மாத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு

மாத்தளை- எல்கடுவ பிரதேசத்திலுள்ள காடொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த காட்டுக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற ஒருவர், சடலங்களை கண்டு, மாத்த​ளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, குறித்த இருவரும் சில தினங்களுக்கு முன்னர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்கடுவ- ஹுணுகல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒரு பிள்ளையின் தந்தையும் எல்கடுவ தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில், மாத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ் மிற்றோர் (2021-12-05 11:43:54) மஹேஸ் கீர்த்திரத்ன

Read:  ஜெய்லானியில் பள்ளியாக இயங்கும் கொட்டிலை அகற்றுக