இன, மத தீவிரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதில் பொதுமக்களின் பங்கு

வாக்காளர் தளத்தை தக்க வைத்துக்கொள்ளவும், ஆட்சியில் தமக்கான இடத்தைப் பாதுகாப்பதற்காகவும் இனம், மதம், கலாசாரம் என்பன அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக சுரண்டப்படுவது இலங்கைக்கு அந்நியமானது அல்ல.

ஒவ்வொரு முறையும் ஜாக்பாட் அடிக்கும் சௌகரியமான தந்திரம் இதுவாகும். இனம், மதம் மற்றும் கலாசாரம் ஆகியவை இயற்கையாகவே மனிதர்களுக்கு உணர்வுபூர்வமான தன்மையை கொண்டவை. மேலும் இவை அவர்களின் அடையாளத்தின் குறிப்பிடத்தக்கதொரு பகுதியை ஏற்படுத்துகின்றன. எனவே, வரலாற்று ரீதியாக, உலகம் முழுவதும், போர்களை நடத்துவதற்கும் வாக்குகளைப் பெறுவதற்கும் இது எளிதான வழிகளில் ஒன்றாக இருந்துவருகிறது.

சமீபத்தில் மக்கள் மத்தியிலான பொதுவான உரையாட ல்களில் சர்ச்சைக்குரிய விடயம், ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிப் பிரிவை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்திருந்தமையாகும். அதில் தமிழ் சமூகத்தின் பிரதிநிதித்துவம் இல்லை. பணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலணியின் நியமனம் ‘தலை முதல் பாதம் வரை’ கேள்விக்குரியதாக இருந்தாலும் அரசியல் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க இனவாத முரண்பாட்டைத் தூண்டும் மற்றொரு அரச அனுசரணையுடனான முயற்சி என்ற கருத்தை பலர் கொண்டிருக்கின்றனர்.பெரும் குழப்பத்தில் ஆட்சியாளர்கள் தழைத்தோங்குவதைப் பற்றிய முன் பதிவுகளைக் கொண்ட ஒரு நாடாக இருக்கும் நிலையில் , இத்தகைய குறிப்பிட்ட கோணத்தில் பொதுமக்களின் சரிபார்ப்பானது இன்னும் இருந்துகொண்டுதானிருக்கிறது.

இக்கட்டுரையானது செயலணிப் பிரிவின் மீதான மற்றொரு விமர்சனம் அல்ல, மாறாக அமைதியின்மை மற்றும் மோதல் என்ற நெருப்புக் குழிக்குள் திட்டமிட்டுத் தள்ளப்படும் ஒரு தேசத்தை பாதுகாப்பதற்கு பொதுமக்களால் எடுக்கக்கூடிய ஒரு முன்னெச்சரிக்கையாகும்.

ஜனநாயகத்தில் வாழ்கின்ற போதும் , ஜனநாயகம் என்றால் என்ன, ஜனநாயகத்திற்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. ஜனநாயகத்தின் சாராம்சம் மக்கள் சக்தியாகும் . மக்கள் தங்கள் நாட்டின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளனர். அனைத்திலும் மிக அடிப்படையான அதிகாரம் அவர்களின் வாக்களிக்கும் உரிமையாகும். அதைப் பயன்படுத்தும்போது அவர்கள் ஜனரஞ்சக தீவிரவாதிகளுக்கோ அல்லது சாத்தியமான தீவிரவாதிகளுக்கோ வாக்களிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு என்பது ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவு அல்ல. ஏனெனில் வாக்காளர் ஒருவர் எடுக்கும் ஒரு முடிவு அடுத்த தலைமுறையை பாதிக்கும்.

சிங்களம் மட்டும் சட்டத்தை நிறைவேற்றுதல், பண்டாரநாயக்க செல்வ நாயகம் உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் மற்றும் அக்காலகட்டத்தில் எமது மக்கள் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட தீங்கான அரசியல் நகர்வுகள் போன்ற தீர்மானங்களினால் 30 வருடகால இனமோதலானது பல உயிர்களையும் உடைமைகளையும் அழித்ததுடன் அபிவிருத்தியையும் பின்னடைவு காணச்செய்தது.

கட்சிகளுக்கு அல்லாமல் தனிப்பட்ட நபர்களுக்கு வாக்களிக்கும் கலாசாரத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். இதன்மூலம் தீர்மானமெடுக்கும் செயற்பாட்டில் உறுப்பினரின் பெறுமதி வாய்ந்த கலாசாரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வேலை தேடுவதில் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வலுசேர்ப்பதற்கு அல்ல, விஞ்ஞாபனம் மற்றும் கொள்கைரீதியாக வாக்களிக்கும் கலாசாரத்தை வளர்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் வார்த்தைகள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவா அல்லது அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவா என்பதை அடையாளம் காண்பது பொது மக்களால் மேற்கொள்ளப்படும் முக்கியமான பணியாக இருக்க வேண்டும்.

எதிர்ப்பு உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவை தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கியமான உரிமைகளாகும். சமீபத்திய பி 2பி பேரணி வன்முறைக்குப் பதிலாக அகிம்சாவழி யில் எதிர்ப்பைக் காட்டுவதற்கான சிறந்த குறி காட்டியாகும்.இத்தகைய எதிர்ப்புகள் பாதிக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து மக்களிடமிருந்தும் எழ வேண்டும். ஒரு சமூகம் மற்றுமொரு சமூகத்தின் யதார்த்தங்களை புரிந்துகொண்டு பிரச்சினையின் பின்னணியில் உள்ள உண்மையான எதிரியை அடையாளம் காணும் நல்லிணக்க நிலையை அடைய இலங்கை விரும்ப வேண்டும்.

ஊடகங்கள், பிரதானமானவையாக இருந்தாலும் சரி, சமூக ஊடகங்களாக இருந்தாலும் சரி, சமூகங்களுக்கு இடையே துருவமயமாதலை தூண்டுவதில் எப்போதும் முக்கிய பங்காற்றுகின்றன . டிஜிட்டல் ஜனநாயகத்தின் இந்த காலகட்டத்தில் , அரசியல் சூழல் முறைமையில் டிஜிட்டல் மீடியா முக்கிய பங்கை கொண்டுள்ளது. அத்துடன் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் எப்போதும் இனவெறி அல்லது தீவிரவாத உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவதில்லை என்பது இரகசியமல்ல. இவற்றின் பின்விளைவுகளை அளுத்கம கலவரத்தின் போது இலங்கை எதிர் கொண்டது. மேலும், இனவெறி மற்றும் தீவிரவாதத்தை தூண்டுவதில் அரசியல் ஆயுதங்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பொம்மையின் பாத்திரத்தை பிரதான ஊடகங்கள் எப்போதும் வகிக்கின்றன. எனவே, தவறான தகவல் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராகப் போராட, தகவல்களைச் சரிபார்க்க வேண்டிய தீவிரப் பொறுப்பு பொதுமக்களுக்கு உள்ளது. உண்மையை சரிபார்ப்புச் செய்யும் சேவைகளைக் குறிப்பிடுவது, பல ஆதாரங்களில் இருந்தும் பல கண்ணோட்டங்களிலிருந்தும் வரலாற்றைக் கற்றுக்கொள்வது ம ற் று ம் இ ன ம் அ ல் ல து ம த ம் சார்ந்த உணர்வுபூர்வமான உள்ளடக்கத்தைப் பகிரும்போது எச்சரிக்கையாக இருப்பது ஆகியவை பொறுப்புள்ள குடிமகனாக ஒருவர் எடுக்கக்கூடிய சில படிகளாகும். ஜனநாயக நாடுகள் பல பெரும் பான்மைவாதத்தால் பாதிக்கப்படுகின்றன. அங்கு பெரும்பான்மை மக்களே முடிவெடுப்பதில் முதன்மை பெறுகின்றனர். உலகளாவிய உரிமையுடன் இது தவிர்க்க முடியாதது என்று பலர் வாதிடுகையில், நியூசிலாந்து, நோர்வே அல்லது கனடா போன்ற நாடுகளில் இது இல்லை.

பெரும்பான்மை ஜனநாயகத்தை அரசியலமைப்பு ஜனநாயகமாக மாற்றுவதற்கான முடிவெடுக்கும் செயற்பாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளை பொறுப்புக்கூற வைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கங்கள் எடுக்க வேண்டும். எவ்வாறாயினும், அத்தகைய நோக்கத்தை அடைவதில் பொதுமக்களின் பங்கு ஒரு உளவியல் நிகழ்வாக இருக்கும். இலங்கை ஒரு பன்முக கலாசார நாடு என்ற மறுப்பைக் களைந்து, அதன் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது சிந்தனை முறைகளை மறுசீரமைப்பதற்கான முதல்படியாக இருக்கும். பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து வரலாற்றைக் கற்றுக்கொள்வது மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான தொடர்பை விரிவுபடுத்துவது ஒருங்கிணைப்புக்கான முக்கியமான படிகளாக இருக்கும். ஒருவரின் சொந்த கலாசார அடையாளத்தை ஏற்றுக்கொள்வது,கொண்டாடுவது மற்றும் பாதுகாத்தல், இலங்கையர் என்ற அடையாளத்தை கட்டியெழுப்புவது இறுதியில் சமூகங்களுக்குள் வலுவான புரிதலுக்கு வழிவகுக்கும். பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்கும்போது, அரசியல்வாதிகள் நிலைமையைப் பயன்படுத்தி மக்களைத் துருவமயப்படுத்துவதற்கு இடம் இல்லை.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தும் முறையான பொறி முறைகள் எதுவுமின்றிய நாடாக இருப்பதால், சாம்பலின் கீழ் உள்ள நெருப்பை சிரமமின்றி எரியச் செய்யலாம். இது நாட்டிற்கு முற்றிலும் தீர்க்கமான காலகட்டமாகும், மேலும் நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும் என்று கூறுவது நீண்ட நீடித்த மற்றும் நிலையான சமாதானத்தை ஒருபோதும் உறுதிப்படுத்தாது. அளுத்கமதிகன கலவரம், சிங்கள தேசியவாத இயக்கங்களின் எழுச்சி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அளவுக்கு மீறிய இஸ்லாமிய அச்சம் மீள் எழுச்சி ஆகியவை மோதல்களால் பாதிக்கப்பட்ட நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்புவதில் தோல்வியடைந்த செயல் முறையின் சில விளைவுகளாகும்.

இந்தச் சம்பவங்கள் அரசியல் ரீதியாக தூண்டப்பட்டதா என்பது ஒருபுறம் இருக்க, இந்த நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதில் அந்தந்த அரசாங்கங்களின் கவனமும் விடாமுயற்சியும் இல்லாதது நம் நாட்டின் இருண்ட சகாப்தத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளை இயல்பாகவே தூண்டியிருந் தது. இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் அலட்சியம் இலங்கைக்கு அந்நியமானது அல்ல. 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தின்போது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மூன்று நாட்கள் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்த தாமதித்தது, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ அளுத்கம கலவரத்தின் போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே ட்வீட் செய்தது முதல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் இருந்தபோதும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருந்தது வரையிலானதாகும்.

நாடு ஒரு விசித்திரமான அமைதியற்ற நிலையில் உள்ளது. இது பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிகளால் பாதிக்கப்படுகிறது. குழப்பத்தை உருவாக்க இனத் தேசியவாதம் அல்லது மத தீவிரவாத விடயங்களைத் தூண்டுவதற்கு ஏற்றதாக உள்ளது. நாடு தானே கண்டுள்ள குழியில் இருந்து மேலெழுந்து வரும் வேளையில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இவ்வாறான அரசியல் தூண்டுதல்களைத் திசை திருப்புவது எமது மிகப்பாரிய பொறுப்பாக இருக்க வேண்டும்.

கிரவுண்ட் வியூஸ் சஜினி விக்கிμமசிங்க
தினக்குரல் 8-11-21