இலங்கையர்களை இலக்குவைத்து WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் Google Doc phishing மோசடி தொடர்பில் சைபர் பாதுகாப்பு தேசிய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

WhatsApp ஊடாக Google doc phishing மோசடி பரப்பப்படுவதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடி “கடன் தகவல் பணியகத்திலிருந்து ‘நய சஹன’ 2020” என்ற தலைப்பில் அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Doc Phishing மோசடி இலங்கையர்களின் வங்கி தகவல்களை இலக்காக கொண்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஆவணத்தில் தங்களது வங்கி விபரங்களை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அசாதாரண கால சூழ்நிலையினை சார்பாக வைத்து இந்த ONLINE மோசடி முறைகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page