மத்தளையில் நெதர்லாந்து விமானம், காலியில் நெதர்லாந்து கப்பல்

நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று 230 பணியாளர்களுடன் இன்று மத்தளை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

தற்போது காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நெதர்லாந்துக்கு சொந்தமான கப்பலொன்றின் பணியாளர்களை அழைத்துக்கொண்டே இந்த விமானம் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. மனிதாபிமான செயற்பாடாக குறித்த விமானம் மத்தளை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதோடு அதில் பயணித்த அனைவரும் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளனர்.

தற்போது காலி துறைமுகத்தில் உள்ள குறித்த கப்பலில் பணியாற்றும் 53 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு இன்றிரவு 8.30 மணிக்கு குறித்த விமானம் நெதர்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.

இந்நிலையில் விமானத்தில் அழைத்துவரப்பட்ட பணியாளர்களை தற்போது மேற்படி கப்பலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters