திங்கள் முதல் அலவத்துகொடை பொலிஸ் பிரிவு ஊடரங்கு தளர்ப்பு விபரம்

தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று 25.04.2020 நள்ளிரவு 1.30 மணிக்கு பொலிஸ் ஊடக பிரிவு எமக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் படி,

கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் அலவாத்துகொடைபொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வராக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர அனைத்து மாவட்டங்களுக்கு 24.04.2020 இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவை தொடர்பு கொண்டு கேட்டபோது

திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் பொலிஸ் ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பிலான எந்த அறிவித்தலும் தங்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என மடவளை-நியுசுக்கு குறிப்பிட்டனர்.

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **

Read:  அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு - நிமல் லன்சா

* Akurana Prayer Time (அக்குறணை தொழுகை நேரம்)
* Akurana Breaking News (அக்குறணை முக்கிய செய்திகள்)
* Akurana Doctors Details (வைத்தியர்கள் விபரம்)* Akurana School News (பாடசாலை செய்திகள் )
* Janaza News (ஜனாஸா அறிவித்தல்கள்)
* Akurana Sales & Discounts (சலுகை/ தள்ளுபடி செய்திகள்)

**Daily-2+tax when your phone balance is available

SOURCEMadawala News