வக்ப் சபை – இப்த்தார், தராவீஹ், கஞ்சி வேண்டாம்

இலங்கை வக்ப் சபையின் றமழான் 2020 க்கான பணிப்புரைகள்

இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் றமழான் மாதம் முழுவதற்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.

1. அதற்கேற்ப, இமாம் / முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமக்களுக்காகவும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாம் என்றும்,

2. ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும்,

3. இப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும்,

4. பள்ளிவாயிலின் உள்ளோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும்,

5. பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கும் இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், கொவிட்- 19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும்  இலங்கை வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிருவாகிகளையும் பணிக்கின்றது.

அனைவருக்கும் பயன்மிகு றமழானாக இந்த றமழான் அமைய வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்துக்கின்றாம்.

றமழான் முபாரக்!

ஏ.பி.எம். அஷ்ரப்வக்ப் சபைப் பணிப்பாளர் மற்றும் முஸ்லிம சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter