அக்குறணை பஸாரினை திறக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்

நாளைய தினம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதையிட்டு அக்குறணை வர்த்தகர் சங்கத்தினால் 2020.04.26 (ஞாயிறு) மு.ப. 6.15 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்வருமாறு

நாளை 27/04/2020 திங்கட்கிழமை அக்குறணை பஸாரினை திறக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்

திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு தினங்கள் சில்லரைக் கடைகள், பாமஸிகள், பேக்கரிகள், மரக்கறி கடைகள், மீன், இறைச்சி மற்றும் கோழிக்கடைகள் என்பன மாத்திரம் திறக்க அனுமதிக்கப்படுவதுடன், எதிர்வரும் 29/04/2020 புதன்கிழமை முதல் அனைத்து விதமான கடைகளையும் திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்க அனுமதிக்கப்படும் மேற்குறிப்பிட்ட கடை உரிமையாளர்கள் அனைவரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அஸ்னா மத்திய பள்ளிக்கு வருகை தந்து அக்குறணை மருத்துவக்குழுவினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பெற்றதன் பின்னரே கடை திறக்க அனுமதிக்கப்படுவர்.

கடைகள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படல் வேண்டும்

கடையில் வேலை செய்கின்றவர்கள் சமூக இடைவெளியினை பின்பற்றுவதுடன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குள் நுழைவதற்கு முன்னர் Hand Sanitizers மூலம் கைகளை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.

வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியில் நிறுத்துவது மற்றும் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் அறிவுறுத்தல்களை வழங்குவது போன்ற வேலைகளுக்கு குறித்த கடைகளினால் ஒருவரை நியமிக்க வேண்டும்.

அனைத்து கடைகளையும் கண்காணிப்பதற்கு அக்குறணை வர்த்தக சங்கத்தினால் ஒரு குழு அமைக்கப்பட்டு கடைகளின் ஏற்பாடுகள் மற்றும் விலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை பின்பற்றாத கடைகள் போலிஸாரினால் மூடப்பட்டு ஒரு வாரத்திற்கு சீல் (seal) வைக்கப்படும்.

பஸாரிற்கு வருகை தரும் அனைவரும் முகக்கவசம் mask அணிய வேண்டும் mask இல்லாதவர்கள் பஸாரிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நோயாளிகள் மற்றும் வயோதிபர்கள் பஸாரிற்கு வருவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளவும்.

நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் தொடர்பில் வீதி அறிவிப்பு (Road Announcement) தொடர்ச்சியாக இடம்பெறும்.

வீதியோர வியாபாரங்களுக்கு (Pavement Business) எவ்விதத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளனர், எனவே வீதியோர வியாபாரங்களை முற்றுமுழுதாக தவிர்த்துக்கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு
Mr.MRM Nazlan(Sec) 0776283306
Mr.AFM Naleem(V.P) 0773593230
Mr.AFM Rizvy (V.P) 0773293279

இப்படிக்கு தலைவர் அக்குறணை வர்த்தக சங்கம்

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page