அவுஸ்திரேலியாவில்‌ நாடுகடத்தல்‌ போராட்டத்தில் ஈடுபடும் தமிழ்‌ குடும்பத்துக்கு நஷ்டஈடு

அவுஸ்திரேலியாவில்‌ இருந்து நாடு கடத்‌தப்படக்‌ கூடாது என போராட்டத்தில்‌ ஈடுபட்டு வரும்‌ இலங்கைத்‌ தமிழ்‌ அகதி குடும்பத்துக்கு இரண்டு இலட்சம்‌ டொலர்‌களை நஷ்டஈடாக வழங்க வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்‌தப்படுவதற்கு எதிரான சட்டப்‌ போராட்‌டத்தில்‌ இலங்கைத்‌ தமிழ்‌ அகதிகளான பிரியா – நடேஸ்‌ மற்றும்‌ அவர்களது இரு குழந்தைகளும்‌ ஈடுபட்டு வரும்‌ நிலையில்‌, இவர்களுக்கான சட்ட செலவினங்கஞக்கான நட்டஈடாக சுமார்‌ 2 இலட்சம்‌ டொலர்களை அரசாங்கம்‌ வழங்க வேண்டுமென அந்நாட்டு சமஷ்டி நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்ளது.

பிரியா – நடேஸ்‌ முருகப்பன்‌ மற்றும்‌ அவர்களின்‌ இரண்டு மகள்களும்‌ சுமார்‌ இரண்டு வருடங்களாகத்‌ தடுத்து வைக்கப்‌பட்டுள்ள நிலையில்‌ தங்களை நாடு கடத்‌துவதற்கெதுிரான போராட்டத்தில்‌ ஈடுபட்டுவருகின்றனர்‌.

இந்தநிலையில்‌ பிரியா – நடேஸ்‌ தம்பதியினரின்‌ இரண்டாவது மகள்‌ தருணிகாவின்‌ விண்ணப்பம்‌ பாரபட்சமின்றி பரிசீலிக்‌கப்படவில்லை என பெடரல்‌ நீதிமன்றம்‌ அண்மையில்‌ தீர்ப்பளித்தது. குறிப்பாக தருணிகாவின்‌ விண்ணப்பத்திற்கு நடைமூறை நேர்மை காண்பிக்கப்படவில்லை என சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மார்க்‌ மோஷின்ஸ்கி தெரிவித்திருந்தார்‌.

இதையடுத்து குறித்த விவகாரத்தில்‌ பிரியா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சட்ட செலவவினங்களுக்கென 206,034 டொலர் களை அரசாங்கம்‌ வழங்கவேண்டுமென நீதிபதி மார்க்‌ மோஷின்ஸ்கி உத்தரவிட்‌டுள்ளார்‌.

பிரியா – நடேஸ்‌ மற்றும்‌ அவர்களின்‌ குழந்தைகளை கடந்த வருடம்‌ ஆகஸ்ட்‌ மாதம்‌ 2௦ ஆம்‌ திகதி இலங்கைக்கு நாடு

கடத்தும்‌ முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இதற்கான சிறப்பு விமானம்‌ அவர்களை ஏற்‌றிக்கொண்டு புறப்பட்ட போதிலும்‌ இறுதி நேரத்தில்‌ குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின்‌ அடிப்‌படையில்‌, நீதிமன்றம்‌ கடைசி நிமிடத்தில்‌ தடையுத்தரவை பிறப்பித்தது. இதனைத்‌
தொடர்ந்து விமானம்‌ டார்வினில்‌ தரையிறங்கியது. பின்னர்‌ இந்தக்‌ குடும்பத்தினர்‌ கிறிஸ்மஸ்‌ தீவுக்கு அனுப்பப்பட்டனர்‌.

இதையடுத்து தருணிகாவின்‌ பாதுகாப்பு குறித்தும்‌ அவரின்‌ சூழ்நிலைகளை உள்‌துறை அமைச்சர்‌ மதிப்பீடு செய்திருக்கவேண்டுமா என்பது குறித்தும்‌ விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம்‌ தீர்ப்பு வழங்குவதற்கு கால அவகாசம்‌ எடுத்து தீர்ப்பு வழங்‌கியது.

இதன்படி பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின்‌ விண்ணப்பம்‌ தொடர்பில்‌ முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்‌ எனவும்‌ இவ்விசாரணை முடியூம்‌ வரை அவர்‌ நாடுகடத்தப்படக்கூடாது எனவும்‌ நீதிபதி மார்க மோஷின்ஸ்கி தெரிவித்திருந்தார்‌.

தருணிகா குழந்தை என்பதால்‌ அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்‌ பிரித்து நாடுகடத்த முடியாது என்பதால்‌ அக்‌ குடும்‌பமும்‌ நாடுகடத்தலிலிருந்து தப்பித்திருந்த பின்னணியில்‌ கிறிஸ்மஸ்‌ தீவு தடுப்பு முகாமிலேயே தொடர்ந்தும்‌ தங்கவைக்கப்பட்‌டுள்ளனர்‌.

இவ்வாறான நிலையிலேயே இவர்களுக்‌கான சட்ட செலவினங்களுக்கான நட்டஈடாக சுமார்‌ 2 இலட்சம்‌ டொலர்களை அரசாங்கம்‌ வழங்கவேண்டுமென அவுஸ்திரேலிய சமஷ்டி நீதிமன்றம்‌ உத்தரவிட்டுள்‌ளது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page