ஒருபுறம் மனிதர்களின் உயிரை வேட்டையாடிய கொரோனா, மறுபுறம் சத்தமின்றி நடந்த சில நிகழ்வுகள்

கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுதும் பல நாடுகளில் நீண்டகால ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகளவில் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன, குறைவான ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கை முன்னிட்டு பூமியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது,

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் மக்களின் உயிருக்கு பாதிப்பளிக்கும் கொடூரமான நோயாக இருந்தாலும், மற்றொரு புறம் கொரோனா பூமிக்குப் பல நல்ல மாற்றங்களையே கொண்டுவந்துள்ளது என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.

சாத்தியமே இல்லை என்று நினைத்த பல காரியங்களை இந்த கொரோனா நிகழ்வு செய்து காட்டியுள்ளது.

குறைந்த காற்று மாசு, குறைந்த கடல் மாசு, வெப்பநிலையில் மாற்றம் மற்றும் ஓசோன் படலத்திலிருந்த மாபெரும் ஓட்டை அடைந்தது என்று பல மாற்றங்கள் பூமியில் கடந்த சில வாரங்களில் நடந்தேறியுள்ளது. அந்த வரிசையில் விஞ்ஞானிகள் பூமியில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மற்றொரு மாற்றத்தை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்

பூமியில் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திடாத மாற்றமாக, இந்த மாபெரும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது என்று நில அதிர்வு ஆய்வாளர்கள் அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பூமியில் மனித நடமாட்டம் மற்றும் வாகன சலசலப்பு ஆகியவை பெருமளவில் குறைந்துள்ளது. இந்த கடுமையான அதிர்வுகள் குறைந்ததால் பூமியின் அதிர்வுகள் ஒட்டுமொத்தமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

இதனால் பூமி குறைவாக நகர்த்துவதற்குக் காரணமாகி கிரகம் ‘அசையாமல்’ நிற்பது போன்று பதிவுகள் பதிவாகியுள்ளது.

செய்சமொலொஜிஸ்ட்ஸ் (seismologists) என்று அழைக்கப்படும் நில அதிர்வு வல்லுநர்களால் சேகரிக்கப்பட்ட பூமியின் நில அதிர்வு தரவுகள், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சேகரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் சேகரித்துள்ள தகவல்கள் மிகவும் துல்லியமாகி வருகிறது, மிகச்சிறிய நடுக்கத்தைக் கூட இந்த கருவிகள் கண்டறியும் திறன் கொண்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பல அறிவியல் கருவிகள் நகர மையங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த தகவல்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மேற்கு லண்டனில் ஆராய்ச்சியாளர்கள் இதேபோன்ற போக்கைக் கண்டறிந்துள்ளனர்.

இதேபோல் பூமியில் உள்ள பல இடங்களில் இதுவரை நிலவி வந்த நில அதிர்வுகள் முற்றிலுமாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் கொரோனா தோற்று மனிதர்களின் உயிரை வேட்டையாடி வருகிறது. ஆனால், மறுபுறம் இதுவரை சாத்தியமே இல்லை என்று நினைத்த நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page