சவுதிக்கு எதிரான விமர்சனம்

சவூதி அரேபியா, ‘நவீனமயப்படுத்தல்’ என்று சொல்லப்படும் திட்டத்தின் கீழ் கடந்த ஓக்டோபர் மாதத்தில் ரியாத் நகரில் மேலைத்தேய பாணியிலான இசை நிகழ்வொன்றை நடத்தியுள்ளது. அங்கு ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய வரம்புகள் முற்றாக மீறப்பட்டுள்என.

இந்த விடயம் சவூதி அரேபியா உட்பட ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களின் பெரும் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது. சவூதி அரேபியாவில் இவ்வாறான நிகழ் வொன்று நடத்தப்பட்டது இது முதற் தடவை அல்ல. கடந்த பெப்ரவரி மாதம் ஜித்தா நகரில் முதற்தடவையாக பெண்கள் பங் கேற்ற ‘பேஷன் ஷோ’ நிகழ்வு மூன்று தினங்களாக இடம்பெற்றது. இங்கு சுமார் 160 உள்ளூர் மற்றும் சர்வதேச கம்பனிகள் அவற்றின் அதி நவீன கண்டு பிடிப்புக்களையும் கருவிகளையும் காட்சிப்படுத்தின.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புனித மதீனா நகரிலும் இது போன்றதொரு நிகழ்வு இடம்பெற்றது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறும் இப்புனித நகரம் வருடம் முழுவதும் உலக முஸ்லிம் யாத்திரிகர்களால் நிரம்பி வழியுமொரு இடமாகும். பல நூற்றாண்டுகளாக புனிதத்துக்கும். கௌரவத்துக்கும். மரியாதைக்கும் உரிய நகராக கருதப்பட்டு வருகின்றது.

மதீனா நகரில் இடம்பெற்ற இந்த பேஷன் ஷோ நிகழ்வு நிர்க்கதி நிலையில் உள்ள உரிமைக் குரல் அற்ற சவூதி அரேபிய மக்களினதும் உலக முஸ்லிம்களினதும் கோபத்தை தூண்டி விட்டுள்ளது. டுவிட்டர் பாவனையாளர்கள் தமது கணக்குகள் ஊடாக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான ஒரு நிகழ்வு மதீனா நகருக்கு பொருத்தமற்றது என்பதே அவர்களின் ஏகோ பித்த முடிவாகும்.

அஹமட் என்பவர் தனது பதிவில் “புனித நகரங்களின் புனிதத்துவத்தை சீர்குலைப்பதே இந்த மக்களின் நோக்கமாகத் தெரிகின்றது. இறை தூதரின் நகரத்தை கூட இவர்கள் தீமையில் இருந்து விட்டு வைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியா இஸ்லாத்தின் பூமி ஆனால் முதலாம் உலக மகா யுத்தத்தின் பின் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் சியோனிஸ பங்காளிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சவூதி பழங்குடி நாடோடிக் குடும்பம் அதனை ஆட்சி செய்கின்றது. இப்னு சவூத் குடும்பம் ரியாத்தில் வாழ்ந்த ஒரு பழங்குடி குடும்பம். இரண்டு முக்கிய புனித நகரங்களான மக்காவும் மதீனாவும் ஷரீப் ஹூஸைன் என்பவரால் ஆழப்பட்டு வந்தது. இவர் பலஸ்தீன பூமியில் இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்படுவதை வன்மையாக எதிர்த்தவர்.

Read:  காதி நீதிமன்றங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன? காதிகளும் ஒரு காரணமா?

இதனால் பிரித்தானிய ஏகாதிபத்தியவாத சக்தி இப்னு சவூத்துக்கு நிதி மற்றும் ஆயு தங்களை கொடுத்து ஷரீப் ஹூஸைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது. அவரைப் பதவியில் இருந்து துரத்தி மக்கா மற்றும் மதீனா என்பவற்றையும் தமது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவர பிரித்தானிய அரசு இப்னு சவூத் குடும்பத்துக்கு தேவையான உதவிகளையும் ஆதரவையும் அளித்தது.

அன்று முதல் சவூதி அரேபிய ஆளும் தரப்பு இரட்டை வேடம் போட்டு வருகின் றது. இஸ்லாமிய உலகுக்கு தன்னை இஸ் லாத்தினதும் இஸ்லாத்தின் பிரதான புனிதப் பிரதேசங்களான மக்கா மற்றும் மதீனாவி னதும் காவலனாகக் காட்டிக் கொண்டு மறுபு றத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தீய வடிவமைப்புக்களை அமுல் செய்து வரும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் யூத நாசகார சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருமுறை அமெரிக் காவின் ஆதரவின்றி இரண்டு வாரங்களுக்கு மேல் சவூதி அரேபியாவால் தாக்குப் பிடிக்க முடியாது என்று கூறியமை இங்கு வெட்கத் துடன் நினைவு கூறப்பட வேண்டிய விடய மாகும். உலகம் முழுவதும் மில்லியன் கணக் கான முஸ்லிம்களைக் கொன்று குவித்துக் கொண்டு முஸ்லிம் நாடுகளையும் சுடுகா டுகளாக மாற்றி வந்ததொரு பின்னணியில் தான் ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.

தற்போது வரையில் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்க .ஐரோப் பிய மற்றும் நாசகார யூத சக்திகளால் அரங் கேற்றப்பட்டு வரும் எல்லா தீமைகளிலும் ஒரு முக்கிய பங்காளியாக சவூதி அரேபியா இருந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும். குவைத், ஈராக், லிபியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளை நசுக்கி இந்தப் பிராந் தியத்தில் இஸ்ரேலின் ஆதிக்கத்தையும் பாது காப்பையும் ஓங்கச் செய்வதற்காக மேற் கொள்ளப்பட்ட எல்லா நெருக்கடிகளிலும் சவூதி அரேபியா முக்கிய பங்கேற்றுள்ளது.

Read:  பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

அமெரிக்கா தான் குவைத் நெருக்க டியை தோற்றுவித்து அதற்கு தூபமிட்டது. குவைத்தில் இருந்து ஈராக் படைகளை வெளியேற்றுவதற்கான இராணுவத் தாக்குத லையும் அது நடத்தியது. இந்த ஆக்கிரமிப்பு அழிவு என்பனவற்றுக்கான செலவை சவூதி அரேபியா மற்றும் வளைகுடா ஷேக்மாரின் தலையில் கட்டியது. மில்லியன் கணக்கான ஈராக் மக்களைக் கொன்று குவித்த ஈராக் மீதான தார்மிக விழுமியங்களுக்கு அப்பாற் பட்ட சட்ட விரோதமான படையெடுப்புக் காக சவூதி அரேபியா 70மில்லியன் டொலர் களை வழங்கியுள்ளது. அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய தீய சக்திகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டங்களை அமுல் செய்ய சவூதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பழம் பெரும் முஸ்லிம் நாடான யேமன் மீதும் தாக்குதல் நடத்தியது. நடத்திக் கொண்டு இருக்கின்றது.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் இஸ்ரேலும் இணைந்து சவூதியையும் ஐக்கிய அரபு அமீர கத்தையும் குவைத்தையும் எகிப்தில் மலர்ந்த இஸ்லாத்தை அழிப்பதற்குப் பயன்படுத்தின.

இந்த நாசகார கூட்டணியின் சதித்திட் டத்தை அரங்கேற்ற சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் இணைந்து செயல் பட்டு எகிப்தில் முன்னர் ஒரு போதும் இல்லாத வகையில் செயற்கையான உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்ப டுத்தின. இதன் மூலம் கலாநிதி மொர்ஷியை பதவி கவிழ்க்க இந்த நாடுகள் சுமார் 11 பில் லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட் டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொர்ஷியை பதவியில் இருந்து வீழ்த்திய பின் தமக்கு வேண்டிய கைக் கூலியான இராணுவ சர்வாதிகாரி அப்துல் பத்தாஹ் சிசியை அரியணையில் அமர்த்தினர். அவர் இன்றும் தனது அமெரிக்க. ஐரோப்பிய
மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களுக்கு ஆதா வாக அவர்களின் திட்டங்களை அமுல் செய் வதில் அளப்பரிய பங்காற்றி வருகின்றார்.

Read:  வாரிசு அரசியலும், குடும்ப ஆட்சியும், ஜனநாயகமும்.

சவூதி மற்றும் வளைகுடா ஷேக்மார்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கிட்டத்தட்ட கைவிட்டுள்ளனர். பலஸ்தீனம், காஷ்மீர், மியன்மாரின் ரோஹிங்யா, சீனாவின் உய்குர் முஸ்லிம்களைப் பற்றியோ அவர்கள் அனுபவிக்கும் அல்லல்கள் பற்றியோ இவர் களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கூட அவர்கள் கைவிட்டு விட்டனர்.

பலஸ்தீன மக்கள் மீது அன்றாடம் இழைக் கப்படும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம் சவூதி அரேபியா தற்போது சியோனிஸத்துக்கு மிகவும் ஆதரவாக உள்ளது. அதனோடு கிட்டத்தட்ட ஐக்கியமாகி விட்டது. இஸ்ரேலுடன் உறவுகளை மேம்படுத்தி உள்ள சவூதி அரேபியா அதனோடு உத்தியோகப்பூர்வ உறவுகளை இன்னமும் பேணவில்லை எனக் கூறி முஸ்லிம்களை ஏமாற்றி வருகின்றது. உலக

சவூதி அரசின் இந்த இஸ்லாமிய எதிர் கூட்டணியுடனான உறவுகளைக் கண்டிக்கும் அந்த நாட்டின் புத்தி ஜீவிகன் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறையில் வாடி வருகின்றனர். சிலர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டும் உள்ளனர். அங்கு சமயத்துக்கான சுதந்திரம் எதுவும் இல்லை.

லத்தீப் பாரூக் (வீரகேசரி 17-11-21)