கண்டி -ஹாரகம பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் அச்சமடைய வேண்டிய தேவை இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
கண்டி – தலவத்துஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று இரவு 8.30 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், அவ்வாறான நிலநடுக்கங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது எனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place
