மார்ச் மாதத்தின் இறுதிப் பகுதியில் அக்குறணையிலிருந்து கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான ஏழு பேர் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அந்த 7 பேரில், கோவிட்-19 தொற்றுடன் அக்குறணையில் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட சகோதரர் உட்பட இதுவரை 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர், அல்ஹம்துலில்லாஹ்.
இன்னும் வைத்தியசாலையில் இருக்கும் மூன்று பேரும் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி, அவர்களை உங்கள் துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நாட்டு சட்டத்துக்கும், இஸ்லாத்தின் வழிகாட்டலுக்கும், ஊரின் தலைமைகளுக்கும் கட்டுப்பட்டு நாம் அழகான முறையில், பொறுப்புணர்வோடு இருந்தது போலவே, தற்போதைய நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு தொடர்ந்தும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் வேண்டிக் கொள்கிறோம். ஒரு முன்மாதிரி சமூகமாக நாம் இருப்போம் என்றும் உறுதியாக நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.
Akurana Health Committee
2020.04.24 – 11.10 pm
Akurana Today All Tamil News in One Place
