பரீட்சைகள் காரணமாக வழங்கப்படவுள்ள விடுமுறைகள் தொடர்பான விபரங்கள் இதோ…!

2020 கல்வி ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை  ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு, உயர் தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, 2020 ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில்  மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ளன.

2020 ஆண்டிற்கான முன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 திகதி வரை வழங்கப்படவுள்ளன.

இதேவேளை 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 ஆண்டிற்கான சாதாரணதர பரீட்சை, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சகல பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளன.

இதேவேளை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை கல்வி விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சையின் பின்னர் மீண்டும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

SOURCEHiru News