நேற்றைய தினம் கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 8 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (31) சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஉலகின் மிக நீண்ட பஸ் பயணம் டில்லி – லண்டனுக்கிடையில்
Next articleஇஸ்ரேல் – UAE வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவை ஆரம்பம்! (15 Photos)