ரமழான் தொடர்பாக சுகாதார அமைச்சின் சுற்று நிருபம்

COVID 19 ஐ கட்டுப்படுத்த ரமழான் மாதத்தில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றி சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள்

ரமழான் மாதம் என்பது முஸ்லிம்களின் நிலவு நாட்காட்டியில் பன்னிரண்டு மாதங்களில் ஒன்றாகும், அதில் அவர்கள் முழு மாதத்திலும் நோன்பு நோற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் பொதுவாக சமூக மற்றும் மத ஒன்றுகூடல்களை கொண்டுள்ளனர்.

அங்கு குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுபட்டு சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நோன்பு திறப்பதோடு விடியற்காலையில் நோன்பு பிடிக்கின்றார்கள். அவர்கள் அடிக்கடி பள்ளிவாசல்களுக்குச்சென்று வணக்க வழிபாடுகளுக்குக்காக நேரம் செலவிடுகிறார்கள். இந்த ஆண்டு ரமழான் இந்த மாத இறுதிக்குள் (ஏப்ரல் 25) தொடங்கி, மே 25 ஆம் தேதி வரை இருக்கும்.

இருப்பினும், COVID 19 இன் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முழு நாடும் முயற்சிக்கும் தற்போதைய சூழலில், மக்கள் தேவையற்ற விதத்தில் நோய்வாய்ப்பட்டு பிரச்சினைகளுக்கு ஆளாகாமல் ரமழான் கொண்டாடப்பட வேண்டும்.

ரமழானின் பல தவிர்க்கப்படவேண்டிய ஒன்றுகூடல்கள் நடைபெறும் அதே வேளையில், உடல் ரீதியான தூரமாதலின் முக்கியத்துவத்தை உறுதிசெய்ய, அந்தந்த பகுதிகளில் (மாகாணங்கள் / மாவட்டங்கள் / MOH பகுதிகள்) செயல்பாடுகளை கண்காணிக்க தயவுசெய்து கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

ரமலான் காலத்தில் பின்வரும் முன்னெச்சரிக்கை முறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்.

► அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஒன்றுகூடல் அல்லது ஐவேளை தொழுகைகளை அனுமதிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்பட வேண்டும்.

மேலும், பள்ளிவாசல்களில் எந்தவொரு கூட்டு நடவடிக்கைகளும் கூட்டங்களும் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

வக்ஃப் சபை மற்றும் முஸ்லீம் சிவில் அமைப்புகளுடன் முஸ்லீம் மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம் (DMRCA) ரமலான் மாதகாலத்தில் சுகாதார அமைச்சின் ஆலோசனை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் வலுவான கருத்தை கொண்டுள்ளது.

► சில மக்களின் தவறான நடத்தை மற்றும் அறியாமை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக அனைத்து பள்ளிவாசல்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க DMRCA ஒருங்கிணைத்து உன்னிப்பாக கண்காணிக்கும். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களை DMRCA க்கு மாவட்ட ரீதியாக தரப்பட்டுள்ள இலக்கங்கள் மூலமாக விரைவாக அறிவிக்கவும்.

கண்டி மாவட்டத்திற்கு
0777425982 -Mr.Siyad
0779083253-Mr.Riyas
0761398620-Mr.Muneer

பள்ளிவாசல்கள் மற்றும் வேறு எந்த இடத்திலும் பொதுவான கஞ்சி தயாரிப்பு மற்றும் விநியோகம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

கஞ்சிக்கான பொருட்களை யாராவது விநியோகிக்க விரும்பினால், அவர்கள் தேவையானவர்களுக்கு உலர்ந்த ரேஷன்களுடன் தேவையான பொருட்களையும் விநியோகிக்க முடியும்.

சமூக மற்றும் மத ரீதியான கூட்டங்களை அனுமதிக்காதீர்கள் – திக்ர் ​​மஜ்லிஸ், மவுலூத் , கத்தமுல் குர்ஆன், ஒன்றுகூடிய குர்ஆன் ஓதல்கள் , லைலத்துல் கத்ர் கூட்டங்கள் மற்றும் பிரார்த்தனை சேவைகள், கூட்டான இப்தார், ஸஹர் , பொழுதுபோக்கு சந்தைகள், வீதியோர உணவு நிலையங்கள் / கடைகள், விளையாட்டு மற்றும் தனியார் குடியிருப்புகளில் அல்லது முஸ்லீம் சுற்றுப்புறங்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள்.

► தொற்றுநோயைத் தடுக்க குடும்ப ஆடை கொள்வனவு மற்றும் ஷாப்பிங் செய்தல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.

தவிர்க்க முடியாத சூழ்நிலை இருந்தால், உரிய சட்ட அமுலாக்க அதிகாரிகள் அனுமதித்தால், ஒருவர் மட்டுமே சென்று வேலையை விரைவாக முடிக்க வேண்டும்.

► மத நடவடிக்கைகளை செய்யும்போது உடல் ரீதியான தூரத்தை உறுதி செய்துகொண்டு , சமூக இடைவெளியை(Social distancing) பேணி வீடுகளுக்குள் ஈத் பண்டிகையை கொண்டாட மக்களுக்கு உதவுங்கள்.

► பணம் சேகரிப்பதற்காக வீடு வீடாக நடந்து செல்லும் நபர்களுக்கு முழுமையான தடை விதிக்கவும்.

அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட சமூகம், சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவல் மூலம் -Dr.Bhadrani Jayawardena(சுகாதார அமைச்சின் செயலாளர்) அவர்களினால் சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்.

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters