ஏ.ரி.எம். மூலம் மக்களின் பணத்தினை திருடும் கும்பல்

ஹட்டன் நகரில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.ரி.எம் இயந்திரங்களினூடாக பணத்தை திருடும் திட்டமிடப்பட்ட குழுவினர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வங்கி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவினர் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்துவது தொடர்பில் அறியாதவர்கள் தொடர்பில் தேடியபார்த்து, அவர்களுக்கு ஏ.ரி.எம். அட்டையினூடாக பணத்தை பெற்று கொடுக்க உதவி வழங்குகின்றனர்.

ஏ.ரி.எம். அட்டையை இயந்திரத்தினூடாக பரிசீலித்ததன் பின்னர் குறித்த கணக்கில் பணம் இல்லை என்று தெரிவிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் ஏ.ரி.எம். இயந்திரத்துக்குள் சென்ற அட்டையை மறைத்துக்கொண்டு,அனுமதி இல்லாத அட்டைகளை குறித்த அட்டை உரிமையாளர்களுக்கு பெற்று கொடுக்கின்றனர்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஏ.,ரி.எம்.அட்டையை வேறு இடங்களில் பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொள் கின்றனர்.

இவ்வாறு திருடப்படும் அட்டைகளை பயன்படுத்தி கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் பணத்தை பெற்று கொண்டுள்ளவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாக வங்கி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தமது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இந்த திட்டமிடப்பட்ட குழுவினரால் இலட்ச கணக்கான பணம் திருடப்பட்டிருப்பதாக வங்கி முகாமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

-தமிழன்.lk

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!