வெளிநாட்டு நாணய வருவாய்களை உடனடியாக ரூபாயாக மாற்ற உத்தரவு

வெளிநாட்டு நாணய வருவாய்களை உடனடியாக ரூபாயாக மாற்ற உத்தரவு மத்திய வங்கியின் பணிப்பால் அனைவரும் பெரும் அதிர்ச்சி

இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்சார்நிபுணர்கள் உட்பட வெளிநாடுகளில் ‘பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான’ நிதியைப் பெறுவதில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களின் வெளிநாட்டு நாணய சம்பாத்தியங்களை உடனடியாக ரூபாவாக மாற்றிகொள்ளுமாறும் இந்தப் பரிவர்த்தனைகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதை வர்த்த வங்கிகள் உறுதிப்படுத்தவேண்டுமெனவும் மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை வர்த்தக சமூகம், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் வங்கி வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு வெளியே வழங்கப்படும் ‘பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான’ வெளிநாட்டு நாணய நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாக உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென்றும் 180 நாட்களுக்குள் கட்டாயமாக உள்ளூர் ரூபாவுக்கு மாற்றப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகள் , கடன்கள், வர்த்தகரீதியான பயணங்கள் மற்றும் வேறு சிலவற்றுக்கு விதிவிலக்களிக்க அனுமதிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் தொழில்சார்நிபுணத்துவம் , தொழில் அல்லது வர்த்தக சேவைகளை வழங்குபவர்களும் இந்த உத்தரவில் அடங்குகின்றனர் . அனைத்து அல்லது பெரும்பாலான வெளிநாட்டு வருமானங்களையும் ரூபாயாக மாற்றுவதற்கு உத்தரவிடுவதன் மூலம் அந்நிய செலாவணித் துறையை அதிகளவுக்கு இலங்கை கட்டுப்படுத்துகின்றமையானது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பில்லியன் கணக்கான டொலர்களையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நிதிகளை கொண்டுவருவதிலும் பார்க்க வெளிநாடுகளிலேயே உள்நாட்டு வர்த்தகங்களும் தனியாட்களும் அதனை வைத்திருந்து பாதிப்புகள் இல்லாமல் தமது வெளிநாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விடயமென்று அவர்கள் இதனை கூறுகின்றனர். வணிக வங்கிகள் அந்நியச் செலாவணியின்றி வரண்டு காணப்படுவதால் , உள்ளூர் வர்த்தகங்களை ஊக்குவிப்பதற்கான சிறந்ததொரு உதாரணம் இது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது, நாடு நீண்டகாலமாக எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலையை மேலும் மோசமாக்கும்.

Read:  உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி

நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து அந்நியச் செலாவணி வருவாயையும் ரூபாயாக மாற்றவேண்டுமென்ற மத்திய வங்கியின் உத்தரவானது ,வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் ‘வர்த்தகத்திற்கு நட்பு றவான நாடு‘ என்ற உலகளாவிய தரவரிசையையும் பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் முதல் தடவையாக ,சேவைகளுக்கும் பிரயோகிக்கப்படக்கூடிய மத்திய வங்கியின் சமீபத்திய ஒழுங்குவிதிகள் ஐ . ரி நி றுவனங்கள், வணிகச் செயலாக்க அவுட்சோர்சிங் மற்றும் அறிவுச் செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனங்களின் அந்நியச் செலாவணி வருவாய்களில்தாக்கத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது, அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளை விட, கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வமற்ற பரிவர்த்தனை சந்தையில் சிறந்த விகிதத்தில் பெற்றுக் கொள்ளும் விதத்தில் உத்தியோகபூர்வமற்ற வழிகள் மூலம் (‘ஹவாலா’ என அறியப்படும்) தங்கள் பணத்தை அனுப்புவதற்கு அதிகளவில் இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தூண்டக்கூடும்.

அமெரிக்க டொலரின் பெறுமதி சரியாக மதிப்பிடப்படவில்லை என்பதும் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதும் மிகப்பாரிய பிரச்சனை. இது சில ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்சார் நிபுணத்துவ சேவை வழங்குபவர்கள் தங்கள் வருவாயை திரும்பக் கொண்டுவருவதில் பொதுவான தயக்கத் தை ஏற்படுத்துவதுடன் ஏற்றுமதி வருவாயில் பெரும் தாக்கத்தையும் தோற்றுவிக்கிறது , என்று ஒரு பெரிய ஏற்றுமதி தொழில்துறையை சேர்ந்த நிதி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார் . மத்திய வங்கியானால் பல மாதங்களாக டொலரின் பெறுமதி ரூபா . 202, 203 ஆக செயற்கையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்துவரும் நிலையில் , ஒரு பணப் பரிமாற்ற வியாபாரியிடம் சனிக்கிழமை வாங்கும் விகிதத்தைக் கேட்டபோது, டொலரின் பெறுமதி 235 ரூபாவென அவர் கூறியுள்ளார். சந்தையில் உள்ள கடுமையான தட்டுப்பாட்டைப் பிரதி பலிக்கும் வகையில், தங்களிடம் விற்பதற்கு எந்தவொரு டொலர்களும் இல்லை என்று அந்த வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

Read:  இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு 28ல் பயணம்

ஆடைகள் மற்றும் ஏற்றுமதி சேவைத்துறை உட்பட பல்வேறு தொழில்துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், சமீபத்திய விதிமுறைகள் குறித்து அதிகளவுக்கு தெளிவற்ற தன்மை உள்ளதெனவும் குழப்பமான விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக வங்கிகளின் பதிலுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மத்தியவங்கியின் சமீபத்திய முடிவுகள் சந்தையில் அதிகளவுக்கு ஒழுங்கு விதிகளைகொண்ட ஒரு நாடென்ற பிரதிமையை இலங்கைக்கு கொடுக்கின்றது. புதிய விதிகள் அந்நியச் செலாவணியை சம்பாதிப்பவர்கள் பணத்தை அனுப்புவதை ஊக்கப்படுத்தாமல், ஊக்குவிப்பை இல்லாமல் செய்கிறது. அவர்களின் வருவாய் குறித்த எந்தவொரு பதிவும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.‘இத்தகையதொரு விடயம் சுதந்திரமான சந்தையில் நடக்கக்கூடாது என்பதுடன் இது வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே கேள்விகளை எழுப்பும்,’ என்று ஆடை சாராத ஏற்றுமதி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ‘இந்த விதிமுறைகளை கொண்டு வருவதற்கு பதிலாக எ மது வெளி நாட்டு கடனை கட்டமைக்க வேண்டும். இவை முதலீட்டாளர்களுக்கு தவறான சமிக்ஞைகள்.’என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

2021செப்டம்பர் 1 இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.7 பில்லியன் அமெரிக்கடொ லர்களாக இருந்தது , இரண்டு அல்லது மூன்று மாத இறக்குமதிக்கே போதுமானதாக இல்லை

நாட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து ஏற்றுமதி வருவாய்களும் ரூபாயாக மாற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் கடந்த சில மாதங்களாக மத்திய வங்கியானது ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இப்போது முதல் முறையாக, சேவைத்துறையும் சேர்க்கப்பட்டுள்ளது

ஏற்றுமதியாளர்கள் நாணய மாற்று வீதத்தை எதிர்பார்த்து வெளிநாடுகளில் தங்களுடைய டொலர்களை வைத்திருப்பதாகவும் அவற்றை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரவில்லை எனவும் மத்தியவங்கி தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பல்வேறு தொழிற்துறை அமைப்புகளின் மூலம் பாரிய அளவிலான ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read:  எரிபொருள் நெருக்கடிக்கு, பிரதமர் ரணில் வளைகுடா நாடுகளை இன்னும் நாடாமல் இருப்பது ஏன்?

‘பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் தங்கள் வருவாயை திரும்பக் கொண்டு வருகிறார்கள், ஏனெனில் நாங்கள் சம்பளம் மற்றும் பிற செலவுகளைச் எதிர்கொள்ளவேண்டும். அத்துடன் அனைத்து ஏற்றுமதியாளர்களும் வெளிநாட்டில் பணத்தை மறைத்து வைத்திருப்பதாக முத்திரை குத்துவது நியாயமற்றது’ என்று மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனமொன்றின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் புதிய விதிகளின்படி, ஏற்றுமதியாளர்கள் பிரத்யேகக் கணக்கை (புதியதைத் திறப்பது அல்லது ஏற்கனவே உள்ள கணக்கைப் பயன்படுத்துவது) வைத்திருக்க வேண்டும், அங்கு அனைத்து வரு வாய்களும் அனுப்பப்படும், இதனால் இந்தக் கணக்கு மத்திய வங்கி சார்பாக செயற் படும் வங்கிகளால் கண்காணிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

‘இது, ஒரு நிறுவனத்திற்கான அந்நிய செலாவணி வருவாயை மத்திய வங்கி சரியான முறையில் அறிந்துகொள்ளும் , ஆனால் இது ஒரு புதிய விதி அல்ல, ஏனெனில் பெரும்பாலான முதலீட்டுசபை நிறுவனங்கள் ஏற்றுமதி அளவுகள் மற்றும் வருவாய்கள் குறித்த காலாண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்,’ என்று அவர் கூறியிருக்கிறார் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை குறிப் பிட்டுள்ளது.