கொழும்பில் வேலைக்கு செல்வோர் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கை

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டவுடன் கொழும்பு மாவட்ட பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு முறையான நடைமுறை மூலம் போக்குவரத்து சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது.

இதன்படி, செயற்பாட்டை ஆரம்பிக்க விரும்பும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் dgmoperation@sltb.lk க்கு மின்னஞ்சல் செய்வதன் மூலம் சேவைக்கு பதிவு செய்துகொள்ள முடியும்.

இதன்படி, நிறுவனத்தின் பெயர், ஊழியர்கள் பணிக்கும் வருகைதரும் இடம், வீதி ஒழுங்கு, பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்து, சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்வமுள்ள தரப்பினர் தங்கள் கோரிக்கைகளை எதிர்வரும் 28ம் திகதிக்கு முன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous articleஅடையாள அட்டை அடிப்படையில் வீட்டை விட்டு வெளியேரல் பற்றிய விளக்கம்.
Next articleஅக்குறணை பஸாரினை திறக்கும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குகள்