சப்புகஸ்கந்தவில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

சப்புகஸ்கந்தவில் பயணப்பையொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்குளியவைச் சேர்ந்த தம்பதியனரே (36 வயதான ஆண், பெண்) இவ்வாறு களனி வலய குற்ற விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பெண்ணின் சடலத்தை கொண்டு சென்றதாகக் கருதப்படும் பாரவூர்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

நேற்றுமுன்தினம் (4)  சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அண்மித்த குப்பை கிடங்கு ஒன்றில் கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த 2 பிள்ளைகளின் தாயான, 44 வயதுடைய மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ்  என்பவரென அடையாளம் காணப்பட்டிருந்தார்.

ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் சடலத்தை நேற்று பார்வையிட்டதன் பின்னர் குறித்த பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிரு செய்திகள் hirunews.lk

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter