‌ தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில்‌ தனது மனைவியின்‌ முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும்‌ என்ற ஆசை கானல்‌ நீராகக்‌ கூடாதென எண்ணம்‌ ஓடிக்கொண்டிருந்தது.

தனது மனைவிக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று ஏன்‌ என்னை தாக்கவில்லை என்ற கேள்வி இந்த நேரத்தில்‌ இஹ்ஸானுக்கு எழுந்தது. தனது சந்தேகத்தை இஹ்ஸான்‌ உரிய அதிகாரிகளிடம்‌ வெளிப்படுத்தினார்‌.

உண்மையில்‌ தனது மனைவியின்‌ மரணத்திற்கு கொரோனா தொற்றுதான்‌ காரணம்‌ என மரணத்தில்‌ சந்தேகம்‌ எழுப்பினார்‌ அவர்‌! அதிகாரிகள்‌ பி.சி.ஆர்‌ பரிசோதனையின்‌ மூலப்பிரதிகளை காட்டியிருந்த போதும்‌ தனது மனைவியின்‌ உடலை ஊடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இஹ்ஸான்‌ கேட்டுக்கொண்டார்‌.

Read:  மீண்டும் ரணில் !!

கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தவரை உடற்கூறாய்வு பரிசோதனைக்கு உட்படுத்தும்போது மருத்துவ அதிகாரிகள்‌ பாதிக்கப்படும்‌ அதேவேளை சுற்றுச்சூழல்‌ அச்சுறுத்தலும்‌ எற்படும்‌ என்ற காரணத்தினாலேயே உடற்கூறாய்வு பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. என்றபோதிலும்‌ இஹ்ஸான்‌ மரணத்தில்‌ சந்தேகத்தை வெளிப்படுத்தவே அதிகாரிகள்‌ இந்தப்‌ பிரச்சினையை தீர்க்க முன்வந்‌தனர்‌.

இஹ்ஸானின்‌ வேண்டுகோளுக்குப்‌ பின்னர்‌ பொது மருத்துவ அதிகாரிகள்‌ சங்கம்‌ மற்றும்‌ தொற்றுநோய்கள்‌ வைத்‌தியசாலையின்‌ பணிப்பாளர்‌ என்பவர்‌களின்‌ பரிந்துரையின்‌ பேரில்‌ ஜனாஸாவின்‌ நுரையீரல்‌ மற்றும்‌ இதயத்தின்‌ ஒரு பகுதியின்‌ மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொரோனாவின்‌ பாதிப்பு அதிகம்‌ ஏற்பட்டுள்‌ளதா அல்லது இதர காரணங்களால்‌ அதிகமான பாதிப்பு இருக்கின்றதா என்பதை அவதானிக்கலாம்‌ என இஹ்‌ஸானுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனாஸாவை எரிப்பதற்கு முன்னர்‌ உடற்கூறாய்வு பரிசோதனைக்கு மாற்றமாக இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை மருத்துவ நிர்வாகம்‌ வழங்கிய போதும்‌ அதை செய்ய இஹ்ஸான்‌ விரும்பவில்லை. இது தொடர்பாக விடிவெள்‌ளிக்கு கருத்து தெரிவித்த அவர்‌ “ஜனாஸாவுக்கு அதிகம்‌ வேதனைகளை கொடுக்கக்கூடாது என்ற காரணத்திற்‌காக அவர்கள்‌ தந்த வாய்ப்பை நான்‌ பயன்படுத்தவில்லை” என்றார்‌.

ஆனால்‌ இப்போது வரை எனக்கு கொரோனா அறிகுறிகள்‌ எதுவும்‌ இல்லை” என இஹ்ஸான்‌ தெரிவித்தார்‌.

சமூக வலைதளங்களில்‌ ஒரு ஜனாஸாவை வைத்துக்கொண்டு லைக்ஸ்‌களை அள்ளுவதற்கு ஒரு கூட்டமும்‌ அரசியல்‌ இலாபம்‌ அடைய இன்‌னொரு கூட்டமும்‌ பார்த்துக்கொண்டிருந்த வேளையில்‌ மனைவியை இழந்த கணவனும்‌ தாயை இழந்த நான்கு பிள்ளைகளும்‌ தமது உறவை ஜனாஸாவாகவாவது ஒரு முறை பார்த்துவிட வேண்டும்‌ என துடித்தனர்‌. இந்நிலையில்‌ இஹ்ஸான்‌ மற்றும்‌ அவரது உறவினர்கள்‌ என சகலருக்கும்‌ ஜனாஸா தொழுகையை நிறைவேற்‌றுவதற்கும்‌ ஜனாஸாவை சுகாதார நெறிமுறைகளை பேணி பார்வையிடுவதற்கும்‌ சுமார்‌ 60 பேர்‌ ஜனாஸா தொழுகையில்‌ கலந்து கொள்வதற்கு அரசாங்கம்‌ அனுமதி வழங்கியது. இதன்போது ஐ.டி.எச்‌ நிர்வாகம்‌ தன்னை உணர்வு ரீதியாக அனுசரித்ததாக இஹ்ஸான்‌ மனம்‌ திறக்கிறார்‌.

இஹ்ஸான்‌ தனிமைப்படுத்தல்‌ விடுதிமில்‌ இருந்து இலங்கை இராணுவத்தினரால்‌ தகன மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்‌. பாதுகாப்பான முறையில்‌ ஜனாஸாவை பார்வையிட ஜனாஸா தொழ அவருக்கு சந்தர்ப்பம்‌ வழங்‌கப்பட்டது. தகனம்‌ செய்யும்‌ இடம்‌ வரை செல்வதற்கு இஹ்ஸானுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும்‌ அவர்‌ தனது உறவின்‌ உடல்‌ எரிந்து சாம்பலாகுவதை பார்க்கத்‌ துணிவில்லாமல்‌ அதை மறுத்துவிட்டார்‌. ஜனாஸா தொழுகை தொழுவிக்கப்பட்ட ரிஸானாவின்‌ ஜனாஸா அக்கினியில்‌ சங்கமமானது.

“இலங்கை இராணுவத்தினர்‌ நல்ல முறையில்‌ எங்களை நடத்தினார்கள்‌. ஐ.டி.எச்‌ நிர்வாகத்திற்கு அல்லாஹ்‌ நற்‌கூலி வழங்க வேண்டும்‌. எனது மனைவியை அவர்கள்‌ நல்ல முறையில்‌ பார்த்துக்கொண்டார்கள்‌. இலங்கையில்‌ கொரோனாவால்‌ மரணித்த ஏனைய ஜனாஸாக்களின்‌ உறவினர்களுக்கு வழங்காத சலுகைகளை அரசாங்கம்‌ வழங்கியிருக்கின்றது. அதற்கு நன்‌றிகள்‌. ஜனாஸா எரிக்கப்பட்டது எங்களுக்கு கவலைதான்‌. ஆனால்‌ நாட்டின்‌ சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு நாங்கள்‌ இந்த முடிவை மதிக்கிறோம்‌” என இஹ்ஸான்‌ தெரிவிக்கின்றார்‌.

Read:  மீண்டும் ரணில் !!

இஹ்ஸானின்‌ சகோதர உறவுகள்‌ மற்றும்‌ ரிஸானாவின்‌ உறவினர்கள்‌ என பலரும்‌ உலமா சபை, அமைச்‌சர்கள்‌, பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ மற்றும்‌ முக்கிய பிரமுகர்கள்‌ என பலருடன்‌ கலந்துரையாடி ஜனாஸாவை எரிக்காமல்‌ அடக்கம்‌ செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர. “ஜனாஸாவை கையில்‌ தர வேண்டாம்‌. எங்கேயாவது ஒரு இடத்தில்‌ அடக்கம்‌ செய்து விடுங்கள்‌” என்று இஹ்ஸான்‌ கேட்டிருந்தார்‌. ஆனால்‌ என்னதான்‌ இருந்தாலும்‌ வர்த்தமானியில்‌ வெளியான ஒரு விடயத்தை மருத்துவ அதிகாரிகள்‌ நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளனர்‌ என்பதால்‌ அவை பயனற்றுப்‌ போயின.

“எவ்வாறாக இருந்தாலும்‌ ஐ.டி.எச்‌ இன்‌ சேவைகள்‌ மற்றும்‌ எங்களை கவனித்துக்‌ கொண்ட விதம்‌ என்பன எனக்கு ஆறுதலாக உள்ளது. வைத்தியர்கள்‌ ஊழியர்கள்‌ இராணுவ வீரர்கள்‌ எங்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தற்கு நன்றி” என இஹ்ஸான்‌ தெரிவிக்கின்றார்‌.

இறுதியாக மரணித்தவரின்‌ ஜனாஸாவும்‌ எரிக்கப்பட்டதைத்‌ தொடர்ந்து ஜனாஸா எரிப்பு விடயம்‌ மீண்டும்‌ பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும்‌ சமூக வலைத்தளங்களில்‌ தமது கண்‌டனத்தை வெளிப்படுத்தினர்‌. புதிதாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள்‌ இதுவிடயத்தில்‌ அசட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்‌. எனினும்‌ இது தொடர்‌பான வர்த்தமானி அறிவித்தலில்‌ மாற்றங்களைச்‌ செய்வதற்கான எந்தவித சாதகமான சமிக்ஞைகளையும்‌ இதுவரை காணமுடியவில்லை

இந்நிலையில்‌ இலங்கையில்‌ கொரோனா தொற்றாளர்களின்‌ எண்ணிக்கை நேற்று நண்பகல்‌ வரை 2984 ஆக அதிகரித்துள்ளது. இதில்‌ 2830 பேர்‌ குணமடைந்து வீடு சென்றுள்ளனர்‌. 12 பேர்‌ உயிரிழந்துள்ள அதேவேளை 11 பேர்‌ இன்னமும்‌ வைத்தியசாலையில்‌ சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின்‌ பேரில்‌ 83 பேர்‌ வைத்தியசாலையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌.

கொரோனா தொற்றினால்‌ இறந்து போகின்றவர்கள்‌ இந்து, இஸ்லாம்‌, பெளத்தம்‌, கிறிஸ்தவம்‌ என எந்த சமயத்தை சேர்ந்தவராக இருந்தாலும்‌ அவர்களுக்கு தொற்று இருப்பதை நூறு வீதம்‌ உறுதி செய்யக்‌ கூடிய பொறிமுறைகளை அரசாங்கம்‌ கையாள வேண்டும்‌ என இஹ்ஸான்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

மேலும்‌ ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராடுவதால்‌ எந்த பயனும்‌ கிடைக்கும்‌ என எதிர்பார்க்க முடியாது. வர்த்தமானியில்‌ இவ்வாறனதொரு விடயம்‌ சட்டமாக்கப்பட்டிருக்கின்றது. எனவே முயற்சிப்பதால்‌ வீணான சிரமம்தான்‌ ஏற்படும்‌ என உயிரிழந்த ரிஸானாவின்‌ மகன்‌ ஆக்கில்‌ அஹமட்‌ தெரிவிக்கின்றார்‌.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

SOURCEவிடிவெள்ளி 28-08-2020