இலங்கையில் மீண்டும் பொது முடக்கம் வருமா?

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதென்பது சாதகமான விடயமல்ல என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு மாற்று வழி இல்லை என்றால், நாட்டை மீண்டும் முடக்குவதற்கு பரிந்துரை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

-தமிழன்.lk

Read:  மு.கா., அ.இ.ம.கா. அரச ஆதரவு அணி அமைச்சர் பசிலை சந்திக்க திட்டம்