மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை காவலாளி கைது!

குருணாகல், நிகவெரட்டிய பகுதியில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலை காவலாளி ஒருவரை கைது செய்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வுலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறிவித்ததையடுத்து, அதிகாரசபையின் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்தி விசாரணைகளையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 39 வயதானவர் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சிறுமிகளின் பெற்றோர் ஆகியோரிடம் விசேட பொலிஸ் விசாரணைப்பிரிவினர்  வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் சந்தேகநபர் ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகள் மூவரை பாலியல் துஷ்பியோகம் செய்தமை தொடர்பில், சந்தேகநபர் நிகவெரட்டிய நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இலங்கையின் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Get daily Srilanka gold rate to your mobile- Click above link & send the SMS – 2.5+tx/msg-Mobitel-2/day if balance available