இந்திய வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இந்தியாவில் வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு வாகனங்களுக்கான விலையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.

எவ்வாறாயினும், இந்த வருடத்தில் வாகனங்களின் விலையானது நான்காவது முறையாகவும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, வாகன விலை உயர்வானது இலங்கையிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய லொறிகள் போன்ற பெரும்பாலான வாகன வகைகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழன்.lk

Read:  இலங்கைக்கு அரபு நாடுகள் உதவத் தயங்குவது ஏன்?