சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை இன்றுடன்(31) நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாக தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

Previous articleவிக்னேஸ்வரன் உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும், இல்லையேல் ஓடஓட விரட்டியடிப்போம் – வீரவன்ச
Next articleஒரே நாடு, ஒரே சட்டம் காதி நீதிமன்றங்களில் உள்ளதா..?