அபாயகர நிலையை நோக்கி பயணிக்க இடமளிக்க வேண்டாம்

கொரோனா வைரஸ்‌ தொற்று நிலையானது தற்போது இலங்கையில்‌ அபாய கட்டத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாகவும்‌ எனவே இதனை தடுக்க அனைவரும்‌ பொறுப்புடன்‌ செயற்பட வேண்டும்‌ என்றும்‌ சுகாதாரத்‌ துறையினர்‌ தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்‌.

கொரோனா வைரஸ்‌ தொற்று பரவலில்‌ இலங்கையானது சமூக பரவல்‌ நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்றும்‌ அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள்‌ அவசியம்‌ என்றும்‌ சுகாதாரத்‌ துறையினர்‌ அறிவுநித்தி வருகின்றனர்‌. கொரோனா வைரஸ்‌ தொற்றினால்‌ பாதிக்‌கப்பட்டோரின்‌ எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகின்றது. கடந்த ஒரு வாரத்தில்‌ 100க்கும்‌ மேற்பட்ட தொற்றாளர்கள்‌ கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்‌. இலங்‌கையின்‌ தற்போதைய நிலையில்‌ அடையாளம்‌ காணப்பட்ட தொற்றாளர்களின்‌ எண்ணிக்கை 400 ஆக அதிகரித்திருந்தது.

அதிக தொற்றாளர்கள்‌ கொழும்பு மற்றும்‌ களுத்துறை மாவட்டங்களில்‌ பதிவாகியுள்‌ளனர்‌. நாடளாவிய ரீதியில்‌, 16 சுகாதார மாவட்டங்களில்‌ தொற்றாளர்கள்‌ இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்‌. இதுவரை 107 தொற்றாளர்கள்‌ குணமடைந்துள்ளதுடன்‌ 7 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. கொரோனா சந்தேகத்தில்‌ வைத்தியசாலைகளில்‌ சிகிச்சை பெறுவோரின்‌ எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள்‌ நாடளாவிய ரீதியில்‌ 31 வைத்தியசாலைகளில்‌ கொரோனா சந்தேகத்தில்‌ அனுமதிக்கப்‌பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்‌. எனவெ திலைமை ஆரோக்கியமாக இல்லை என்பதும்‌ நாம்‌ மிகவும்‌ அவதான மாக இருக்க வேண்டும்‌ என்பதும்‌ தெளிவாகிறது.

முக்கியமாக வெலிசறை கடற்படை முகாமில்‌ 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளமையின்‌ காரணமாக இது எவ்வளவு தூரம்‌ வீரியமாகவும்‌ வேகமாகவும்‌ பரவுகின்றது என்பதனையும்‌ புரிந்துகொள்ள முடிகின்றது. அதனால்‌ தற்போதைய இந்த அபாயகர
மான கட்டத்தில்‌ அனைத்து தரப்பினரும்‌ பொறுப்புடனும்‌ சுகாதார அறிவுறுத்தல்‌களை பின்பற்றியும்‌ செயற்படவேண்டியது இன்றியமையாததாக உள்ளது. காரணம்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பரவல்‌ சமூக மட்டத்தில்‌ பரவ ஆரம்பித்‌துவிட்டால்‌ அதனை இலங்கை போன்ற நாடுகளினால்‌ தாங்கிக்கொள்ள முடியாது.

இத்தாலி பிரிட்டன்‌ ஸ்பெய்ன்‌ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்‌ இவ்வாறான சமூக பரவல்‌ நிலையே ஏற்பட்டுள்ளது. அதனால்‌ அதனை கட்டுப்படுத்த முடியாமல்‌ அந்த நாடுகள்‌ கடும்‌ நெருக்கடிகளை எதிர்நோக்‌கியுள்ளன. அவ்வாறான நிலைக்கு இலங்‌கையை கொண்டு சென்றுவிடக்கூடாது. அதுபோன்ற நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும்‌ முன்‌னெடுப்பது அவசியமாகும்‌. இது தொடர்பில்‌ அரச வைத்தியர்‌ சங்‌கத்தின்‌ செயலாளர்‌ வைத்தியர்‌ ஹரித அழுத்கே இவ்வாறு குறிப்பிடுகிறார்‌.

சுகாதார துறையினரின்‌ எச்சரிக்கை கொரோனா வைரஸ்‌ தொற்று பரவல்‌ முன்‌ நகர்ந்து கொண்டுள்ளது. இது குறித்து முன்‌னெடுக்கப்பட்டு வருகின்ற முன்னாயத்த நடவடிக்கைகள்‌ கூட தோல்வியில்‌ முடிவடையும்‌ நிலைமையே காணப்படுகின்‌றது. உலக நாடுகள்‌ அனைத்துமே இன்று கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்‌ விடயத்தில்‌ முன்னெடுத்துள்ள நடவடிக்‌கைகள்‌ பல தோல்வியில்‌ முடிவடைந்துள்‌ளன. இதற்குக்‌ காரணம்‌ என்னவெனில்‌ கொரோனா வைரஸ்‌ பரவல்‌ குறித்த சரியான இனங்காணல்‌ கண்டறியப்படாதமையேயாகும்‌.

ஆகவே இப்போது நாம்‌ முகங்கொடுக்கும்‌ பிரச்சினைக்கு இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. நாளை என்ன நடக்கும்‌ என எவருக்குமே தெரியாத நிலையில்‌ இப்போது நாம்‌ முகங்கொடுக்கும்‌ சவால்‌களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்‌ என்பதே எமது நிலைப்பாடாகும்‌.

ஒவ்வொரு நாளும்‌ புதிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாளாந்தம்‌ நோயாளர்களின்‌ எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஆகவே நிலைமைகளை கட்‌டுப்படுத்துவதில்‌ பல சவால்கள்‌ உள்ளன. கொரோனா வைரஸ்‌ தொற்றுநோயினால்‌ எத்தனை பேர்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌ என்பதை கண்டறிய மிகவும்‌ கடினமாக உள்ளது. நோயாளர்கள்‌ குறித்து மிகக்‌ குறைவான அறிகுறிகளே தென்படுகின்றன. ஆகவே சாதாரண நோயினால்‌ பாதிக்கப்‌பட்ட நபர்களுக்கும்‌ அதிக முக்கியத்துவம்‌ கொடுத்து அவர்களை கண்காணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை தற்போதைய நிலையில்‌ இத்தாலியின்‌ நிலைமையை நோக்கி பயணிக்கின்றது. இத்தாலியின்‌ நோயாளர்‌ தாக்கம்‌ குறித்த வரைபை ஒத்த வரைபினை இன்று இலங்கையின்‌ வரைபும்‌ காட்டுகின்‌றது. இதனை சாதாரணமாக நினைத்தால்‌ இலங்கையின்‌ நிலைமை மிக மோசமானதாக அமையலாம்‌. இலங்கையின்‌ இப்போதுள்ள நிலைமை மிகவும்‌ மோசமானதாக அமைந்துள்ளது என்பதே உண்மையாகும்‌.

அரசாங்கம்‌, அதிகாரிகள்‌, மக்கள்‌ அனைவரும்‌ இதனை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும்‌. அதேபோன்று மே மாதம்‌ முதல்‌ வாரம்‌ முடியும்‌ வரையில்‌ நாட்டின்‌ நிலைமைகளை மிகக்‌ கவனமாக கையாள வேண்டும்‌. இந்த கால கட்டத்தில்‌ தொற்‌றுநோய்‌ பரவல்‌ தாக்கம்‌ அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அவர்‌ சுட்டிக்காட்டுகிறார்‌. அவதானம்‌ அவசியம்‌ அதன்படி அரச வைத்திய அதிகாரிகள்‌ சங்கத்தின்‌ எச்சரிக்கையை வெறுமனே எடுக்க முடியாது. இதில்‌ அதிக கவனம்‌ செலுத்துவது அவசியமாகும்‌. முக்கியமாக தற்போது பரிசோதனை கருவிகளும்‌ அதிகளவில்‌ கிடைத்துள்ளதால்‌ பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது பிரதான தேவையாகவுள்ளது. அதனையே சுகாதார துறையினரும்‌ தொடர்சசியாக வலியுறுத்தி வருகின்றனர்‌. இந்த விடயத்தில்‌ சுகாதார துறையினரதும்‌ பாதுகாப்பு தரப்பினரதும்‌ அறிவுறுத்தல்களை சரியான முறையில்‌ கடைப்பிடித்து இந்த கொரோனா வைரஸ்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்துவது முக்கியமாகும்‌.

எவ்வாறு பரவுகின்றது?

குறிப்பாக மீண்டும்‌ இந்த தொற்று எவ்‌வாறு பரவுகின்றது என்பது தொடர்பாகவும்‌ எவ்வாறு சுகாதார அறிவுறுத்தல்களை பின்‌பற்றுவது என்பது குறித்தும்‌ அறிவுறுத்தப்‌பட வேண்டியது அவசியமாகும்‌. எவ்வாறு இந்த கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுகின்றது என்று பார்த்தால்‌ எச்சில்‌ துகள்கள்‌ மூலமாகவே இந்த கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுகின்றது என்பது பொதுவான விடயமாகும்‌. இருவர்‌ மிக அருகில்‌ இருந்து உரையாடும்போது எச்சில்‌ துகள்கள்‌ மூலம்‌ வைரஸ்‌ பரவும்‌ அபாயம்‌ உள்ளது. அதேபோன்று ஒருவர்‌ தும்மும்போது எச்சில்‌ துகள்கள்‌ பறக்கின்‌றன. அதன்‌ ஊடாகவும்‌ இந்த வைரஸ்‌ பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு விடயங்கள்‌ குறித்தும்‌ மிகவும்‌ அவதானமாக இருக்க வேண்டும்‌.

இவை எல்லாவற்றையும்விட மிக அபாயகரமான முறையிலும்‌ இந்த வைரஸ்‌ பரவுகின்றது. அதாவது யாராவது ஒருவர்‌ இருமும்போது எச்சில்‌ துகள்கள்‌ அருகில்‌ இருக்கும்‌ பொருட்களில்‌ படியலாம்‌. தளபாட பொருட்கள்‌ கட்டடங்கள்‌ வாகனங்கள்‌ தகரங்கள்‌ இரும்புப்‌ பொருட்கள்‌ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ என்பனவற்றுக்கு அருகில்‌ ஒருவர்‌ தும்மும்போது எச்சில்‌ துகள்கள்‌ அவற்றில்‌ படியலாம்‌. நாம்‌ பயன்படுத்தும்‌ பொருட்களிலும்‌ படியலாம்‌. எனவே அவற்றில்‌ நாம்‌ கைவைத்துவிட்டு அந்த கையை முகத்தில்‌ வைக்கும்போது வைரஸ்‌ பரவும்‌. முக்கியமாக கைகளை கொண்டு
காம்‌ முகத்தை அல்லது வாய்‌ மூக்கு கண்‌களை தொட்டால்‌ வைரஸ்‌ பரவுவதற்கான அபாயம்‌ உள்ளது.

இவ்வாறான பொருட்களி;ல்‌ பல மணி நேரம்‌ இந்த கொரோனா வைரஸ்‌ தொற்று இருப்பதாக மனிதனை தாக்கும்‌ சக்தியை கொண்டிருக்கும்‌ என்று தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறு பல வழிகளில்‌ இந்த வைரஸ்‌ பரவுவதாக சுகாதார துறையினரால்‌ கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறு தடய்பது? இங்கு முக்கியமாக மனிதர்கள்‌ உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்துகொண்டால்‌ இதிலிருந்து மீண்டு கொள்ள முடியும்‌. இந்த தொற்று தாக்காமல்‌ எம்மை தாம்‌ பாதுகாத்துக்கொள்ள முடியும்‌. அதனால்‌ இங்கு முக்கியமான விடயமானது நாம்‌ கட்டுப்பாட்டுடன்‌ இருக்க வேண்டும்‌ என்பதாகும்‌.

ஏற்கனவே கூறியதைப்போன்று எமக்கு அருகில்‌ இருக்கும்‌ பொருட்களி;ல்‌ வைரஸ்‌ துகள்கள்‌ படிந்திருக்கலாம்‌. மக்கள்‌ இரு மும்போது இவ்வாறு உமிழ்நீர்‌ துகள்கள்‌ பொருட்களில்‌ படியலாம்‌. அவற்றில்‌ கைவைப்பதன்‌ ஊடாக இந்த வைரஸ்‌ பரவும்‌ அபாயம்‌ உள்ளது. நமது அன்றாட அலுவலக மற்றும்‌ வீடுகளுக்கு வெளியிலான வாழ்க்கையில்‌ இவ்வாறான பொருட்களை தொடுகின்றோம்‌. பொதுப்‌ போக்குவரத்தின்போதும்‌ இந்த நிலைமை ஏற்படுகின்றது. எனவே அடிக்கடி கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவது மிக அவசியமாகும்‌.

இதன்மூலம்‌ வைரஸ்‌ பரவுவதை தடுக்க முடியும்‌ என்று அறிவுறுத்தப்படுகின்றது. மக்கள்‌ இந்த கை கழுவும்‌ விடயத்தை பழக்‌கப்படுத்திக்கொள்வது முக்கியமாகும்‌. கைகழுவுதல்‌ இந்த வைரஸின்‌ பிரதான தடுப்பு முறைகளில்‌ ஒன்றாக உள்ளது. அடுத்ததாக தும்மும்போது துணியால்‌
அல்லது முழங்கையினால்‌ மூக்கை மறைப்‌பது மற்றுமொரு பாதுகாப்பு நடைமுறையாக காணப்படுகி;றது. அதனை மக்கள்‌ பின்பற்ற வேண்டும்‌. இது மிக முக்கியமாக எம்‌ அருகில்‌ இருப்பவர்களை பாதுகாப்‌பதாக அமையும்‌. அத்துடன்‌ அவ்வாறு இருமும்போது பயன்படுத்தும்‌ துணியை
அல்லது திசு தாள்களை உடனடியாக தகுதி யான இடத்தில்‌ போட்டுவிடவேண்டும்‌.

மேலும இருவர்‌ உரையாடும்போது போதுமான இடைவெளியை பின்பற்றுமாறும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு மீற்றர்‌ தூரம்‌ இடைவெளியை பேணுவது முக்கியமாகின்றது. இதன்‌ ஊடாக எச்சில்‌ துகள்கள்‌ ஊடாக இந்த வைரஸ்‌ பரவுவதை தடுக்க முடியும்‌. இதனைத்‌ தான்‌ சமூக இடைவெளியை பேணவேண்டும்‌ என்று கூறப்படுகின்றது. மூக்கு,வாய்‌,கண்களை தொடவேண்டாம்‌ அதேபோன்று மக்கள்‌ தமது முகத்தில்‌ கை வைப்பதை இந்த நெருக்கடிமிக்க காலத்தில்‌ தவிர்ப்பது மிக அவசியமாகும்‌. அதாவது கண்‌, வாய்‌, மூக்கு போன்றவற்றை கைகளினால்‌ தொடுவதை தவிர்ப்‌பது அவசியமாகும்‌. காரணம்‌ பல்வேறு பொருட்களில்‌ கைகளை வைத்துவிட்டு கைகளை கழுவாமல்‌ முகத்தை தொடுவது வைரஸ்‌ பரவும்‌ அபாயத்தைக்‌ கொண்டுள்‌ளது.

கைகுழுக்கும்‌ பழக்கம்‌ வேண்டாம்‌

அத்துடன்‌ ஒருவரை சந்திக்கும்போது கைகுழுக்கும்‌ பழக்கத்தை நாம்‌ கொண்டிருக்கின்றோம்‌. ஆனால்‌ தற்போதைய சுகாதார நிலைமையில்‌ கைகுழுக்குவதற்கு பதிலாக கைகூப்பி மரியாதை செலுத்துவதே மிகப்‌ பொருத்தமான விடயமாக காணப்படுவதாக அறிவுறுத்தப்படுகின்றது. எனவே கைகுழுக்குவதற்கு பதிலாக கைகூப்புவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளுங்கள்‌. அதுமட்டுமன்றி மக்கள்‌ ஒன்று கூடல்‌களை முழுமையாக தவிர்ப்பது அவசியமாகும்‌. அநாவசியமான ஒன்று கூடல்களின்‌ ஊடாக கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுவதற்கான அபாயம்‌ அதிகமாக உள்ளது. அதனால்‌ முடியுமானவரை ஒன்றுகூடல்களை தவிர்‌;ப்பது அவசியமாகும்‌. தவிர்க்க முடியாத அத்தியாவசிய சந்திப்பு என்றால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட இடைவெளியை பேணுவது அவசியமாகும்‌. அத்துடன்‌ சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும்‌.

வெளியில்‌ சென்றுவி;ட்டு வீடு செல்‌லும்போது உங்களை நன்றாக சுத்தப்படுத்திக்‌ கொண்டு வீடடுக்குள்‌ பிரவேசியுங்கள்‌. முக்கியமாக கைகளை நன்றாக கழுவுவதுடன்‌ தாம்‌ எடுத்துச்‌ செல்லும்‌ பொருட்களையும்‌ சுத்தப்படுத்திவிட்டே வீட்டுக்குள்‌ எடுத்துச்‌ செல்லவேண்டும்‌. போக்குவரத்து பயணத்தின்போது மிக அருகில்‌ இருந்து பயணிக்க வேண்டாம்‌. போதுமான இடைவெளியை பேணுவது முக்கியமாகின்றது. சந்தைகளில்‌ வர்த்தக நிலையங்களில்‌ பொருட்களை கொள்வனவு செய்யும்‌ போதும்‌ ஒருவருக்கொருவர்‌ போதுமான இடைவெளியை பேணவேண்டும்‌. இவ்வா
நான சந்தர்ப்பங்களின்போது எக்காரணம்‌ கொண்டும்‌ மக்கள்‌ மிக நெருக்கமாக இருப்‌பதை தவிர்ப்பது சிறந்ததாகும்‌. அலுவலகங்களில்‌ பணியாற்றுகின்றவர்களும்‌ போதுமான இடைவெளியை பேணவேண்டும்‌. மிகநெருக்கமாக இருந்து பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும்‌. அலுவலகங்களிலும்‌ அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளை கழுவுவது மிக அவசியமாகும்‌. அலுவலக மேசைகள்‌ கதிரைகள்‌ என்பனவற்றை உரிய கிருமி அகற்றி திரவகங்களைக்‌ கொண்டு சுத்தப்படுத்துவது மிக முக்கியமாகும்‌.

இவ்வாறு பல்வேறு சுகாதார அறிவுறுத்தல்கள்‌ உலக சுகாதார அமைப்பினாலும்‌ சுகாதார அமைச்சினாலும்‌ வழங்கப்பட்டுவருகின்றன. அவற்றை சரியான முறையில்‌ பின்பற்றுவது அவசியமாகின்றது. அதனால்‌ எக்காரணம்‌ கொண்டு இலங்கையில்‌ கொரோனா தொற்று சமூக பரவல்‌ நிலையை அடைய யாரும்‌ இடமளிக்கக்கூடாது. அதனை தடுக்க அரசாங்கம்‌ ஏற்கனவே எடுத்துள்ளநடவடிக்கைகளை போன்று மேலும்‌ பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்‌. பொது மக்களும்‌ ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்‌.

விசேடமாக தென்கொரியாவில்‌ எவ்வாறு சுகாதார வேலைத்திட்டங்கள்‌ முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில்‌ நாம்‌ படங்களை கற்க வேண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில்‌ நோர்வே, ஜேர்மன்‌, டென்மார்க்‌ போன்ற நாடுகளிலும்‌ குறிப்பிடத்தக்க வகையில்‌ இந்த வைரஸ்‌ தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவற்றைக்‌ கருத்திற்கொண்டு. நாட்டின்‌ சகல தரப்பினரும்‌ செயற்படவேண்டும்‌. பரிசோதனைகளை அதிகரித்து தொற்றாளர்களை அடையாளம்‌ கண்டால்‌ ஏனைய தரப்பினரை பாதுகாக்கலாம்‌. அதனால்‌ இந்த விடயத்தில்‌ சகல தரப்பினரும்‌ சமூக பொறுப்புடனும்‌ விழிப்புடனும்‌ சுகாதார நியமங்களுக்கு அமையவும்‌ நடந்துகொள்ள வேண்டும்‌ என்பதனை கருத்திற்‌ கொள்ளுங்கள்‌.

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page