ஜனாஸாக்களை எடுத்துச் செல்ல 85 ஆயிரம் ரூபா அறவிடுகின்றனர்

‘கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தூர பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து ஓட்­ட­மா­வடி மஜ்மா நக­ருக்கு எடுத்துச் செல்லும் போக்­கு­வ­ரத்து செலவு பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளதால் மக்கள் பெரும் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து ஓட்­ட­மா­வ­டிக்கு ஜனா­ஸாக்­களைக் கொண்டு செல்ல தற்­போது 85 ஆயிரம் ரூபா அற­வி­டப்­ப­டு­கி­றது. எனவே அர­சாங்கம் இது விட­யத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க வேண்டும்’ என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் அவர்­மேலும் தெரி­விக்­கையில்; ‘அண்­மையில் நான் யாழ்ப்­பாணம் சோனக தெருவில் முஸ்லிம் சமூ­கத்தைச் சந்­தித்தேன். அவர்கள் இந்த முறைப்­பாட்­டினை என் முன்­வைத்­தனர். முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மல்ல அடக்­கத்தை விரும்பும் கிறிஸ்­த­வர்­களும் அதி­க­ரித்­துள்ள போக்­கு­வ­ரத்து கட்­ட­ணத்­தினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

எனவே அர­சாங்கம் மக்­க­ளுக்கு இவ்­விவகாரத்தில் நிவா­ரணம் வழங்க வேண்டும். போக்­கு­வ­ரத்து செலவில் 50 வீதத்தை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வேண்டும். இல்­லையேல் வடக்­கிற்கு என கொவிட் 19 மைய­வா­டி­யொன்­றினை இனங்­கா­ண­வேண்டும். இது வடக்­கிற்கோ, யாழ்ப்­பா­ணத்­துக்கோ மாத்­தி­ர­மான பிரச்­சி­னை­யல்ல. மேல்­மா­கா­ணத்தில் கொழும்பில் இருந்து ஓட்­ட­மா­வ­டிக்கு ஜனா­ஸாவை கொண்டு செல்ல சுமார் 45 ஆயிரம் ரூபா அற­வி­டப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலை­மை­யையே வடமேல் மாகாண மக்­களும் எதிர்­கொண்­டுள்­ளார்கள்.

மக்கள் தற்­போது பொரு­ளா­தார நெருக்­க­டி­யினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதிகரித்த கட்டணத்தை அவர்களால் செலுத்த முடியாது திண்டாடுவதைக் காண முடிகிறது.இந்நிலைமையை சமாளிப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) – விடிவெள்ளி பத்திரிகை 16/12/2021 Pg-01

Read:  ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்கிறார் ஜயசுமான