திடீரென மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தம்புள்ளை பேருந்து நிலையத்தின் கழிப்பறைக்கு முன்னால் இராணுவ சிப்பாய் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் பிரதேச மக்கள் சிலர் இணைந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கலேவெல, பல்லேபொல பிரதேசத்தை சேர்ந்த துஷார குமார ஜயசிங்க என்பவராகும்.

தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கழிப்பறைக்கு சென்ற இராணுவ சிப்பாய் தனது பயணப் பையை கழிப்பறைக்கு வெளியே வைத்து சென்றுள்ளார். வௌியே வந்த கழிப்பறைக்கு பணம் வழங்கும் திடீரென சிப்பாய் கீழே விழுந்துள்ளார்.

பார்ப்பதற்கு இராணுவ சிப்பாய் போன்று இருந்ததனை அறிந்துக் கொண்ட மக்கள், அரை மணி நேரம் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

அவ்விடத்தில் சில இராணுவ சிப்பாய்கள் இருந்தும் அவரை காப்பாற்ற ஒருவரும் முன்வராத நிலையில், இளைஞர் மற்றும் யுவதிகள் சிலர் இணைந்து இராணுவ சிப்பாயை முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளனர்.

எனினும் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter